காணாமல் போன இளம் பெண்ணை தேடி கண்டுபிடித்து, அவரை லாட்ஜில் 8 மணி நேரம் தங்க வைத்துள்ளார் போலீஸ் ஏட்டு ஒருவர்.

ஓடிபோன பெண்ணுடன் லாட்ஜில் ரூம் போட்டு தங்கிய ஏட்டு... கொடுமை !

தென்காசியை சேர்ந்தவர் அந்த தொழிலாளி. 38 வயதாகிறது. திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இதற்காக, குன்னத்தூரிலேயே ஒரு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருக்கிறார். இவருடைய மனைவி அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்கள் முன்பு வழக்கம் போல், வேலைக்கு சென்ற அந்த பெண், வீட்டுக்கு திரும்பி வரவே இல்லை. 

இதனால் பதறிபோன அந்த தொழிலாளி, மனைவியை எங்கெங்கோ தேடியலைந்தார். எங்குமே கிடைக்காததால், குன்னத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான், மனைவிக்கு ஒரு இளைஞருடன் கள்ளக்காதல் இருந்துள்ள விஷயமே தெரியவந்தது. 

அந்த இளைஞருக்கு 28 வயதாகிறதாம். அவரும், இந்த பெண்ணும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்களாம். 

இந்த தகாத உறவு காரணமாக, அந்த இளைஞருடன், இந்த பெண் ஓடிவிட்டது விசாரணையில் தெரிய வந்தது. 

ஓடிபோன பெண்ணுடன் லாட்ஜில் ரூம் போட்டு தங்கிய ஏட்டு... கொடுமை !

அதனால், குன்னத்தூர் போலீஸ் ஏட்டு முத்துப் பாண்டி என்பவர், ஓடிப்போன அந்த பெண்ணின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது தான் அந்த பெண் இருக்கும் இடம் ஏட்டுக்கு தெரியவந்தது. அதனால் அந்த பெண் உள்ள இடத்துக்கு நேரிலேயே சென்று, அழைத்து வரலாம் என்று கிளம்பினார். 

சம்பந்தப்பட்ட பெண்ணையும் கண்டுபிடித்து விட்டார். ஆனால், நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கும் வராமல், அந்த பெண்ணை மீட்டு கணவருடனும் ஒப்படைக்காமல், ஸ்டிரைட்டாக திருப்பூருக்கு அழைத்து சென்று விட்டார். 

அங்கேயே ஒரு லாட்ஜில் ரூம் போட்டுள்ளார். அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி, லாட்ஜுக்கு அழைத்து சென்றிருக்கிறார். கிட்டத்தட்ட 8 மணி நேரம் அந்த பெண்ணை தன்னுடன் தங்க வைத்து இருக்கிறார். 

பிறகு கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்திருக்கிறார். அதற்கு பிறகு, அவரை அழைத்து கொண்டு, ஸ்டேஷனுக்கு வந்து ஒப்படைத்துள்ளார். 

ஆனால் அங்கிருந்த போலீஸ்கார்களை பார்த்ததுமே, நடந்த விவரங்களை எல்லாம் அந்த பெண் ஒன்று விடாமல் சொல்லி விட்டார். 

ஓடிபோன பெண்ணுடன் லாட்ஜில் ரூம் போட்டு தங்கிய ஏட்டு... கொடுமை !

தன்னை கட்டாயப்படுத்தி, ஏட்டு செய்த காரியத்தையும் புகாராக தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸ் அதிகாரிகள், இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தந்தார்கள். 

இறுதியில் மாவட்ட எஸ்பி சசாங் சாய், இந்த விவகாரத்தை விசாரித்து ஏட்டு முத்துப்பாண்டியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். 

எனினும், காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்து, லாட்ஜில் தங்க வைத்து, பலாத்காரமும் செய்யப்பட்ட விவகாரத்தின் உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.