ஆண்களின் காலணிகள் பற்றிய சில உண்மைகள்? ஜென்டில்மென் கட் !

0
சில சமயங்களில் சில உயர்தர முறையான காலணிகளின் (சில நேரங்களில் சாதாரண காலணிகளிலும்) குதிகால் (Heels cut) வெட்டு இருப்பதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா?
ஆண்களின் காலணிகள் பற்றிய சில உண்மைகள்? ஜென்டில்மென் கட் !
ஆம்!! இந்த வெட்டு நான் குறிப்பிடுவது. இது நிச்சயமாக ஒரு குறைபாடு அல்ல. இது ஒரு நோக்கத்திற்காக செய்யப்பட்டது மற்றும் அதன் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது.
 
ஆண்கள் தங்கள் தோற்றம் மற்றும் ஆடை அலங்காரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட விக்டோரியன் சகாப்தத்திற்கு திரும்புவோம். 
பொருளாதார படிக்காத பாமர மனுஷன் காமராஜர் !
அவர்கள் தங்கள் உடையை அணிந்த பிறகு அவர்கள் ஷூ அணிய குனிந்து லேஸ்களை கட்டும் போது அவர்களின் உடையில் மடிப்புகள் (crease) ஏற்படுவதை கவனித்தனர். 
 
அதனால் அவர்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். அதன் படி ஷூ அணிந்த பிறகு பேண்ட் போடும் பழக்கம் ஏற்பட்டது. அப்பொழுது இந்த முனை பேன்ட்டில் சிக்கி துணி கிழியும் அபாயம் உள்ளது என்று அறிய பட்டது.

எனவே இந்த சிறிய வெட்டு ஏற்படுத்தினர். அந்த காலத்தில் இந்த வெட்டுக்கள் மிகவும் நன்றாக உடையணிந்த ஆண்களின் காலணிகளில் மட்டுமே காணப்பட்டன, 

அதனால் தான் அது ஜென்டில்மென் கட் என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இதன் பயன் மேலும் சில உபயோகம் தந்தது.

பண்டைய நாகரிகத்தின் தூணாண எகிப்திய கடவுள்களின் வாழ்க்கை !

ஒரு ஷூவின் குதிகால் தற்செயலாக மற்ற ஷூவின் மீது விழுந்தால், சேதத்தை குறைக்க உதவுகிறது.

குதிரை சவாரி செய்யும் போது, ​​சிறந்த கட்டுப்பாட்டிற்கு உங்கள் கால்களால் மென்மையான பிடியை உருவாக்க முடிந்தது.

சில நேரங்களில் கூர்மையான குதிகால் குதிரையின் மேல் தோலுக்கு தீங்கு விளைவிக்கும், இதனை தவிர்க்க இந்த வெட்டு உதவியது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)