மதியம் சாப்பிட்டதும் தூக்கம் வருவது ஏன்?

0

இரவு எவ்வளவு நன்றாகத் தூங்கினாலும் சரி, தூங்கவில்லை என்றாலும் சரி மதிய நேரத்தில் சில நிமிடங்களாவது தூங்குவது மிகப்பெரிய புத்துணர்ச்சியைத் தரும். 

மதியம் சாப்பிட்டதும் தூக்கம் வருவது ஏன்?
Nap என்று சொல்லப்படும் 15 முதல் 30 நிமிடம் வரை தூங்கி எழுந்து கொள்வது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளித்து எஞ்சிய பொழுதுக்காக, சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்கும்.

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு எனற சொல்வழக்கு உண்டு. உண்டதும் நம் இறைப்பை தன் ஜீரண வேளையில் ஈடுபட அதிக இரத்தம் தேவை. 

ஆகையினால் மற்ற உறுப்புகளுக்கு செல்ல வேண்டிய இரத்தம் இறைப்பைக்குச் செல்வதால் களைப்பு தூக்கம் வருகிறது.

சூப்பரான மொறு மொறு ஜவ்வரிசி தோசை செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் மதிய உணவு சாப்பிட்ட உடனேயே கண்கள் சொருகி தூக்கம் சொக்கும். 

அவ்வாறு மதிய உணவு சாப்பிட்டவுடன் தூக்கம் வருவது இயல்பானது தானா என்றால் இல்லை! இது ஈட்டிங் டிஸ்ஆர்டர் என்று ஒரு வகையான குறைபாடு. 

மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் பல நேரங்களில் நீண்ட நேரத் தூக்கமாக மாறி, மிகவும் சோர்வாக்கி விடும். 

அது மட்டுமில்லாமல், கல்லூரி, அலுவலகம் என்றெல்லாம் எப்படித் தூங்க முடியும்? மதிய உணவு சாப்பிட்ட பின் தூங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

மதிய உணவு சாப்பிட்ட பின் தூக்கம் வருகிறது என்றால், 

மதியம் சாப்பிட்டதும் தூக்கம் வருவது ஏன்?

அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian rhythm-களில் ஏற்படும் மாறுதல்கள் இதற்கு காரணமாகிறது. 

மேலும் உணவு உண்ட பிறகு இன்சுலின் அளவு உடலில் உயர்வதால் அது மெலடோனின் என்கிற ஹார்மோன் சுரப்பதை அதிகப்படுத்துகிறது. 

இதனால் ஒருவித மயக்க நிலை ஏற்படும். மேலும் இதன் விளைவாக வேலையில் கவனமின்மை ஏற்பட்டு, பணியை சரி வர செய்ய இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.

மதிய நேர உறக்கத்தை ஏற்படுத்துவதற்கு மருத்துவரீதியான காரணிகளும், அதை தவிர்ப்பதற்கான வழி முறைகளும் உள்ளன.

Hypoglycemia

மதியம் சாப்பிட்டதும் தூக்கம் வருவது ஏன்?

நம் மதிய உணவுக்குப்பின் உடலின் சர்க்கரை அளவு திடீரென்று உயர்ந்து பின் தடாலென்று குறைகிறது. 

இதற்கு மாவுச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை உட்கொள்ளும் பழக்கங்கள் காரணமாக அமைகிறது. இதைத் தவிர்க்க முழு தானிய வகைகளை சாப்பிடலாம். 

காலை மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பயிறு வகைகள், பழங்கள், முந்திரி, பாதாம் போன்றவற்றை உட்கொள்வதன் மூலமாக சர்க்கரையின் அளவை சமநிலைப் படுத்தலாம்.

Endorphin ஹார்மோன் அளவு குறைதல் மகிழ்ச்சியின் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிற இந்த எண்டார்ஃபின் அளவு குறைந்தால் இயற்கையாகவே உடலில் சோர்வு ஏற்படும். 

இதைத் தவிர்க்க தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்வதைத் தவிர்க்க வேண்டும். சிறுசிறு இடைவேளைகளில் சோர்வு நீங்க நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ மேற்கொள்ளலாம்.

டேஸ்டியான முட்டைகோஸ் பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி?

Melatonin

தூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் ஹார்மோன் அளவு உயர்வதும், இரவில் சரி வர தூக்கம் இல்லாமல் இருப்பதும்  மதிய உணவு உண்டபின் வரும் தூக்கத்திற்கு காரணமாகிறது. 

இதைத் தவிர்க்க வெளியில் சென்று வெயில் உடலில் படும்படி  நடப்பதால் வைட்டமின் டி-யை அதிகரிக்கச் செய்து, மெலடோனின் அளவைக் குறைக்கிறது.

Dehydration

மதியம் சாப்பிட்டதும் தூக்கம் வருவது ஏன்?

குளிர்சாதன வசதியுடைய அலுவலக வேலையானது தண்ணீர் தாகத்தைக் குறைத்துவிட்டது. இதனால் உடல்  வறட்சியாகி சோர்வு உண்டாகும். 

இதைத் தவிர்க்க அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் மூலம் சோர்வு நீங்கி, சுறுசுறுப்பாக வேலை  செய்யலாம்.

அசத்தலான சீஸ் பிரெட் போண்டா செய்வது எப்படி?

