ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்றால் பொது இடத்தில் நிர்வாணமாக குளிக்க வேண்டும் என மந்திரவாதியின் பேச்சை கேட்டு 

அருவியில் நிர்வாணமாக குளிக்க வற்புறுத்திய கணவன் !

இளம் பெண்ணை அவரது கணவரும் மாமியாரும் கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ஒரு பெண் திருமணமாகி சில ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளார். 

வாய் புற்று நோய் அறிகுறிகள்?

மேலும் குழந்தை பிறந்தால் அது ஆண் குழந்தையாகத்தான் பிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அப்பெண்ணின் கணவர் குடும்பத்தினர் இருந்துள்ளனர். 

இந்நிலையில் ஆண் குழந்தை பாக்கியம் பெறுவதற்காக மந்திரவாதி ஒருவரை பார்த்து வருமாறு அப்பெண்ணிடம் அவரது கணவரும், மாமியாரும் சொல்லி யிருக்கின்றனர். 

அதனை ஏற்று அவரும் அந்த மந்திரவாதியைச் சென்று பார்த்துள்ளார். 

அப்போது அந்த மந்திரவாதி, ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்றால் நீங்கள் பொது இடத்தில் உள்ள ஒரு அருவியில் 

வெட்ட வெளியில் நிர்வாணமாக குளிக்க வேண்டும் என அப்பெண்ணிடம் பரிகாரம் சொல்லியிருக்கிறார். 

அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், மந்திரவாதி கூறியதை தனது கணவரிடமும், மாமியாரிடமும் சொல்லி, அவர் சொன்னபடி என்னால் செய்ய முடியாது எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஆனால் அவரது கணவரும் மாமியாரும் மந்திரவாதி கூறியபடி செய்யுமாறு பலமுறை கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். 

இது குறித்து அந்த பெண் தனது உறவினர்களிடம் தெரிவிக்கவே, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர். 

சிறுநீர் சார்ந்த அனைத்து பிரச்சனை களுக்கும் எளிய வழி ?

அதன்படி அந்த பெண் தன்னை நிர்வாணமாக குளிக்கச் சொன்ன மந்திரவாதி, தனது கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார். 

போலீசாரின் விசாரணையில் ஏற்கனவே அந்த பெண்ணை கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததும், 

அருவியில் நிர்வாணமாக குளிக்க வற்புறுத்திய கணவன் !

ஆண் குழந்தை பிறக்காததால் மனதளவிலும், உடலளவிலும் அவரை துன்புறுத்தி வந்ததும் தெரிய வந்தது. 

மேலும் அந்த பெண்ணின் கையெழுத்தை போலியாக இட்டு அவரது சொத்துக்களை அடமானம் வைத்து ரூ.75 லட்சம் கடன் பெற்றதும் விசாரணையில் அம்பலமானது. 

முதுகு வலி வரதுக்கு இதெல்லாம் கூட ஒரு காரணம்ன்னு உங்களுக்கு தெரியுமா?

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் கணவர், மாமியார், மந்திரவாதி உட்பட நான்கு பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.