கல்யாணத்துக்கு பிறகு மாமியார் வீட்டில் வகை வகையாய் பல வகைகளில் மருமகனுக்கு விருந்து வைப்பது குறித்து கேள்விப் பட்டிருப்போம். 

கல்யாணத்துக்கு முன்னாடியே மறக்க முடியாம செஞ்சு விட்ட மாமியார் !

ஆனால் திருமணத்துக்கு முன்பே விருந்து என்கிற பெயரில் மருமகனை அழைத்து வைத்து வாய் பிளக்க வைக்கும் மாமியார்களும் நம்ம ஊரில் இருக்கத் தான் செய்கின்றனர்.

திருமணம், வளைகாப்பு, காதணி விழா என எந்த விசேஷமாக இருந்தாலும் அதில் பரிமாறப்படும் உணவு வகைகள் குறித்து தான் அதிகம் பேசப்படும். 

பார்பிக்யூ என்றால் என்ன? இது தெரியாம போச்சே !

விருந்தோம்பலில் நம்மை அடிச்சுக்க ஆளே கிடையாது என்பதை இந்திய மக்கள் தினந்தோறும் நிரூபித்து வருகின்றனர்.

ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சைதன்யா. இவருக்கு சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. 

இவருடைய வருங்கால மனைவியின் பெயர் நிஹாரிகா. சைதன்யா மற்றும் நிஹாரிகா இருவருக்கும் அடுத்த வருடம் மார்ச் மாதம் தான் திருமணம் நடைபெறவுள்ளது. 

கல்யாணத்துக்கு இன்னும் பல மாதங்கள் இருந்தாலும் மாப்பிள்ளையை முன் கூட்டியே பண்டிகைக்கு அழைத்து விருந்து வைக்க வேண்டும் என்று 

நினைத்த அவரது மாமியார் தனலட்சுமி தசரா பண்டிகைக்கு தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு மருமகன் சைதன்யாவிடம் கூறியுள்ளார்.

உலகம் அழிய இது நடந்தால் சர்வ நாசம் தான் !

மாமியாரின் பேச்சைக் கேட்டு மணமகள் இல்லத்துக்கு சென்ற சைதன்யாவுக்கு மிகப்பெரிய இன்ப அ திர்ச்சி காத்திருந்தது. 

அவர் கண் முன் அவருக்கு ஒரு மெகா விருந்தை பரிமாறி திக்குமுக்காட வைத்துள்ளார் அவரது மாமியார் தனலட்சுமி. சுமார் 125 அயிட்டங்களை தயார் செய்து மருமகனுக்கு விருந்து வைத்துள்ளார். 

அதை பார்த்ததும் அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன்னால் முடிந்த வரை சில உணவு வகைகளை ருசி பார்த்து விட்டு எழுந்து சென்று விட்டார் சைதன்யா. 

பரிமாறப்பட்ட 125 உணவு வெரைட்டிகளில் பாதிக்கும் மேல் என்னவென்றே அவருக்கு தெரிய வில்லையாம். 

உணவின் பெயர் என்ன வென்பதை தெரிந்து  கொள்ள முடியாத அளவுக்கு அவருடைய மாமியார் அவருக்கு விருந்தோம்பல் செய்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சாலையோர உணவகங்களில் சாப்பிடுவதால் தொற்று நோய் வருமா?

முதல் முறையாக மாமியார் வீட்டுக்கு சென்றுள்ள காரணத்தினால் முடிந்த வரை ருசித்த உணவுகள் எல்லாம் பிரமாதமாக இருக்கிறது என சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றாராம். 

சாப்பிட்ட உணவு பற்றிய முழு விவரங்களை கூட தெரிந்து கொள்ளாமல் மருமகன் தன் கைப்பக்குவத்தை பாராட்டி விட்டு சென்றதை எண்ணி பூரித்துப் போய் விட்டாராம் நிஹாரிகாவின் அம்மா தனலட்சுமி.