72 மணி நேரத்திற்கு பின் பெண் உயிருடன் மீட்பு... துருக்கி நிலநடுக்கம் !

0
துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள இஸ்கேண்டிருன் நகரத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர், அங்கே நிலநடுக்கத்தால் 
72 மணி நேரத்திற்கு பின் பெண் உயிருடன் மீட்பு... துருக்கி நிலநடுக்கம் !
சரிந்து கிடந்த அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றின் இடிபாடுகளுக்கு அடியில் ஒருவர் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகளை உணர்ந்தனர்.
அம்மாடியோ.. புதிய விதி வந்த பின் வசூலான அபராத தொகை இவ்வளவா - கண்ண கட்டுதே !
இதையடுத்து, அங்கு சுற்றிலும் குழுமியிருந்த மக்களை அமைதி காக்குமாறு அறிவுறுத்திய அவர்கள், கிரேன் போன்ற தங்களது இயந்திரங்களின் இயக்கத்தையும் நிறுத்தினர்.
 
சில நிமிட அமைதிக்குப் பின்னர், அங்கு பெண் ஒருவர் உயிருடன் இருப்பதை கண்ட மீட்புக் குழுவினர், ஆம்புலன்சை வரவழைத்தனர்.
 
நிலநடுக்கம் தாக்கிய 3 நாட்களுக்குப் பிறகு பெண் உயிருடன் மீட்கப் பட்டதைக் கண்டதும் சுற்றிலும் கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 
அதே கட்டடத்தில் வசித்த தனது உறவினர்களின் கதி என்னவென்று இன்னும் தெரியாத ஒரு பெண், அங்கிருந்த காரின் முன்பகுதியில் முகம் புதைத்து அழுததைக் காண முடிந்தது.
 
சுமார் 50 வயதான அந்த பெண், தனியாக வசித்து வந்தார். அவரை மீட்புக் குழுவினர் பத்திரமாக தூக்கிச் சென்றதை ஆம்புலன்ஸ் அருகே நின்றிருந்த அவரது மகன் பார்த்துக் கொண்டிருந்தார் என்று உள்ளூர் மக்கள் கூறினர்.
துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவுக்கிடையே, இந்த பெண் உயிருடன் மீட்கப்பட்ட காட்சி நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தரக் கூடிய மிகவும் அரிதான ஒன்றாக அமைந்தது.
இடிபாடுகளுக்கு நடுவே வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதை கண்டறியும் பணியை மீட்புப் பணியாளர்கள் வெறும் கைகளாலேயே 

மீண்டும் தொடங்க, பணி மெதுவாக நடந்ததால் அங்கே சுற்றிலும் கூடியிருந்தவர்களின் மனநிலை மீண்டும் அமைதியற்றதாக மாறிப் போனது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)