மின் இணைப்புடன் ஆதார் எண்ணை ஆன்லைனில் இணைப்பது எப்படி?

0
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் நம்பரை இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியதோடு அதற்காக சிறப்பு முகாம்களையும் அமைத்துள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை ஆன்லைனில் இணைப்பது எப்படி?
தமிழகத்தில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 

மின்சார எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக இன்று முதல் சிறப்பு முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன. 

வரும் டிசம்பர் 31 வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் இதில் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
 
மின் நுகர்வோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. சலுகைகளை பெற விரும்பும் தகுதியான நபர் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் முறைகேட்டை தடுக்க ஆதார் எண் இணைக்கும் பணி துவங்கியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்நுகர்வோரின் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு மின்வாரியம் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வருகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருக்கும் நுகர்வோர், ஆதார் எண் இணைப்பது எப்படி?
மேலும் ஒரு சில மின்நுகர்வோர் 4 அல்லது 5 வீடுகள் வைத்திருப்பார்கள். மேலும் ஒரே வீட்டிற்கு கீழ் தளம்  மாடி என ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பை பெற்றிருப்பார்கள். 

அதாவது  ஒரே பெயரில் நான்கைந்து வாடகை வீடுகளுக்கு மின் இணைப்பை வைத்திருக்கின்றனர். 

அவர்கள் மின் இணைபுகளுடன் ஆதாரை எப்படி இணைப்பது என்பது குறித்து பொதுமக்களிடையே குழப்பம் இருந்து வந்தது. 

இந்நிலையில், மின்நுகர்வோர் தாங்கள் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளுக்கு ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் 

அதே போல் வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கும் பட்சத்தில், அந்த வீட்டில் குடியிருக்கும் வாடகை தாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின் இணைப்புடன் இணைக்கலாம். 

இதற்கான வசதிகளும் மின்வாரிய இணைய தளத்தில் செய்யப் பட்டுள்ளன.
வாடகை வீட்டில் இருப்பவர்கள் தாங்கள் இருக்கும் வாடகை வீட்டில் உள்ள மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது. 
இதயத் துடிப்பை சீராக்கி, ரத்த ஓட்டத்தை சமப்படுத்தும் ஏலக்காய் ! 
மின் நுகர்வோர் யார் என்ற விவரத்திற்காக மட்டுமே இந்த விவரம் பெறப்படும். வீட்டின் உரிமையாளர் பெயரில் மட்டுமே மின் இணைப்பு இருக்கும். 

மின் இணைப்பு எண்ணின் பெயரை வீட்டு உரிமையாளர் மட்டுமே மாற்றம் செய்ய முடியும். 

வாடகைக்கு வசித்தவர் வேறு வீட்டிற்கு குடி பெயர்ந்து விட்டால் , புதிதாக வருபவர்கள் ஆதார் எண் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். 

யாரெல்லாம் ஆதார் எண் இணைக்க வேண்டும்
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை ஆன்லைனில் இணைப்பது எப்படி?
முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெரும் வீட்டு நுகர்வோர், 

குடிசை நுகர்வோர், 

பொது வழிபாட்டுத் தலங்கள், 

விவசாய பயன்பாடு மின் இணைப்புகள், 

விசைத்தறி, 

கைத்தறி நுகர்வோர்கள் 

என மானியம் பெரும் நுகர்வோர்கள் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
யாரெல்லாம் ஆதார் எண் இணைக்கத் தேவையில்லை

தொழிற்சாலைகள், 

கடைகள், 

நிறுவனங்கள் 

போன்ற மானியம் பெறாத நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை என அறிவிக்கப் பட்டுள்ளது.
 
இந்நிலையில் ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வசதி அளிக்கப் பட்டுள்ளது.

ஆன்லைனில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி?
முதலில் மின்வாரிய அதிகாரபூர்வ இணையதளம் செல்லுங்கள்   www.tangedco

அடுத்து அதில் உள்ள CONSUMER INFO என்பதை கிளிக் செய்யுங்கள்

அடுத்து அதில் உள்ள TANGEDCO  link your service connection with aadhar 

அல்லது nsc.tnebltd.gov.in இந்த லின்ங்கை கிளிக் செய்யுங்கள்

அடுத்து அதில் உங்கள் மின் இணைப்பு எண்ணை முழுமையாக பதிவிட்டு என்டர் கொடுக்கவும்

அடுத்து அதில் உங்கள் மின் இணைப்பு எண்ணுக்கு கீழ் உங்கள் மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்கம் காண்பிக்கப்படும்.

கொலஸ்ட்ரோல் அதிகரிப்பினால் மூளை அடைப்பும் ஏற்படலாம் !

அந்த எண் சரி என்றால் யெஸ் என்பதை கிளிக் செய்யுங்கள் இல்லை என்றால் நோ என்பதை கிளிக் செய்து தற்போது உங்களிடம் உள்ள மொபைல் எண்ணை பதிவிட்டு என்டர் கொடுங்கள்.

அடுத்து உங்கள் போனுக்கு வரும் ஓடிபியை அங்கு பதிவிடுங்கள்

அதன் பின்பு வரும் பக்கத்தில் உங்கள் பெயர் , ஆதார் எண் மற்றும் உங்கள் ஆதாரை ஸ்கேன் செய்து அப்லோடு செய்யுங்கள்

அவ்வளவுதான் உங்கள் மின் இணைப்புடன் உங்கள் ஆதார் எண் இணைப்பு பூர்த்தி ஆகி விட்டது.

நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருந்தால் இதே வழிமுறையை பயன்படுத்தி உங்கள் அனைத்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இனைக்கலாம்.

மேலும் மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட 

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை ஆன்லைனில் இணைப்பது எப்படி?

100 யூனிட் மானிய மின்சாரம் தொடரும் ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானிய மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் 

தகவல் வதந்தி என்று மின் வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார். 

வாடகை வீட்டில் குடியிருப்போர் மின் இணைப்புடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கலாம். 

தெரு நாய்களை அரவணைக்கும் மதுரை பெண் - வீதி வீதியாக சென்று உணவு !

வாடகைக்கு குடியிருப்போர் ஆதார் எண்ணை இணைக்கும் போது  வீட்டின் உரிமையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் உறுதி செய்யப்படும்.

அதே போல் வீட்டின் மின் இணைப்பு தாத்தா, அல்லது, தந்தை, அம்மா என அவர்கள் பெயரில் இருந்து அவர்கள் இறந்து விட்டால் நீங்கள் உங்கள் ஆதாரை கொடுத்து இணைத்து கொள்ளலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)