இலுப்பை மரத்தின் அற்புதம்... மஹுவா பானம் !

0

உலகில் முதலில் மதிக்கப்பட வேண்டியது மரங்கள் தான். மனிதன் கொடுக்கும் இடர்பாடுகளை எல்லாம் சுத்தப்படுத்தி மழையைக் கொண்டு வரும் அற்புத படைப்பு அவைதாம். 

இலுப்பை மரத்தின் அற்புதம்... மஹுவா பானம் !
ஆனால், அலட்சியத்தால் அவற்றை நாம் கண்டும் காணாமல் விட்டு விட்டோம். இதனால் நிறைய பாரம்பர்ய மரங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. 

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை' என்ற பழமொழியும் இலுப்பையின் அவசியத்தை உணர்த்துகிறது. 

நன்கு விளைந்த ஒரு மரத்திலிருந்து வருடத்துக்கு 200 கிலோ முதல் 300 கிலோ வரை இலுப்பைப் பூவை எடுக்கலாம். 

200 கிலோ வரை இலுப்பை விதையும் கிடைக்கும். ஒரு கிலோ விதையிலிருந்து 300 மி.லி எண்ணெய் எடுக்கலாம். இதுவே ஒரு டன் இலுப்பைப் பூவிலிருந்து 700 கிலோ சர்க்கரை எடுக்கலாம். 

நம்முடைய மூட்டுவலியைப் போக்கும் உடற்பயிற்சி !

இதில் தனிப் பொருளாக 300 கிலோ எரி சாராயமும் கிடைக்கும். இந்த எரி சாராயம் மாற்றுப் பொருளாக பயன்படுத்தலாம். ஆனால்

பல நூற்றாண்டுகளாக பழங்குடியினரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மஹுவா பானம் எனப்படும் இலுப்பைச் சாராயம் இருந்தது. தெரியுமா? 

மஹுவா மரத்தின் (இலுப்பை மரத்தின்) பூக்களை விற்பனை செய்வதற்கும், சேகரிப்பதற்கும் பிரிட்டிஷ் ஆட்சியின் போது தடை விதிக்கப்பட்டது. 

மீண்டும் அண்மையில் இது கவனம் பெறத் தொடங்கியுள்ளது. 

மஹுவா மரம் அல்லது மதுகா லாங்கிஃபோலியா என்றழைக்கபடும் இந்த மரம், இந்தியாவின் கிழக்கு மற்றும் மத்திய, மேற்கு பகுதியில் உள்ள காடுகள் நிறைந்த சமவெளிப் பகுதிகளில் ஏராளமாக வளர்கின்றன. 

இந்த பகுதிகளில் சந்தால், கோண்ட், முண்டா மற்றும் ஓரான் பழங்குடியின மக்கள் கடந்த 3000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்றனர். 

இந்த மரம் அவர்களின் வாழ்வாதாரம் என்று கருதப்படுகிறது. 

பாரம்பரியமாக இந்த பழங்குடியினர், இந்த மரங்களின் பூக்கள், பழங்கள், கிளைகள் மற்றும் இலைகள் ஆகியவற்றை உணவு, கால்நடை தீவனம், 

எரிபொருள், கலை, மருத்துவம் ஆகியவற்றுக்கு மட்டுமின்றி தானியங்களை வாங்குவதற்கான பண்டமாற்று முறைக்கான பணமாகவும் உபயோகித்து வருகின்றனர். 

விறகு அடுப்பின் மேல் வைக்கப்பட்டு உலோக பானையில் புளித்த மஹுவா சாற்றை தயாரிக்கிண்றனர். 

மதியம் சாப்பிட்டதும் தூக்கம் வருவது ஏன்?

மஹுவாவை காய்ச்சுவதற்காக ஒரு பெரிய பானைக்கு மேலே இரண்டு பானைகள் வைக்கப்பட்டு காய்ச்சப்படும் சாறு, 

ஒடுக்கமான ஒரு குழாய் வழியே தரையில் அமைக்கப் பட்டிருந்த கொள்கலனில் சேமிக்கப் படுகிறது. 

