மிளகுடன் பப்பாளி விதை கலந்திருந்தால் கண்டுபிடிப்பது எப்படி?

0

சளி, இருமல் வந்து விட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டு விடலாம். தண்ணீரை சூடாக்கித் தான் குடிக்க வேண்டும்.  மிளகுடன் பப்பாளி விதை கலந்திருந்தால் கண்டுபிடிப்பது எப்படி?

வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும்.

வெது வெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. 

தொண்டையில் ஏற்பட்ட  வீக்கத்தைக் குறைக்கும்,  தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும். 

நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. 

ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது. 

மிளகுடன் கலப்படம் எவ்வாறு கண்டுபிடிப்பது?

மிளகுடன் பப்பாளி விதை கலந்திருந்தால் கண்டுபிடிப்பது எப்படி?

பார்ப்பதற்கு போலி தான் எப்பொழுதும் அசலை விட அருமையாக இருக்கும் என்பது மிளகு விஷயத்தில் உண்மை தான்.

மிளகை பார்க்கும் போது அது பளபளப்பாக மின்னாது.. .அதே பப்பாளி விதையில் பழுப்பு நிற தோல் இருப்பதால் விதை சற்று மின்னுவது போல இருக்கும்.

பப்பாளி விதைகளை உலரவைத்தால் அது காய்ந்து சுண்டியதும் பார்ப்பதற்கு மிளகு போலவே இருப்பதால் அதனை மிளகுடன் கலப்படம் செய்கிறார்கள்.

எது மிளகு எது பப்பாளி விதை என அறிவது எப்படி?

மிளகுடன் பப்பாளி விதை கலந்திருந்தால் கண்டுபிடிப்பது எப்படி?

மிளகை நீருக்குள் போட்டாள், தரமான மிளகு நீரில் மூழ்கும், அதே தரமற்ற மிளகு, அதாவது பப்பாளி விதை நீரின் மேலே மிதக்கும்.

எல்லா மிளகும் உண்மையானதா என தண்ணீரில் போட்டு பார்க்க முடியாது. அடர்ந்த கருப்பாக இருப்பது தரமான மிளகு, பழுப்பு நிறத்தில் இருந்தால் அது பப்பாளி விதை.

மேலும், சரியாக முதிராத மிளகும் பார்ப்பதற்கு பப்பாளி விதை போல் தான் பழுப்பு நிறத்தில் இருக்கும், அதற்காக அதை தூக்கி எறிந்து விடாதீர்கள். கடித்து பாருங்கள் காரமாக இருந்தால் உண்மையான மிளகு தான். 

மிளகை அது விளையும் இடமான ஏற்காடு, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு நீங்கள் சுற்றுலா சென்றால் வெற்றிலை இலை போன்ற கொடியில் கொத்து கொத்தாக காய்த்திருக்கும்.

அங்கே சகாயமான விலையில் தரமான மிளகை வாங்கலாம். ஆரோக்கியமான விஷயத்தை அடுத்த தலைமுறைக்கு சொல்லி செல்லுங்கள்..!

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !