கண்களில் பரவும் வைரஸ் மெட்ராஸ் ஐ வந்தா என்ன பண்ணனும்?





கண்களில் பரவும் வைரஸ் மெட்ராஸ் ஐ வந்தா என்ன பண்ணனும்?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

மெட்ராஸ் ஐ என்பது அதிகமாக பருவ காலங்களில் கண்களில் பரவும் வைரஸ் தொற்று. இது பாக்டீரியா தொற்றாகவும் பரவும். 

கண்களில் பரவும் வைரஸ் மெட்ராஸ் ஐ வந்தா என்ன பண்ணனும்?

மேலும், சில வைரஸ் தொற்றுகள் சாதாரண மானவையாக இருந்தாலும், சில தொற்றுகள் உங்கள் கண் பார்வையை பறிக்கும் அளவு வீரியம் மிக்கவை என 

அதிர்ச்சி கொடுக்கிறார் தாம்பரம் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் மற்றும் முதுநிலை கண் நிபுணர் டாக்டர். ஸ்ரீனிவாசன் ஜி. ராவ் அவர்கள். 

மேலும் அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை குறித்து இந்த கட்டுரையில் நம்மோடு சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஆணும் பெண்ணும் - வித்தியாசங்கள் உண்டு !

எதனால் மெட்ராஸ் ஐ என்ற பெயர் 

சென்னையில் உள்ள கண் மருத்துவமனையில் முதன் முதலாக இந்த நோய் கண்டறியப் பட்டதால் இந்த நோய் மெட்ராஸ் ஐ என்று அழைக்கப் படுகிறது. 

மெட்ராஸ் ஐ ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை கொண்டதாகும். கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், 

கண்ணில் இருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல், வெளிச்சத்தை பார்க்கும் போது கண் கூசுதல் உள்ளிட்டவை மெட்ராஸ் ஐ யின் அறிகுறிகள் ஆகும்.

மெட்ராஸ் ஐ உண்மைகள்

கண்களில் பரவும் வைரஸ் மெட்ராஸ் ஐ வந்தா என்ன பண்ணனும்?

மெட்ராஸ் ஐ யை பொறுத்த வரை வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. இது பல விதமான வைரஸ் வடிவில் வரும். இது ஒரு முறை வந்தால் அந்த வருடத்தில் திருப்பி வராது. 

பொதுவாக 4-7வது நாளில் தான் இதன் அறிகுறி அதிகரிக்கும். பின்பு குறைந்து விடும். ஆனால், ஒரு சில வைரஸ் தொற்றுக்கள் கரு விழியை பாதிக்கும். 

இதை superficial punctate keratitis என்று சொல்வார்கள். அப்போது பத்தாவது நாளில் பார்வை மங்களாகும். இதை பலரும் தனக்கு ரெண்டாவது முறை மெட்ராஸ் ஐ வந்து விட்டதாக நினைத்து கொள்வார்கள்.

அது தவறு. இது தீவிரமான வைரஸ் தொற்று என்று புரிந்து கொள்ள வேண்டும். அது 2-4 வாரத்தில் சரியாகி விடும். 

அதே போல், கம்ப்யூட்டரில் வேலை செய்ய கூடாது என்பார்கள். அப்படியில்லை, நீங்கள் வேலை செய்யலாம் ஆனால். சுகாதர வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

இதய இயக்கம் நின்றவருக்கு முதலுதவி ! #CPR

​நேருக்கு நேர் பார்ப்பதால் பரவுமா?

பொதுவாக தொற்று ஏற்பட்டவர்கள் தங்களது கண்களை தொடக்கூடாது என்பதற்காக கண்ணாடி போட சொல்வோம். இது நேருக்கு நேர் பார்ப்பதால் பரவாது. 

ஆனால், சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக தொற்று ஏற்பட்டவர் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தியதையோ தொடுவதாலோ, அவர் தொட்ட இடங்களில் தொடுவதாலோ இந்த தொற்று பரவலாம்.

எனவே, தான் தொற்று ஏற்பட்டுவரும், அவரை சுற்றி உள்ளவர்களும் அடிக்கடி கை கழுவுதல் மற்றும் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். 

வேறு யாரவது உங்களுக்கு மருந்து போடுகிறார்கள் என்றால் நீங்களும் கை கழுவ வேண்டும், அவர்களும் கழுவ வேண்டும்.

மெட்ராஸ் ஐ வர காரணங்கள்?

கண்களில் பரவும் வைரஸ் மெட்ராஸ் ஐ வந்தா என்ன பண்ணனும்?