இந்த பணத்தை எடுத்து தீயில் இட்டால் அது கொழுந்து விட்டு எரிய வேண்டும். அப்படி எரிந்தால் அதுவெ சுத்தமான மஹுவா மதுபானம் ஆகும்.

பண்டைய காலம் முதல் 1800ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி வரை உள்நாட்டு பழங்குடியினத்தை சேர்ந்த குடும்பத்தினர் சுதந்திரமாக இதனை காய்ச்சி குடித்தனர். மஹுவா பானமாகவும் விற்றனர். 

எனினும், இந்திய அரசால் நாட்டு சாராயமாக கருதப்பட்டு தயாரிக்கப்பட்டு வந்த இந்த மதுவின் உற்பத்தி, பிரிட்டிஷ் ஆட்சியின் போது பலத்த அடியை சந்தித்தது. 

மஹுவா பொதுமக்களின் ஆரோக்கியம், ஒழுக்கத்துக்கு அச்சுறுத்தலான, ஆபத்தான போதைப் பொருளாக ஆங்கிலேய ஆட்சியில் வரையறுத்தனர்.

எனவே பிரிட்டிஷ் ஆட்சியில் இயற்றப்பட்ட 1878 ஆம் ஆண்டின் பாம்பே அப்காரி சட்டம், 1892 ஆம் ஆண்டின் மௌரா சட்டம் போன்றவற்றை அமல்படுத்தினர். 

இந்த சட்டங்கள் பழங்குடியினரின் மஹுவா பானத்தை தடை செய்வதுடன், அவர்கள் மஹுவா பூக்களை சேகரித்து வைத்திருப்பதையும் தடை செய்தது.

ரகசியமான முறையில் காய்ச்சுவதற்கு குறைந்த அளவிலான மஹுவா பூக்கள் பெரும்பாலும் அசுத்தங்களுடன் சேகரிக்கப்பட்டன. 

அந்த காலத்தில், உள்ளூர் மதுபான உற்பத்தியை கட்டுப்படுத்தி, ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 

மது வகைகளை விற்று ராணுவ ஆக்கிரமிப்புகளுக்கு வருவாய் ஈட்டுவது பொதுவாக பிரிட்டீஷ் ஆட்சியின் கொள்கையாக இருந்தது.

அதே நேரத்தில், சில பிரிட்டிஷ் அதிகாரிகள், மஹுவா போன்ற கலாச்சார, ஊட்டச்சத்து முக்கியத்துவம் கொண்ட உள்நாட்டு பானங்களை அங்கீகரித்தனர். 

ஆனால், வருவாய் என்ற அச்சுறுத்தலே முன்னுரிமை பெற்றது. 

வியப்பூட்டும் வகையில், 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட, பழைய பொருளாதார மற்றும் சமூக பழக்க வழக்கங்கள் அப்படியே இருந்தன. 

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களைப் போலவே மது உற்பத்தி மற்றும் விற்பனை என்பது ஏகபோக உரிமையுடன் அரசுடன் தொடர்பு கொண்டதாக இருந்தது. 

இலுப்பை மரத்தின் அற்புதம்... மஹுவா பானம் !

மஹுவா தொடர்ந்து கடுமையான சட்டங்கள், கட்டுப் பாடுகளுக்கு உள்ளானது. மதுபானத்தை தவிர்ப்பது ஆரம்ப காலகட்ட தேசியவாதிகளின் இலக்காக மது இருந்தது. 

மதுபான கடைகள் முன்பு மறியல், போராட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவுக்கு மது அந்நியமாக இருந்தது என சில தேசியவாதிகள் வலியுறுத்தினர். 

ஆனால், மஹுவா போன்ற பானங்கள், பல்வேறு பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

ஆகவே, மஹுவா தொடர்ந்து தரம் குறைந்த அபாயகரமான பானமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. 

மாட்டு இறைச்சி உண்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?

பழங்குடி மக்கள் தங்களின் பாரம்பரியமான சந்தைகளுக்கு வெளியே அதனை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்குமான உரிமை மறுக்கப் படுகிறது.

என்கிறார் லண்டன் வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் எரிகா.

கோவாவில் நாங்கள் மஹுவா பானத்தை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானம் என்ற வகையின் கீழ் அறிமுகம் செய்தோம். 

