நம்மில் நிறைய பேர் கார் வைத்து இருக்கிறோம். நிறைய பேர் தினமும் காரில் சென்று வருகிறோம். நிறைய பேர் தொலைதூர பயணமும் காரில் மேற்கொள்கிறோம்.
கார் வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாதது எது?

நிறைய தூரம் நிற்காமலும் வண்டி ஒட்டி செல்கிறோம். சிலர் இன்னும் மோசம் கார் வாங்க வேண்டியது கார் மக்கும் வரை அதை ஓட்டாமல் பூஜை போட்டு வைத்து இருப்பார்கள்.

பெட்ரோல் / டீசல் காலி ஆகும் வரை வண்டியை ஓட்டுவது :

நம்மில் நிறைய பேர் செய்யும் தவறு இது. இப்படி செய்தால் கண்டிப்பாக என்ஜின் உள் இருக்கும் கம்போஸ்ட் சிஸ்டம் பெரிய பிரச்சனைகளை சந்திக்கும். 
 
மேலும் விளைவு பில் அருமையாக வைக்கும். உங்கள் வண்டியின் கம்போஸ்ட் சிஸ்டத்தை மட்டும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
Service விடமால் இருப்பது : 
 கார் வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாதது எது?
கார் என்பது மனிதரை போல் தான் அதற்கும் சில கோளாறுகள் வரும். இதனால் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கார் செக் செய்வது நல்லது.
 
ஏன் என்றால் கண்டிப்பாக நமக்கும் தெரியாத பிரச்சனை காரில் வரும். பெரிய வினை ஆகும் முன் சரி செய்வது அல்லது செக் செய்வது நல்லது.
 
காரில் தம் அடிப்பது :

தயவு செய்து இதை தவிர்க்கவும் ஏன் என்றால் இது பல விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக நீங்கள் சுவாசிக்கும் காற்று கார் உள்ளே தான் இருக்கும். 
 
மற்றவர்களுக்கு இது பிரச்சனை தரும். மேலும் குலிங் சிஸ்டம் உள்ளே இது சென்றால் மிகவும் ஆபத்து.

துரு பிடிக்க ஆரமித்தால் துரு தானே என்று விட்டு விடாதீர்கள் :

ஒரு பழைய மாருதி ஆம்னி வண்டியில் ஒரு முறை ஸ்டேரிங் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்ன வென்று பார்த்தால் அதில் துரு தான் பிரச்சனை. 
 
எப்படியோ தண்ணீர் நுழைந்து ஸ்டேரிங் சிஸ்டம் உள்ளே துரு. இது நல்ல வேளை சேவை நிலையத்தில் கண்டறியப்பட்டது இல்லை என்றால் அவளவு தான்.
 
Burnout செய்வது (அதாவது டயர் எரியும் வரை அதை ஓட விடுவது) : 
 கார் வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாதது எது?
இதை இளைஞர்கள் அதிகம் விரும்பினாலும் இது மிகவும் தவறான செயல் ஏன் என்றால் டயர் புகை மற்றும் டயர் விலை மற்றும் வண்டியின் செயல்பாடு இதனால் பாதிக்கப்படும். 
 
மேலும் வண்டியை டயர் மாற்றாமல் அப்படியே ஓடுவது மிகுந்த ஆபத்தை தரும்.

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பற்றி அறிந்திராத சுவாரஸ்யங்கள் !

வண்டியை பல நாள் கழித்து எடுத்து அப்படியே ஓட்டுவது :

இதை மட்டும் செய்யாதீர்கள் முதலில் ஒரு மணி நேரம் ஆவது கதவுகளை திறந்து வைத்து கழுவுவது அல்லது ஏதாவது வென்டிலேட் செய்யுங்கள். 
 
பின்பு என்ஜின் சூடு செய்து பின்பு ஏதாவது சத்தம் வருகிறதா என்று பார்த்து வண்டியை எடுங்கள். முக்கியமாக குளிர் சாதனத்தை செக் செய்யுங்கள். ஏன் என்றால் விஷவாயு தாக்கி இறந்த கதைகள் ஆயிரம். 
 
வண்டிக்கு ஆயில் மாற்றாமல் இருப்பது : 
 கார் வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாதது எது?
நம்ப ஆளுங்க காசு சேமிக்கிறேன் என்று சொல்லி விட்டு வண்டி என்ஜின் ஆயில் கூட போடாம பழைய ஆயில் வெச்சு ஓட்டிட்டு இருப்பாங்க காரணம் கேட்டா என்ஜின் ஆயில் விலை அதிகம் மேலும் மாத்தி விடலாம்.
 