Metabolic Syndrome

உணவுக்குப் பின் எடுத்துக் கொள்ளப்படும் இனிப்புப் பண்டங்கள் மற்றும் குளிர்பானங்கள் வளர்சிதை மாற்றங்கள் என்று சொல்கிற 

Diabetes, BP, Obesity போன்ற நிலைகளை மேலும் பாதிக்கும் என்பதால் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

தூக்கம் வராமல் இருக்க மூன்று விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்.

1. புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும்.

2. மாவுச் சத்து நிறைந்த உணவுகளைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.

3. மதிய உணவு நேரத்தில், சில உணவுகள் ஆபத்து, அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

மதியம் சாப்பிட்டதும் தூக்கம் வருவது ஏன்?
பொதுவாகவே மதிய நேரத்தில் அரிசிச் சாதம் கொஞ்சம் அதிகம் சாப்பிட்டாலே, மந்தமாகத் தோன்றும். எனவே மதிய நேரத்தில் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. 

அதற்காக முழுவதுமாக கார்ப் உணவுகளைத் தவிர்க்கக் கூடாது. அரிசிச் சாதம் அல்லது சப்பாத்தி உடன், புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அசைவ உணவுகளில் புரதச் சத்து நிறைந்து இருக்கிறது. எனவே சிக்கன், மட்டன் அல்லது மீனைப் பொறிக்காமல், கிரில் செய்து, வேக வைத்து டோஸ்ட் செய்து மதிய உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

அதிலிருக்கும் புரதச் சத்து உங்களுக்கு ஆற்றல் தருவதோடு மட்டுமல்லாமல் குறைவான கலோரிகளை உட்கொள்ள வைக்கிறது. மேலும், மதிய நேரத்தில் சோர்வையும் தூக்கத்தையும் தடுக்கிறது.

அரேபியன் ரெசிபி மொறுமொறுப்பான குனாஃபா செய்வது எப்படி?

இதற்கு அடுத்ததாகக் காய்கறிகள் மற்றும் பழங்களின் கலவையைச் சாப்பிடும் பொழுது அது உங்கள் மனநலத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துக்கள் உள்ளன. இவை உங்களைப் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும். 

இதனால் நீங்கள் தூங்குவதைத் தவிர்க்கலாம். சரியான உணவுகளை எடுத்துக் கொள்வது முக்கியமாக உள்ளது.

சரிவிகித உணவு என்று கூறும் வகையில் கொஞ்சம் சாதம், முட்டை, அசைவ உணவு சாப்பிடுவார்கள். ஏதேனும் அசைவம், மற்றும் காய்கறிகள், கீரை உணவு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். 

காய்கறிகளைக் கூட வேக வைத்து அல்லது கூட்டு போலச் சமைத்துச் சாப்பிடலாம். இதன் மூலம் மதியம் தூங்குவதைத் தவிர்க்க முடியும்.

மாவுச்சத்து என்று சொல்லும் பொழுது அரிசியை, உருளைக்கிழங்கு, அல்லது சப்பாத்தி தான் பெரும்பாலானவர் களுக்குத் தோன்றும். 

ஆனால் அரிசியைத் தவிர்த்து மைதா மாவில் கோதுமை மாவில் செய்யப்படும் வேறு சில உணவுகளும் அதிக மாவுச்சத்து நிறைந்தவை தான். 

உதாரணமாக மதிய உணவுக்கு எனக்கு வழக்கமாகச் சாப்பிடும் மீல்ஸ் அல்லது மினி மீல்ஸ் மற்றும் சாத வகைகள் எதுவும் தேவையில்லை;

நான் அதற்குப் பதிலாக நூடுல்ஸ் அல்லது ஒரு பர்கர் அல்லது ஒரு மினி பீட்சா சாப்பிட்டுக் கொள்வேன் என்று நீங்கள் கூறினால், 

நீங்கள் வழக்கமாகச் சாப்பிடும் மதிய உணவை விட இந்த உணவுகளில் அதிக கலோரிகள் மற்றும் அதிக மாவுச்சத்து உள்ளன. இவற்றை சாப்பிட்டால் உடனடியாக கண்களைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வரும். 

எனவே மதிய நேரத்தில் பீட்சா, நூடுல்ஸ், பர்கர், பாவ்பாஜி, பிரெட் வகைகள் மற்றும் எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட உணவுகளை நீங்கள் முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.

தீர்வுகள் என்ன?

மதியம் சாப்பிட்டதும் தூக்கம் வருவது ஏன்?

வைட்டமின் சி நிறைந்த கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற பழ வகைகளை உட்கொள்வதால் கொழுப்பை ஆற்றலாக மாற்றி சோர்வை நீக்கலாம். 

உணவில் சரிபாதி நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கால் பகுதி புரதம் மற்றும் கால் பகுதி முழு தானியமாக எடுத்துக் கொள்வதை பழக்கமாக்க வேண்டும். 

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் கண்களில் தெரியும் அறிகுறிகள் ! 

தேவையான தூக்கம், அளவான உடற்பயிற்சி, சரிவிகித உணவுப் பழக்கம், உணவை மென்று உண்ணுதல் போன்றவை நமது மதிய தூக்கத்தைப் போக்கி,  சுறுசுறுப்பாக வேலை செய்ய வழிவகுக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)