இது பொதுவாக வைரஸ் தொற்று மூலமாக வரும், சில நேரங்களில் பாக்டீரியா தொற்றாகவும் இருக்கலாம். 

வைரஸ்களில் ஓரிரண்டு வைரஸ்களுக்கு நூறுக்கும் மேற்பட்ட வேறுபாடுகள் உள்ளன.அதில் சிலவை தான் இந்த கருவிழியை பாதிக்க கூடியவை.

அது போன்று வரும்போது 2 இலிருந்து 6, 8 வாரங்கள் கூட கண் மங்கலாக இருக்கும். முறையான சிகிச்சை எடுத்து கொண்டால் அதுவாகவே சரியாகி விடும். 

மழைக்காலம், குளிர்காலம் என பருவ காலங்கள் மாறும் போது இது ஏற்படுகிறது.

ஆடிப்பெருக்கு என்றால் என்ன? அதன் சிறப்புகள் என்ன?

மெட்ராஸ் ஐ அறிகுறிகள் :

கண் சிவப்பாதல்

கண் உறுத்தல், எரிச்சல்

கண் பூழை கட்டுதல்

கண்ணில் தண்ணீர் வடிதல்

வெளிச்சத்தை பார்க்க சிரமம்

ஆகியவை பொதுவான அறிகுறிகள் ஆகும். அதுவே தீவிரமான வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு கண்ணில் வீக்கம், பார்வை மங்களாதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

கண்களில் பரவும் வைரஸ் மெட்ராஸ் ஐ வந்தா என்ன பண்ணனும்?

அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகி விட வேண்டும். அவர் கொடுக்கும் மருந்தை உபயோகித்தால் சாதாரண தொற்று என்றால் ஒரு வாரத்திலும், 

தீவிர வைரஸ் தொற்று என்றால் 2 முதல் 4 வாரத்திலும் சரியாகி விடும். நீங்களாகவே வீட்டு வைத்தியம் செய்தலோ, பிறரின் மருந்தை நீங்கள் பயன்படுத்துவதோ கூடாது.

சுவையான உருளைக்கிழங்கு சமோசா செய்வது எப்படி?

​வராமல் தடுக்க முடியுமா?

வராமல் தடுக்க முடியாது. ஆனால், வந்து விட்டால் சுத்தபத்தமாக இருந்து கொண்டால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும். 

முறையாக கைகளை சுத்தப்படுத்துதல், தொற்று பாதிக்கப்பட்ட நபர் பொது இடங்களை தொடாமல் இருந்தாலே இது பரவாது.

அதே போல் வராமல் இருக்க ஏதாவது மருந்து போடலாமா என சில கேட்பார்கள். அது போன்று போடா வேண்டிய அவசியம் இல்லை. 

அறிகுறிகள் தெரிந்தவுடனே மருத்துவர்களை அணுகுவதே புத்திசாலித்தனம்.

மருத்துவர்கள் கூறியதாவது 

மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தினால் பிறருக்கும் இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது. 

பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னையில் தற்போது இந்த நோய் தீவிரமாக பரவி வருகிறது. 

இந்த நிலையில், மெட்ராஸ் ஐ நோய் பரவல் தொடர்பாக கண் மருத்துவர்கள் கூறுவதாவது:- 

பருவ மழைக் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் ஐ பாதிப்பு ஓரளவு அதிகரிக்கும். நல்ல ஓய்வு கொடுப்பது அவசியம் மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் செல்போன் அதிகம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். 

கண்களில் பரவும் வைரஸ் மெட்ராஸ் ஐ வந்தா என்ன பண்ணனும்?

ஆரோக்கியமான நீர்ச்சத்து மிகுந்த உணவை சாப்பிட வேண்டும். கண்ணுக்கு நல்ல ஓய்வு கொடுப்பது அவசியம். இவற்றை பின்பற்றினால் விரைவில் மெட்ராஸ் ஐ பாதிப்பில் இருந்து மீள முடியும். 

மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் தாங்கள் உபயோகித்த பொருட்களை மற்றவர்களை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் !

மருத்துவர்களின் ஆலோசனை இன்றி மெட்ராஸ் ஐ நோய்க்கு இதுவரை 1.50 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. 

மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப் பட்டவர்கள் முறையாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். 

இந்த நோய் விரைந்து பரவும் தன்மை கொண்டது என்பதால் மருத்துவர்களின் ஆலோசனை இன்றி சுயமாக சிகிச்சை எடுக்கக் கூடாது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)