காந்தம் எப்படி தயாரிக்கப்படுகிறது?

0

சிறு வயதில் நம் கையில் கிடைக்கும் சின்ன காந்தத் துண்டை மண்ணில் புதைத்து வைத்து, அதன் மீது ஒட்டும் காந்தத் துகள்களை மட்டும் தனியே எடுப்போம். 

காந்தம் எப்படி தயாரிக்கப்படுகிறது?
அவை பெரும்பாலும் கருப்பு நிறத்தில் இரும்புத் துகள்களாக இருக்கும். 

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்த காந்தத் துகள்களை ஒரு காகிதத்தில் பரப்பி, காகிதத்தின் கீழே காந்தத்தை இழுப்பதன் மூலம், மேலே இருக்கும் காந்தத் துகள்கள் நகரும். 

இஸ்லாத்தின் பார்வையில் பச்சை குத்துவது சரியா?

இந்த விளையாட்டு நம் அனைவருக்குமே பிடித்தமானது தான். யாரிடம் பெரிய காந்தம் இருக்கிறது என்று நண்பர்களிடையே சண்டை வரும். 

எவ்வளவு பெரிதாக காந்தம் இருக்கிறதோ, அவ்வளவு சீக்கிரத்தில் காந்தத் துகள்களைச் சேர்க்கலாம் என்பதால் சண்டை போடுவோம். அப்படிபட்ட காந்தம் எப்படி தயாரிக்கிறார்கள்.

பொதுவாக காந்தம் என்பது ஒரு கூட்டுப் பொருளாக கிடைக்கக் கூடியது. அந்த கூட்டுப் பொருள் பல வகையான உலோகங்களின் கலவையாக அமைந்திருக்கும்.

அப்படி உள்ள போது முதலில் அந்த உலோகம் நன்றாக வெப்பப்படுத்தி பின்னர் உருக்கப்படும். அப்படி உருக்கப்பட்ட பின் ஒரு வடிவ அளவிலான கண்டெய்னருக்குள் செலுத்தப்படும்.

இதனால் அந்த உருகிய உலோகம் ஒரு நிலையான வடிவத்தைப் பெற வழிவகை செய்யப்படும். (இதனால் தான் ஒவ்வொரு காந்தமும் வெவ்வேறு வடிவத்தில் உள்ளன)

மயக்கம், மயக்க உணர்வு போக்க எளிய வழி !

அதன் பின் அந்த கண்டெய்னரில் உலோகம் நன்றாக குளிர வைக்கப்படும். குளிர வைக்கப்பட்ட பின் அதனுடன் காந்தத் தன்மை சேர்க்கப்படும்.

காந்தம் எப்படி தயாரிக்கப்படுகிறது?

அதன் பின் ஒருவித சக்தி வாய்ந்த மின்சாரம் அதனுள் சேர்க்கப்பட்ட பின் அந்த பொருள் காந்தமாக மாறும். காந்தத்தின் காந்தப்புலம் வெப்பப் படுத்தும் போது உயரும்.

இந்த இடத்தில் வெப்பத் தூண்டல் என்ற பண்பை பயன்படுத்து கின்றனர். இதனால் கல்லிலுள்ள துகள்கள் காந்தத் துகள்களாக மாற்றமடையும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)