மனிதர்களை மயக்கும் மதிகெட்டான் சோலை கொடைக்கானலில் !

0
இந்த உலகில் பல விஷயங்கள் விடை தெரியாத மர்மங்களாகவே உள்ளது. அதற்கு எந்த விளக்கமும் அறிவியல் பூர்வமாக கொடுத்தாலும் சந்தேகம் தீர்ந்த பாடில்லை.
மனிதர்களை மயக்கும் மதிகெட்டான் சோலை கொடைக்கானலில் !

சரி இப்படிப்பட்ட மர்ம தேசங்கள் அல்லது மர்மமான இடங்கள் நமது நாட்டில் இருக்கிறதா என்று தேடிய பொழுது நமது தமிழ் நாட்டில் மர்மங்களுக்கு குறைவில்லாத ஒரு இடம் இருப்பது தெரிந்தது.

அந்த இடம் தான் மதிகெட்டான் சோலை. ஒரு அரசாங்கமே இந்த கம்பி வேலி தாண்டி சென்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். 
மேலும் அரசாங்கமே இதை பற்றி எச்சரித்து ஒரு அறிவிப்பு பலகையே வைத்துள்ளார்கள் என்றால் அந்த இடத்தை பற்றி நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

சரி இந்த இடம் எங்குள்ளது என்று பார்த்தால் இந்தியாவின் கொடைக்கானல் பகுதியில் சுற்றி பார்க்க்க ஏராளமான இடங்கள் இயற்கையோடு எழில் மிகுந்து காணப்படுகின்றது. 
 
அந்த வகையில் குணா குகைக்கு அருகில் பெரிஜாம் என்ற ஏரி 100 வருடங்களாக இருந்து வருகிறது.

அந்த ஏரிக்கு அருகில் உள்ள 12 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள காடு தான் இந்த மதிகெட்டான் சோலை. இந்த காட்டிற்குள் சென்ற யாருமே இதுவரை திரும்பியதில்லை. 
 
இதற்கு பல காரணங்களை கூறுகிறார்கள். அந்த இடத்துக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபட வில்லை. 

இச்சோலைக்கு மீறி சென்றால் மரணம் நிச்சயம் அல்லது நாம் யாரென்று மறந்து மதி கலங்கிய நிலைக்கு தள்ளப்படும் சுழல் உண்டாகும் என்று அங்கு வசிக்கும் மக்கள் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சில பேர் இந்த மதிகெட்டான் சோலையில் ஒரு விதமான பூ நாகப் பூக்கள் இருப்பதாக சொல்கின்றனர். 
 
அந்த பூக்கள் பூத்து அதன் பின்னர் வாடி கீழே உதிர்ந்து விடும். அப்படி விழும் மலர்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய் விடும்.

அப்போது ஒருவித வாசம் பரவும். அந்த வாசம் வருடம் முழுவதும் வீசிக் கொண்டே இருக்கும்.இந்த வாசனையை கொஞ்ச நேரம் முகர்ந்தாலே போதை போன்ற மயக்கம் ஏற்பட்டு விடும். 
இந்த மயக்கம் மனிதர்களை தூக்கிப் போட்டு பந்தாடும். அப்புறம் எங்கே இருக்கிறோம்? என்ன பண்ணப் போகிறோம்? என்று தீர்மானிக்க முடியாது.

இத்தனைக்கும் காரணம் பூநாகப் பூ என்று கூறப்பட்டாலும்அப்படியொரு பூவே கிடையாது என்கின்றனர் தாவர ஆய்வாளர்கள். 
மனிதர்களை மயக்கும் மதிகெட்டான் சோலை கொடைக்கானலில் !

மதிகெட்டான் சோலையின் தோற்றமானது எவ்வகை சூரிய ஒளியும் உள்ளே செல்ல விடாமல் தடுப்பது போல் மரங்கள் ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டு இருக்கும். 

இச்சோலையை மக்கள் கிறுக்கு காடு என்றும் அழைக்கின்றனர். மதிகெட்டான் சோலை தனிமை, மற்றும் சிக்னல்யின்மை போன்ற காரணங்களால் சூழப்பட்டு அன்றாட தேவைகள் முடக்கப் பட்டுள்ளதால் 
மனிதர்களுக்கு பைத்தியம் பிடிப்பது போல் தோன்றும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இவ்விடம் தடை செய்யப்பட்ட பகுதி யாரும் நுழைந்து திரும்பியவர் இல்லை எனக் கூறப்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)