மேலும் பார்த்துக்கலாம் என்று கூறுவார்கள். என்ஜின் ஆகி விடும். பின்பு மர்கயா சாலா தான். தயவு செய்து வண்டி ஆயில் விஷயத்தில் கஞ்சதனம் பட வேண்டாம்.

காரை மங்க விடுவது :

தயவு செய்து இதை செய்யாதீர்கள். உண்மையில் கார் உங்களுக்கு தேவை இல்லை என்றால் விற்று விடுங்கள். அது மற்றவர்களுக்கு பயன் படும்.

அதை விட்டு விட்டு அதை மங்க செய்யாதீர்கள். ஏன் என்றால் அது ஒரு கார் மட்டும் இல்லை கனவுகள் இருக்கும் ஒரு விஷயம் அது மங்குவதற்கு பதில் வேறு எங்கயாவது நன்றாக இருக்கட்டும் என்று விற்று விடுங்கள். 
 
கை பிரேக் உபயோகம் : 
 கார் வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாதது எது?
நம்ப ஆளுங்க இந்த விஷயத்தில் மிகவும் மோசம்.  கை பிரேக் ஒழுங்காக பயன்படுத்த வேண்டும்.
 
இல்லையேல் வண்டி பிரண்டு விடும் அபயம் இருக்கிறது. எனவே கை பிரேக் போடும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

குளிர் காலத்தில் என்ஜினை விரட்டக் கூடாது :

குளிர் காலத்தில் என்ஜினை ஸ்டார்ட் செய்தவுடன் ஐடிலிங்கில் என்ஜினை ஓட விடாமல் எடுத்த எடுப்பிலேயே த்ராட்டிலை அழுத்திக் கொண்டு கிளம்பி விடக் கூடாது. 
 
பெட்ரோல் காராக இருந்தாலும் சரி, டீசல் காராக இருந்தாலும் சரி, காலையில் காரை ஸ்டார்ட் செய்ததும், குறைந்தது 5 நிமிடங்களுக்காவது ஐடிலிங்கில் ஓட விடுங்கள். 
 
இரவு முழுவதும் என்ஜின் ஓடாமல் இருக்கும்போது, புவியீர்ப்பு விசை காரணமாக, என்ஜினுக்குள் ஆயில் வழிந்து கீழிறங்கி இருக்கும். 
 
காரை ஸ்டார்ட் செய்த பிறகு தான் இந்த ஆயில் கொஞ்சம் கொஞ்சமாக என்ஜின் முழுக்கப் பரவ ஆரம்பிக்கும். அதற்கு முன்பு, என்ஜினை ரெவ் செய்தால் என்ஜினில் உராய்வு அதிகரிக்கும்.
பொருளாதார படிக்காத பாமர மனுஷன் காமராஜர் !
மேலும், தோராயமாக 195 முதல் 220 டிகிரி டெம்ப்ரேச்சர் இருக்கும் போது தான் என்ஜின் ஸ்மூத்தாக இயங்கும். 
 
குளிர் காலங்களில் வாகனத்தை ஸ்டார்ட் செய்த உடனேயே மொத்த பர்ஃபாமென்ஸையும் காட்டினால், என்ஜினில் தேய்மானம் அதிகரித்துப் பல பாகங்களைச் சீக்கிரமே மாற்ற வேண்டியது வரும். 
 
ரின், Surf Excel போட்டு வண்டி கழுவாதீர்கள் : 
 கார் வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாதது எது?
சிலர் இன்னும் மோசம் இருப்பு என்று சபீனா போட்டாலும் போடுவர். தயவு செய்து இதை தவிர்க்கவும் ஏன் என்றால் இது வருங்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனை எல்லாம் ஏற்படுத்தும். 
 
தயவு செய்து அது கார் என்று நினைவில் கொள்ளுங்கள். பாத்திரம் துலக்க வேண்டாம். 
 
டார்க் இல்லாமல் திணறடிக்கக் கூடாது :

நன்றாக கார் ஓட்டத் தெரிந்த டிரைவர்களும் அவ்வப்போது கியரை மாற்றுவதில் தவறு செய்வார்கள். ஒவ்வொரு கியருக்கும் ஒரு பவர் தேவை. 
 
