ட்ரிபிள்ஸ் போன கிரிக்கெட் வீரர் லாரியில் சிக்கி பலி !





ட்ரிபிள்ஸ் போன கிரிக்கெட் வீரர் லாரியில் சிக்கி பலி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், அவர் மீது லாரி ஏறி உடல் நசுங்கி சம்பவத்திலே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

ட்ரிபிள்ஸ் போன கிரிக்கெட் வீரர் லாரியில் சிக்கி பலி !
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பாக்கம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு சூனாம்பேடு, அருகே உள்ள 

கடுக்களூர் கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, நள்ளிரவு தாம்பரம் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் வந்துள்ளனர்.

நாணயங்களில் புள்ளி நட்சத்திரக் குறியீடு ஏன்? அரிய தகவல் !

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த, சூனாம்பேடு அடுத்துள்ள கடுக்களூர் பகுதியைச் சேர்ந்த 

சரவணன் என்பவரின் மகன், ஷாரூக்கான் (22)  என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உள்ளார் . 

திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி, வந்த கனரக லாரி  அவர் மீது ஏறி இறங்கி உள்ளது. இதில் பலத்த காயம் ஏற்பட்ட ஷாருக்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

உடலை மீட்டு மதுராந்தகம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் சூனாம்பேடு ஆகிய பகுதிகளில் உயிரிழந்த ஷாருக்கான் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரராக இருந்து வந்துள்ளார். 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திண்டிவனம், விழுப்புரம், உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை குவித்துள்ளார். 

நுங்கு சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் !

ஷாருக்கான் அப்பகுதியில் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரராக இருந்து வந்ததால், சுற்றுவட்டார பகுதிகளில் பிரபலமாக இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில் தான் நண்பர்களுடன் மூன்று பேராக, இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது,  விபத்து நடந்த இரு சக்கர வாகனத்தில் இருவர் செல்வதே சிரமம். 

ஆனால் இளைஞர்கள் மூன்று பேரும் நள்ளிரவில் வேகமாக சென்றுள்ளனர். பின்பக்கம் அமர்ந்து வந்த இளைஞர் நிலை தடுமாறி கீழே விழுந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

மனைவிகள் எதிர்பார்க்கும் விஷயம் !

இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் பயணிக்க கூடாது என்ற விதிமுறை இருந்தும், அலட்சியம்  காரணமாக, சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரராக இருந்த  ஷாருக்கானின் உயிர் பிரிந்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)