அரசாங்கத்திடம் அதிகம் வற்புறுத்திய பிறகு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானம் என்ற குறிச்சொல்லை பயன்படுத்த அனுமதி கிடைத்தது, என்றார் டெஸ்மண்ட் நாசரேத். 

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் டெஸ்மண்ட்ஜி என்ற பிராண்டின் கீழ் மஹுவா மது மற்றும் மஹுவா சாராயம் ஆகியவற்றை அறிமுகப் படுத்தினார்.

கடந்த சில ஆண்டுகளாக மாநில அரசாங்கங்கள், முகமைகளின் மனப்பான்மைகளில் மெதுவாக ஒரு மாற்றம் நிகழ்ந்தது. 

உதாரணமாக, கடந்த 2021ஆம் ஆண்டு மஹுவா ஒரு பாரம்பரிய மது என மத்திய பிரதேச மாநிலம் அறிவித்தது. 

மகாராஷ்டிரா மாநிலம் தனது தொன்மையான சட்டங்களில் மாற்றங்கள் செய்து, பழங்குடிகள் மஹுவா மலர்களை சேகரிப்பது, சேமித்து வைப்பது சட்ட விரோதம் அல்ல என்று மாற்றியது.

அதே ஆண்டில் முதன் முறையாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி வாரியம் என்ற அரசின் அமைப்பு, 

பழங்குடி மக்களால் சத்தீஸ்கர் மாநில காடுகளில் சேகரிக்கப்பட்டு காய வைக்கப்பட்ட மஹுவா பூக்களை பிரான்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

இலுப்பை மரத்தில் உள்ள காய்கள் பழுக்கத் துவங்கும் போது, பழங்களை உண்பதற்காகப் பறவைகள், வண்டினங்கள் எனப் பல்லுயிர்களும் படையெடுத்து வரும். 

பச்சைக்குத்திக் கொள்வதால் என்னென்ன தீமைகள் உண்டாகிறது?

அதனால், விவசாய நிலங்களில் ஆங்காங்கே இதை நட்டு வைத்தால், பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும். 

இலுப்பை வளர்ப்பதன் மூலம், இயற்கை எண்ணெய் தயாரிப்பு, மதுபான ஆலைகள் எனப் பல தொழில்களை உருவாக்க முடியும். இவை எல்லாவற்றையும் விட மழையையும் ஈர்க்க முடியும் என்றார்.

மணற் பாங்கான இடங்களில் நன்கு வளரும். இதன் இலைகள் கரும்பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கும். நீளம் 13 – 20 செ.மீ இருக்கும், அகலம் 2.5 – 3.5 செ.மீ. இருக்கும். 

இலை நுனியில் கொத்தான நீண்ட இலைகளையும், கொத்துக் கொத்தான வெண்ணிற மலர்களையும், முட்டை வடிவ 

சதைக் கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் உடையப் பால் போன்ற சாறுள்ள மரம். 

இதன் பூக்கள் 2.5 – 5 செ.மீ. நீளமுடையது. பூக்கள் இனிக்கும். இதன் விதைகள் 2.5 – 5 செ.மீ. நீளமிருக்கும். 

இலுப்பை மரத்தின் அற்புதம்... மஹுவா பானம் !

தேங்காய் எண்ணெய்க்கும், நெய்யுக்கும் பதிலாக அந்தக் காலத்தில் இதன் எண்ணெய்யைப் பயன்படுத்தினார்கள். 

இதன் எண்ணெய் மஞ்சள் நிறத்தில் அடர்த்தியாக இருக்கும். இதை நாற்று முறையில் தயார் செய்ய உரமிட்டு பாத்திகள் அமைத்து முற்றிய விதைகளை 1.5 – 2.5 செ.மீ. ஆழத்தில் நடவு செய்வது வழக்கம். 

அக்வா ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம் !

ஈரப்பதம் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 

பின் 15 நாள்களில் முளைக்க ஆரம்பிக்கும். பின் பைகளில் போட்டு நிழலில் ஒரு வருடம் வளர்க்க வேண்டும். அதன் பின் நடவு செய்யலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)