நம் கழுத்துப் பகுதியில் நார்த் தசைகளுக்கு அடியில் தைராய்டு சுரப்பி உள்ளது. அது தான் உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் முக்கிய காரணி.
தைராய்டு சுரப்பில் சுரக்கும் தைராய்டு ஹார்மோன்தான் வளர்ச்சியைத் தூண்டுகிறது. தைராய்டு ஹார்மோனின் அடிப்படைப் பொருள் அயொடின் (Iodine). 15 -20 மி.கி அயோடின் தைராய்டு சுரப்பியிலும், மீதி 65 % உடலின் அனைத்து திசுக்களிலும் உள்ளன.

உடலின் தற்காப்புத் திறன் உருவாக மிகவும் அயொடின் உதவுகிறது. அயொடின் பல தளங்களி லிருந்து கிடைத்தாலும் கூட, எளிதில் கிடைக்குமிடம்  உப்பு மட்டுமே. 

அயொடின் ரொட்டி, கடல் உணவு மற்றும் கடல் தாவரங்களின் திசுவுடன் பிரிக்க முடியாத இணைப்பாக உள்ளது.

மருத்துவ குணங்கள் மலிந்த அயொடின்..!

அயொடின் மோசமான நச்சு குணம் உடையது தான். ஆனால் அதன் ஆல்கஹாலுடன் சேர்த்து டிங்க்சர் அயொடின் என்ற மஞ்சள் -பழுப்பு நிற திரவமான கிருமிநாசினி தயாரிக்கப் படுகிறது.

 உலகம் முழுவதும் இது பரவலாகப் பயன்படுத்தவும் படுகிறது. இன்றும் கூட, பெரும்பாலும் பொதுவான நீர் சுத்திகரிக்க அயொடின் அடிப்படையிலான மாத்திரைகளே பயன் படுகின்றன.

அயொடின் கண்டு பிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே, இது மிகவும் முன்னேறிய வேதி தொழில் நுட்பத்தில் பரவலாகப் பயன்படுகிறது.

அயொடின் பாதிப்பால்...!

உடலில் அயொடின் குறைபாடு இருந்தால், முன் கழுத்துக் கழலை (goiter)என்ற நோய் வரும், குழந்தை களுக்கு மூளை வளர்ச்சி இருக்காது.

உலக நலன் கருதும் நிபுணர்கள், அயொடின் போதாமை என்பது தடுக்கக் கூடியது தான்.
ஆனால், அயொடின் போதாமையால், உலகம் முழுவதும் சுமார் 1,500,000,000 மக்கள் மூளை பாதிப்பு அடையும் நிலையில் உள்ளனர் என்று தெரிவிக் கின்றனர்.

அதே போல உலகம் முழுவதும் 50,000,000 குழந்தைகள் அயொடின் பற்றாக் குறையால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர்.

கருவுற்ற பெண்களுக்கு அயொடின் போத வில்லை என்றால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி இருக்காது.

கருச்சிதைவு ஏற்படும். மிகக் குறைவான அயொடின் பற்றாக்குறை கூட, குழந்தைகளின் அறிவுத் திறனைப் பாதிக்கும்; மூளை வளர்ச்சியையும், கற்றல் திறனையும் அழிக்கிறது..

உங்கள் வளர்ச்சியில்.. அயொடின்!

வளர்ச்சி தான் உயிரோடு இருப்பதை நினைவூட்டும் விஷயம். அந்த வளர்ச்சிக்கு தூண்டுகோல் எது தெரியுமா?

அயோடின் தான் உயிருக்கு உயிரான முக்கிய கனிமம். ஆனால் பூமியில் கிடைக்கும் தனிமங்களில் மிகவும் அரிதானதும், அதிக கனமானதும் இதுதான்.

ஆனால் இது பொதுவாக கடல் உணவிலும் சில காய்கறிகளும் உள்ளது. இருப்பினும் அயொடின் உயிரிகளின் உயிர் வாழ்தலுக்கும், உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கும் மிக மிக இன்றி யமையாதது.

அது மட்டுமல்ல. இது உடல்நிலை வெப்பம் தக்க வைக்கவும், முடி, தோல், பல் மற்றும் நகங்களை நல்ல நிலையில் பாதுகாக்கவும் உதவுகிறது.

அயொடினின் குணங்கள்.!

அயொடின் ஒரு கலப்பில்லாத அலோகத் (non-metallic) த்னிமம். இது கருஞ்சாம்பல்/ கரு நீலம் கலந்த பளபளப்பான வனப்புமிகு அலோகத் தனிமம். இது ஹாலோஜன் (halogen) குடும்பத்தைச் சேர்ந்தது.

இது பல உலோகங்களுடன் இணைந்து காணப்படுகிறது. இது இயல்பாகவே காற்று, நீர் மற்றும் நிலத்தில் காணப்படுகிறது.
அயொடின் நச்சுத்தன்மை வாய்ந்தது. இதன் வாயு கண்ணையும் நுரையீரலையும் எரிச்சலடையச் செய்யும். ஆனால் முக்கியமாக அதிக அளவு அயொடின் பெருங்கடலில்தான் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உத்தேசமாக, 400.000 டன்கள் அயொடின் அயோடைடு, ஹைடிரோ குளோரிக் அமிலம் மற்றும் மீத்தைல் அயொடைடு என்று கடல் உயிரிகள் மூலம் உற்பத்தியாகி கடலில் பரவிக் கிடக்கிறது.