விக்கல் நிறுத்த செய்ய வேண்டியது என்ன?

ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதைத் தானாகக் கரைய விட்டால்… ந‌மது வயிற்றையும் நெஞ்சையும் டயபரம் (Diaphragm) என்ற பிரிமென்தகடு பிரிக்கிறது. 
விக்கல் நிறுத்த செய்ய வேண்டியது என்ன?
இதன் தசைநார்கள் திடீரெனவும் தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயற்படும் போதே விக்கல் ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் விக்க‍ல் ப‌லருக்கு உடனடியாக நிற்கும். 

சிலருக்கு நீண்ட நேரம் ஏற்பட்டு தொல்லைக் கொடுக்கும். இப்ப‍டி நீண்ட நேரம் ஏற்படும் விக்கலையோ அல்ல‍து அடிக்கடி ஏற்புடம் விக்கலை உடனடியாக நிறுத்த தண்ணீர் குடிப்பார்கள். 
அப்போதும் இந்த விக்க‍ல் நிற்காமல் விக்க‍ல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கு மேயானால் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து

அதைத் தானாகக் கரைய விட்டு அதன் சாற்றினை எச்சிலோடு சேர்த்து மெல்ல‍ விழுங்கி னால், உடனே விக்கல் நின்று, சுகம் காண் பார்கள்.
Tags: