நாயை சரியா கவனிக்கலைன்னா இது தான் கதி... ஹரியானா பெண் !





நாயை சரியா கவனிக்கலைன்னா இது தான் கதி... ஹரியானா பெண் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

மனிதர்களின் வாழ்க்கையில் செல்லப் பிராணிகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பொதுவாக நாய், பூனை போன்ற சில விலங்குகள் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படுவது வழக்கம். 

நாயை சரியா கவனிக்கலைன்னா இது தான் கதி... ஹரியானா பெண் !

அவற்றின் குறும்புத் தனமான விளையாட்டுகள் இணையத்தில் அதிக வீடியோக்களாக பகிரப்படுவதை பார்க்கும் போது, நாமும் கூட செல்லப் பிராணிகளை வளர்க்கலாம் என்ற எண்ணம் உருவாகிறது. 

பணம் வந்த வரலாறு தெரியுமா? உங்களுக்கு !

இந்த அளவுக்கு செல்லமாக வளர்க்கப்படும் பிராணிகளை சரியாக கவனிக்கா விட்டால் அதன் மூலமாக சில விபரீதங்களையும் சந்திக்க நேரலாம். அப்படிப்பட்ட சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது.

வெளியில் சென்று வந்துள்ள எஜமானியம்மாவை கோவத்தில் இருந்த வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் அவருக்கு 50 தையல்கள் போடப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தில் அவருக்கு மட்டுமல்லாமல் அவரின் குழந்தைகளுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினரின் துரித செயலால் அந்த பெண்ணின் உயிர் காப்பாற்றப் பட்டுள்ளது.

பொதுவாக செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் அவற்றின் உடல்நலனில் அக்கறை கட்டுவது போல அவற்றின் மனநலத்திலும் அக்கறை காட்ட வேண்டும். 

ஒலிம்பிக் போட்டியின் வரலாறு தெரியுமா?

அவற்றின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனடியாக அவற்றை சரி செய்ய வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்படும் நிலையில் அவற்றை வளர்ப்பதற்கான முறையான அனுபவம் தேவை என்றும் கூறப்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)