அந்த கியரை சரியான என்ஜின் RPM-ல் ஓட்டும் போது தான் காரின் திறன் அதிகமாக இருக்கும். 
 
2-ம் கியரில் போக வேண்டிய இடத்தில் 4-ம் கியரை போட்டு விட்டு கார் நகரவில்லை என்று த்ராட்டிலை அழுத்தி என்ஜினைத் திணறடிப்பதால் என்ஜின் திறன் குறைகிறது. 
 
மைலேஜ் அடிவாங்குவது மட்டுமல்ல என்ஜினின் வெப்பம் அதிகரித்து அதிக தேய்மானத்தை உருவாக்குகிறது. இதனால் அவ்வப்போது என்ஜின் டைமிங் பாதிக்கும். காலப்போக்கில் என்ஜினில் அதிக வைப்ரேஷன் உருவாகும்.

கிளட்சுக்கு ஏன் இந்த சோதனை : 
 கார் வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாதது எது?
லாங் டிரைவ் பேர்வழிகள் பலரைப் பார்த்திருக்கிறேன். கிளட்சிலிருந்து காலை எடுக்கவே மாட்டார்கள். நெடுஞ்சாலையில் போகும் போதும் கூட கிளட்சில் கால் வைத்துக் கொண்டே இருப்பார்கள். 
 
சின்னச் சின்ன குண்டு குழிகளில் எல்லாம் ஏற்றி இறக்கும் போது கிளட்ச் மிதிக்கப்படும். சிட்டியில் ஓட்டும் சிலர் ஒவ்வொரு ஸ்பீடு பிரேக்கர் வரும் போதும் கிளட்சையும், பிரேக்கையும் பயன்படுத்துவார்கள். 
 
கிளட்ச் என்பது என்ஜினில் இருக்கும் காஸ்ட்லியான பாகங்களில் ஒன்று. பல கார் ஓட்டிகள் காசை கரியாக்குவது கிளட்ச் வழியாகத் தான். 
தேவையில்லாமல் கிளட்ச்சை மிதித்துக் கொண்டே ஓட்டுவதைக் குறைத்தால் நிறைய எரிபொருள் சேமிக்கலாம். 
 
கிளட்ச் பிளேட்டும் தேவையில்லாத தேய்மானத்திலிருந்து தப்பிக்கும். என்ஜின் பிரேக்கிங்குக்குப் பழகிக் கொள்வது நல்லது.

டர்போ சார்ஜர் இருந்தால் எக்ஸ்ட்ரா கேர் தேவை : 
 கார் வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாதது எது?
சின்ன என்ஜினிலிருந்து அதிக திறன் வேண்டுமென்றால் டர்போ சார்ஜர் தான் சிறந்த வழி. இதனால் தான் பல டீசல் கார்களிலும், பர்ஃபாமன்ஸ் கார்களிலும் டர்போ சார்ஜர் பயன்படுத்துகிறார்கள். 
 
உங்கள் என்ஜினில் டர்போ சார்ஜர் இருக்கிறது என்றால் அதிக நேரம் பயணித்த பிறகு உடனே என்ஜினை ஆஃப் செய்யக் கூடாது. சிறிது நேரம் என்ஜினை ஐடிலிங்கில் ஓடவிட வேண்டும். 
 
டர்போ சார்ஜரின் வெப்பம் என்ஜின் வெப்பத்தை விட அதிகமாக இருக்கும். என்ஜினை வேகமாக ஓட்டி விட்டு உடனே ஆஃப் செய்தால் டர்போ சார்ஜரில் இருக்கும் பியரிங், சீல் போன்றவற்றில் பிரஷர் ஏற்படும். 
இது டர்போ சார்ஜரின் ஆயுளை குறைக்கும். மேலும், தொடர்ந்து வரும் என்ஜின் ஆயில் உடனடியாக நிறுத்தப் படுவதால் டர்போ சார்ஜரில் இருக்கும் ஆயில் எரிந்து ஸ்லட்ஜ் ஆகி ஆயில் பைப்பில் அடைப்பு ஏற்படும். 
 
இதனால், டர்போ சார்ஜர் பாதிக்கப்பட்டு சீக்கிரமே மாற்ற வேண்டியது வரும். சிலருக்கு கார் என்பது கனவு. அந்த கனவை நீங்கள் வைத்து இருந்தால் அதை சரியாக வைத்து கொள்ளுங்கள் ஒழுங்காக பராமரியுங்கள்.