கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காரில் சாய்ந்திருந்த ஆறு வயது சிறுவனை உதைக்கும் வீடியோ வைரலானது. அந்த ஆதாரத்தை வைத்து இளைஞன் கைது செய்யப்பட்டான். 

கார் மீது சாய்ந்த குழந்தையை பறந்து உதைத்த சைக்கோ... அழுக்கு ஆயிடுச்சாம் !

கண்ணூர் தலச்சேரியில் நடந்த இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த இளைஞன் தலச்சேரி அருகே பொன்னியம் பகுதியைச் சேர்ந்த ஷிஹ்ஷாத் என்பது தெரிய வந்தது. 

கேரளாவில் திருமண 'மகரா'க புத்தகங்களை பெற்ற மணமகள் !

அடி வாங்கிய சிறுவன் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்று  போலீஸார் தெரிவித்தனர். ஷிஷாத் மீது கொலை முயற்சி குற்றத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிசிடிவி காட்சியில் ஒரு இளைஞன் சிறுவனை நோக்கி நடந்து செல்வதை காணலாம். சிறுவன் நிறுத்தப் பட்டிருந்த காரின் பின்புறத்தில் சாய்ந்து நிற்கிறான். ஓடிச் சென்று உதைப்பதைக் காணலாம். 

சிறுவனை உதைத்த பிறகு, உள்ளூர் மக்கள்  சண்டைக்கு செல்வதை காண முடிந்தது.  சிறுவன் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான். 

இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் கேரள சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

அலுவலகத்தில் அமர்ந்தே இருப்பது ஆபத்தா?

சமூக நலத்துறை இயக்குனரிடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 

இந்த தாக்குதலில் சிறுவன் பலத்த காயம் அடைந்தான். அவரது குடும்பம் ராஜஸ்தானில் இருந்து பிழைப்பு நடத்த வந்தது. அப்பாவியாக நின்ற சிறுவன் தாக்கப்பட்டது கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.