சிறுநீர்க் கசிவுக்கு சிம்பிள் தீர்வு... கெகல் பயிற்சி !

0
ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரத் தசை (Pelvic Muscle) ஆகிய இரண்டையும் ஒருசேர சுருக்கி, பின் தளர்த்துவது தான் கெகல் பயிற்சி.
சிறுநீர்க் கசிவுக்கு சிம்பிள் தீர்வு... கெகல் பயிற்சி !

நம் உடலில் 600-க்கும் மேற்பட்ட தசைகள் இருந்தாலும் இரண்டு சிறிய தசைகளே மிக முக்கியமானவை. 

ஒன்று, நம்மை உயிரோடு வாழ வைக்கும் இதயத் தசை. மற்றொன்று, நம்மை முகச்சுழிப்பின்றி வாழ வைக்கும் ஆசனவாயைச் சுற்றியுள்ள தசை (Pelvic Muscle). 
இவ்விரண்டின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழலாம். பிரசவ காலத்தில் பெண்களுக்கு உடலிலுள்ள அத்தனை தசைகளும் தளர்ச்சியடையும். 
 
அதிலும் ஆசனவாயைச் சுற்றியுள்ள இடுப்புத் தசைகள் அதிகமாகத் தளர்வடையும். 
 
அதனால் தான் சில நேரங்களில் கட்டுப் பாடில்லாமல் சிறுநீர்க் கசிவு, வாயு பிரிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவற்றை கெகல் பயிற்சியின் (Kegel Exercise) மூலம் எளிதாகச் சரி செய்து விடலாம்.
 
கெகல் பயிற்சி (Kegel Exercise) என்பது மனிதரின் அடிவயிறு மற்றும் மலக்குடல் முடிவில் அதை தாங்கும் தசைகளை (pelvic floor muscles) வலுப்படுத்துவதற்காக செய்வதாகும்.

ஆண் பெண் உடலமைப்பில் மாறுபாடு உண்டு. எனவே, அத்தசைகள் பலவீனமாவதற்கான காரணங்களும் வேறுபடும். ஆண்கள் அதிக எடை தூக்கும் பயிற்சிகள் செய்வதால் இந்த தசைகள் பலவீனமாகக் கூடும்.

அப்படி நிகழ்ந்தால் சிறுநீர் பையை தாங்குவதில் குறைபாடு வரலாம். அதிக உடல் எடை, வயது, ப்ராஸ்டேட் பிரச்சனை, அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவது, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணங்களும் இருக்கலாம்.

இதற்காக ஆண்களுக்காக சில விசேஷ உடற்பயிற்சிகள் உள்ளன. ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரத் தசை (Pelvic Muscle) ஆகிய இரண்டையும் ஒரு சேர சுருக்கி, பின் தளர்த்துவது தான் கெகல் பயிற்சி. 
 
மூச்சை உள்ளே இழுக்கும் போது ஆசனவாய் மற்றும் மூத்திரத் தசை ஆகிய இரண்டையும் சுருக்க வேண்டும். 5-10 விநாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியேற்றித் தளர்த்த வேண்டும். 

மாட்டு இறைச்சி உண்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?

எளிமையாகச் சொல்வதென்றால், சிறுநீர் முட்டிக் கொண்டு வரும் போது, கழிப்பதற்கு வாய்ப்பில்லாமல் போனால் அடக்குவோமே... அப்படித் தான். 
 
ஆனால், சிறுநீர் வரும் போது இந்தப் பயிற்சியைச் செய்யக் கூடாது. சிறுநீர்த் தொற்று உண்டாகும். முழுமையாக சிறுநீர், மலம் கழித்த பிறகே செய்ய வேண்டும். 
சிறுநீர்க் கசிவுக்கு சிம்பிள் தீர்வு... கெகல் பயிற்சி !

அப்போது தான் இடுப்புத்தசை நன்றாக இறுக்கமடையும். சிறு நீர்ப்பையும் மலக்குடலும் கீழ் இறங்காமல் இருக்கும். படிக்கும் போதோ, பயணம் செய்யும் போதோ கூட இந்த எளிய பயிற்சியை மேற்கொள்ளலாம்.

இன்னும் சுலபமாக காலை, மதியம், இரவு மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்னர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இந்தப் பயிற்சியைச் செய்யலாம். 

பச்சைக்குத்திக் கொள்வதால் என்னென்ன தீமைகள் உண்டாகிறது?

படுத்துக் கொண்டும் செய்யலாம். ஒவ்வொரு முறையும் பத்து தடவை என, ஒரு நாளைக்கு 30 முறை செய்ய வேண்டும். 
 
தசைகள் இறுக்க மடைவதை, பயிற்சி செய்பவர்களால் உணர முடியும். இந்தப் பயிற்சியை தொடர்ச்சியாகச் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)