நாணயங்களில் புள்ளி நட்சத்திரக் குறியீடு ஏன்? அரிய தகவல் !

நாணயங்களில் புள்ளி நட்சத்திரக் குறியீடு ஏன்? அரிய தகவல் !

0

இந்திய ரூபாய் நோட்டுகள் நாம் நினைப்பது போல, ஆரம்ப காலங்களில் பேப்பர்களில் தயாரிக்கப்பட வில்லை. பருத்தியின் மெல்லிய நூலிழைகளால் தயாரிக்கப்பட்டது.

நாணயங்களில் புள்ளி நட்சத்திரக் குறியீடு ஏன்? அரிய தகவல் !
இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்தான் நாசிக் (Nashik) இங்கு தான். இந்திய ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்படுவது நீங்கள் அறிந்த செய்தியே! 

ஆனால் நீங்கள் அறியாத செய்தி ஒன்று உள்ள‍து. ஆம், நாணயங்களில் ரகசிய குறியீடுகள் இருப்ப‍தும் அவை எவற்றைக் குறிக்கின்றன என்பதையும் நீங்கள் அறிவீர்களா? 

தொடை, பிட்டம், மார்பு போன்ற இடங்களில் கோடு வர காரணம்?

பொதுவாக‌ நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள‍ ஆண்டுக்குக் கீழே ஒரு புள்ளியோ, டைமண்ட் வடிவமோ, நட்சத்திர வடிவமோ 

அல்ல‍து இது போன்ற எந்த‌ குறியீடுகளும் இல்லாமல் இருப்ப‍தை கவனியுங்கள். இவை தான் இந்திய அரசின் ரகசிய குறியீடுகள்.

இந்தியாவில்  முதன் முதலில் பெங்கால் பேங்க், ஹிந்துஸ்தான் பேங்க் போன்ற தனியார் வங்கி நிறுவனங்கள்தான் ரூபாய் தாள்களை அச்சிட்டு வெளியிட்டன. 

18ம் நூற்றாண்டில் தான் இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் வெளி வந்திருக்கின்றன.

1934ல் ஆர் பி ஐ சட்டம் கொண்டுவரப்பட்டு, அரசாங்கமே ரூபாய் நோட்டுகளை அச்சிட முடியும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆர் பி ஐ முதன் முதலாக 1938ம் ஆண்டு கிங் ஜார்ஜ் உருவப்படம் கொண்ட ஐந்து ரூபாய் நோட்டை வெளியிட்டது.

அதே ஆண்டு இந்திய அரசு மிக அதிக மதிப்புடைய 10,000 ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்டது. பின் அந்த நோட்டு 1946 மற்றும் 1978ம் ஆண்டு செல்லாது என அறிவிக்கப்பட்டது. 

தற்போது 2016ல் ரூ.500 மற்றும் 1000 செல்லாது என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. நாம் பார்க்கும் ஒவ்வொரு சிறுசிறு புள்ளிகளுக்கும் கூட கட்டாயம் அர்த்தங்கள் உண்டு. 

ஒரு நாட்டினுடைய நாணயங்களை அவ்வளவு எளிதாக, ஏனோ தானோவென்று அச்சடித்து விட முடியாது. நாணயங்களில் நாம் வைக்கும் ஒவ்வொரு புள்ளிக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. 

மூக்கு குத்துவதால் நமக்குள் ஏற்படும் மாற்றங்கள் !

அதிலும் குறிப்பாக, நம்முடைய இந்திய நாணயங்களில் உள்ள புள்ளி மற்றும் நட்சத்திரக் குறிகளுக்கென தனி அர்த்தங்கள் உண்டு.

நம்முடைய இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக், தேவாஸ், மைசூர் ஆகிய இடங்களிலும், நாணயங்கள் மும்பை, நொய்டா, கொல்கத்தா ஆகிய இடங்களிலும் அச்சடிக்கப் படுகின்றன. 

இந்த நாணயங்களின் இரண்டு பக்கங்களில் ஏதேனும் ஒரு பக்கத்தில் எந்த ஆண்டு அச்சடிக்கப்பட்ட நாணயம் என்ற குறிப்பு இருக்கும்.

அதற்கு கீழே சில நாணயங்களில் புள்ளியும், சில நாணயங்களில் நட்சத்திரக் குறியும் சிலவற்றில் டைமண்ட் குறியீடும் இருக்கும். 

சில நாணயங்களில் எந்த குறியீடுகளும் இருப்பதில்லை. இந்த குறியீடுகளுக்கு என்ன தான் அர்த்தம்.

நாணயங்களில் புள்ளி நட்சத்திரக் குறியீடு ஏன்? அரிய தகவல் !
அதன் அர்த்தம், அந்த குறியீடுகள் குறிப்பிட்ட நாணயம் எங்கு அச்சடிக்கப்பட்டது என்பதைக் குறிப்பதாகும். 

நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள‍ ஆண்டுக்குக் கீழே ஒரே ஒரு புள்ளி குறியீடு இருந்தால் அது தில்லியிலும் தயாரிக்க‍ப்பட்ட‍து என்றும், 

உங்கள் காம உணர்வை கட்டுப்படுத்துவது எப்படி?

டைமண்ட் குறியீடு இருந்தால் அது மும்பையில் தயாரிக்க‍ப்பட்ட‍து என்றும், நட்சத்திரக் குறியீடு இருந்தால் அது ஹைதராபாத்தில் தயாரிக்க‍ப்பட்ட‍து என்றும் 

இது போன்ற‌ எந்தக் குறியீடுகளும் இல்லாமல் இரு ந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது என்றும் தெரிந்து கொள்ளலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)