தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் திருமண சட்டங்களில் முக்கியமானதாக விளங்குவது, திருமணங்கள் முறைப்படி பதிவு செய்யப்படுதல் ஆகும். 

பதிவு திருமணங்கள்.... நீதிமன்றம் கொடுத்த புது உத்தரவு !

அதன்படி சிறப்பு திருமணங்கள் எங்கு நடந்தாலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு முறைப்படி திருமண சான்று பெற்று இருந்தால் மட்டுமே அந்த திருமணம் அங்கீகரிக்கப் படுகிறது. 

இந்நிலையில் சமீபகாலமாக சார்பதிவாளர் அலுவலகங்களில் திருமண பதிவுக்கு நிறைய கெடுபிடிகள் நடைபெறுவதாக 

பிரியாணி இலையின் நன்மை தெரியுமா? உங்களுக்கு !

சலசலப்புகள் எழுந்த நிலையில் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் சில சிறப்பு ஆணைகளை பிறப்பித்துள்ளன.

சிறப்பு திருமணங்கள் என்பது ஜாதி, மதம், மொழி மற்றும் நாடு ஆகிய அனைத்தையும் கடந்து திருமணம் செய்வதாகும். 

இதற்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்பு திருமண சட்டம் மணமக்களுக்கு எந்த விதமான நிபந்தனைகளையும் விதிக்கக்கூடாது என்பதை தெளிவாக்கி இருக்கிறது. 

அதாவது திருமணம் செய்து கொள்வோர் வேறு வேறு மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள எந்த விதமான நிபந்தனைகளை விதிக்க கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறது. 

மேலும் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் யாரேனும் ஒருவர் இந்தியராக இருந்தால் போதுமானது. இதனை முன்னிறுத்தி அந்த திருமணத்தை பதிவு செய்யலாம். 

வெள்ளரிக்காய் தக்காளி சாலட் செய்வது !

இதற்காக திருமண பதிவை இழுத்தடிக்கவோ அல்லது நிராகரிக்கவோ கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. 

இது குறித்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுத்துறை சர்குலர் அனுப்பி இருக்கும் நிலையில் இந்த விஷயம் தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது