அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 1,200 ஆண்டு பழமையான மம்மி !

0

தென் அமெரிக்க நாடான பெருவில் (Peru) 1,200 ஆண்டுகள் பழமையான மம்மி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தலைநகர் லிமா அருகே காஜாமார் கிலாவில் முதல் மம்மி கிடைத்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இது கண்டறியப் பட்டுள்ளது. 

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 1,200 ஆண்டு பழமையான மம்மி !
அந்த மம்மியில் சில முடிகளும் தோலும் இன்னும் அப்படியே இருக்கின்றன. இன்கா நாகரிக காலத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த மம்மி ஒன்றை பெருவில் உள்ள அகழ்வாராய்ச்சி யாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

தலைநகர் லிமாவின் கிழக்கே உள்ள கஹமர்கீலா எனுமிடத்தில் இது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 

இறுதிச் சடங்கு நடத்தப் பயன்படுத்தப் பட்ட ஓரிடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ததில் பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கால மனித உடல் கிடைத்துள்ளது.

வெறும் வயித்துல இதெல்லாம் சாப்பிடால் கஷ்டப்படுவீங்க !

இன்கா நாகரிகத்தை ஆட்சி செய்த இன்கா பேரரசு 12ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இந்த மம்மி அதற்கும் முந்தையது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இந்த மம்மி மண்ணுக்குள் புதைக்கப்பட்டு 800 ஆண்டுகள் முதல் 1200 ஆண்டுகள் வரை இருக்கலாம் என்று அகழ்வாராய்ச்சி யாளர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 1,200 ஆண்டு பழமையான மம்மி !

புதைக்கப்பட்ட இந்த உடலுடன் சேர்த்து இறந்த நபர் விண்ணுலக வாழ்வில் பயன்படுத்து வதற்கான படையல்களாக பல பொருட்களும், உணவுப் பொருட்களும் புதைக்கப்பட்டு இருந்தன என்று அகழ்வாராய்ச்சி யாளர்கள் கூறுகிறார்கள். 

இந்த மம்மியுடன் சேர்த்து அத்துடன் புதைக்கப் பட்டிருந்த பொருட்களையும் அகழ்வாராய்ச்சி யாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர்.

பிரைட் சில்லி இட்லி செய்வது எப்படி?

இந்த மம்மியின் காலத்தை இன்னும் துல்லியமாகக் கண்டறிவதற்காக ரேடியோ கார்பன் டேட்டிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது என்று அகழ்வாராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !