கான்பூர் - உத்தர பிரதேசத்தில், மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்வதை வீடியோ எடுத்த கணவன், அதை உறவினர்களுக்கு போட்டுக் காட்டிய கொடூரம் அரங்கேறி உள்ளது. 

மனைவி தற்கொலை செய்வதை வீடியோ எடுத்த கணவன் !

உ.பி.,யின் கான்பூரைச் சேர்ந்தவர் சஞ்சய் குப்தா, 37, இவரது மனைவி சோபிதா, 32. இருவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 

குடலில் உள்ள புழுக்களை அழிக்கும் வைத்தியங்கள்

இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், சமீபத்தில் சோபிதா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது பெற்றோருக்கு சஞ்சய் குப்தா தகவல் தெரிவித்தார். 

வீட்டுக்கு வந்து பார்த்த போது, சோபிதா படுக்கையில் பிணமாக கிடந்தார். முதலுதவி செய்ததாகவும், ஆனால் அது பலன் அளிக்கவில்லை என்றும் சஞ்சய் குப்தா கூறினார். 

சந்தேகம் அடைந்த உறவினர்கள், இது குறித்து சஞ்சயிடம் விசாரித்த போது, 'சோபிதா ஏற்கனவே இதுபோல் பலமுறை தற்கொலைக்கு முயன்றார். அப்போது காப்பாற்றி விட்டேன். 

இப்போது காப்பாற்ற முடியவில்லை' என்றார். இதற்கு ஆதாரமாக அவர் எடுத்த ஒரு வீடியோவையும் உறவினர்களுக்கு போட்டுக் காட்டினார். 

அதில் சோபிதா, தன் வீட்டில் படுக்கையில் ஏறி நின்று, புடவையில் துாக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். இதை தடுக்காமல், சஞ்சய் குப்தா வீடியோ எடுக்கிறார். 

நகம் பெயர்ந்தால் என்ன செய்வது தெரியுமா?

பின், தன் கழுத்தில் மாட்டியிருந்த சுருக்கை சோபிதா அகற்றுவதுடன், அந்த வீடியோ முடிவடைகிறது. 

இது குறித்து சோபிதாவின் உறவினர்கள் கூறியதாவது: 

இந்த வீடியோ ஏற்கனவே எடுக்கப்பட்டது என சஞ்சய் கூறுகிறார். எங்களுக்கு அதில் நம்பிக்கையில்லை. சோபிதா துாக்கிட்டு சாவதை ரசித்தபடியே அவர் வீடியோ எடுத்துள்ளார். 

துாக்கு மாட்டியவரை மருத்துவமனைக்கு துாக்கி செல்லாததும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சம்பவம் குறித்து சஞ்சய் குப்தாவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.