ஹைதராபாத்தில் உள்ள ஒரு ப்யூட்டி பார்லருக்கு 50 வயது பெண் ஒருவர் சிகை அலங்காரம் மேற்கொள்ள சென்றிருக்கிறார். 

ப்யூட்டி பார்லர் சென்ற பெண்ணுக்கு பக்கவாதம் !

அதற்கு முன்னதாக அவரது தலைமுடியை ஷாம்பூ கொண்டு அலசுவதற்கு பரிந்துரைக்கப் பட்டது. 

பார்லர் ஊழியர் அந்த பெண்ணின் கழுத்தை திருப்பி முடியை அலசியபோது திடீரென அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விக்கல் நிறுத்த செய்ய வேண்டியது என்ன?

டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு, மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் முக்கியமான நரம்பை விரல்களால் 

அதிக விசை கொண்டு அழுத்தியதால் ரத்த ஓட்டம் நின்று பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

நரம்பியல் நிபுணர் டாக்டர் பிரவீன் குமார் கூறுகையில், பார்லர்கள் மற்றும் சலூன்களில் தலை மற்றும் கழுத்து மசாஜ் செய்கிறோம் என்ற பெயரில் 

கழுத்தை இங்கும் அங்குமாக திருப்பி சொடக்கு போடுகிறோம் என்று நரம்புகள் மற்றும் எலும்புகளை காயப்படுத்தி விடுகின்றனர். 

சில சமயங்களில் பக்கவாதம் வரை பாதிப்பு அதிகமாகி விடுகிறது. இந்த பாதிப்பிற்கு முன்னதாக தலைசுற்றல், படபடப்பு, வாந்தி அறிகுறிகள் தோன்றும். 

மூலநோய் வெளிக்காட்டும் அறிகுறிகள் !

எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

இது போன்ற பாதிப்பு ஏற்கனவே முதன்முதலாக 1993ல் அமெரிக்காவில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போதே இந்த பாதிப்புக்கு “ப்யூட்டி பார்லர் ஸ்ட்ரோக் ஸின்ட்ரோம் என பெயரிடப்பட்டுள்ளது.