சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் மின்கசிவு காரணமாக ஃபிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஃபிரிட்ஜ் வெடித்து 3 பேர் பலி.. வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கு நேர்ந்த துயரம்

சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த விபத்தில் கிரிஜா (63) ராதா (55), ராஜ்குமார் (48) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

அரைக்கீரை பருப்பு குழம்பு செய்வது

ஊரப்பாக்கம் பகுதியில் கோதண்டராமன் நகரில் வெங்கட்ராமன் என்பவர் உயிரிழந்து ஓராண்டு கடந்த நிலையில், 

அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன் தினம் கிரிஜா, அவரது தங்கை ராதா, உறவினர் ராஜ்குமார் ஆகியோர் 3 பேரும் துபாயில் இருந்து சென்னை வந்துள்ளனர். 

கோயம்பேட்டில் பரபரப்பு திடீரென வெளிவந்த புகை இவர்கள் மூவரும் நேற்றிரவு ஒரே அறையில் தூங்கிய நிலையில் அறையில் இருந்து புகையாக வந்துள்ளது. 

இதனால் பக்கத்து அறையில் தூங்கிய பார்கவி என்பவர் சந்தேகமடைந்து எழுந்து 3 பேரும் தூங்கிய அறையை திறக்க முயன்றுள்ளார். 

ஆனால் கதவை அப்போது திறக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

செக்ஸ் வீடியோ மூலம் பணம் சம்பாதிக்கும் இந்திய தம்பதிகள் !

பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து பார்த்தபோது 3 பேரும் இறந்து கிடந்தனர். 

அப்போது அந்த அறையில் இருந்த ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 

ரெப்ரிஜிரேட்டர் கம்ப்ரஸர் வெடித்து கேஸ் கசிவு ஏற்பட்டு 3 பேரும் தீயில் கருகி இறந்தது தெரிய வந்துள்ளது. 

இது மட்டுமல்லாமல் இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாரதி, குழந்தை ஆராதயா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். 

ஃபிரிட்ஜ் வெடித்து 3 பேர் பலி.. வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கு நேர்ந்த துயரம்

ஃபிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல் உயிரிழந்த வெங்கட்ராமனின் வீடு கடந்த ஒரு ஆண்டாக பூட்டிய நிலையில் இருந்துள்ளது. 

இதனால் ஒரு ஆண்டுக்கு பின் ஃபிரிட்ஜ் உள்ளிட்டவை பயன்படுத்தியதால், எதிர் பாராத விதமாக விபத்து நிகழ்ந்துள்ளது. 

DTCP அப்ரூவல் என்றால் என்ன? தெரியுமா உங்களுக்கு

துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த உறவினர்கள், ஃபிரிட்ஜ் வெடித்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.