41 மாணவிக்கு பாலியல் தொல்லை.. கல்லூரி பேராசிரியர் !

0

மதுரை அரசு மருத்துவ கல்லூரி மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது ஆசிரியர் உள்பட 41 மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். 

41 மாணவிக்கு பாலியல் தொல்லை.. கல்லூரி பேராசிரியர் !
மதுரை அரசு மருத்துவ கல்லூரி மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது ஆசிரியர் உள்பட 41 மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது உறுதியானதை அடுத்து 

மதுரை அரசு மருத்துவ கல்லூரி மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சையது தாகிர் உசேன் கூறுகையில்;- மருத்துவத் துறையில் நடைபெறும் முறைகேடு களையும், 

கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராகவும் புகார் அளித்ததால், என்னைப் பழிவாங்க, முறையான விசாரணை நடத்தாமல் இப்படி நடவடிக்கை எடுத்திருக்கின்றனர் என்று குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த குற்றச்சாட்டை  மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலு திட்ட வட்டமாக மறுத்துள்ளார். 

துணைப் பேராசிரியர் செய்யது தாகிர் உசைன், பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக கடந்த 6-ம் தேதி மயக்கவியல் துறை மாணவிகள் புகார் கொடுத்தார்கள். 

அதைத் தொடர்ந்து 8-ம் தேதி அவர்களிடமிருந்து எழுத்து பூர்வமான புகார் பெறப்பட்டது. 

அயோடின் சத்தும் அதன் குறைபாட்டால் ஏற்படும் நோய்களும் !

ஆபாசமாக பேசுவது, தவறான எண்ணத்தில் தகாத இடங்களில் தொடுதல் என தொடர்ந்து அத்துமீறி பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவிகள் அழுதபடி புகார் அளித்தனர். 

இந்த பாலியல் புகார் குறித்து விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது. இதில் 41 மாணவிகள் பங்கேற்று பதிலளித்தனர். 

இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படை யிலேயே பேராசிரியர் சையது தாகிர் உசேன் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார் என டீன் ரத்தினவேலு கூறியுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)