இந்தியாவைத் தோற்கடித்தால், ஜிம்பாப்வே பையனைத் திருமணம் செய்வேன்... பாக். நடிகை !

0

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4 புள்ளிகளில் இருக்கும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற நாளை வங்கதேசத்தை வீழ்த்தினால் மட்டும் போதாது. 

இந்தியாவைத் தோற்கடித்தால், ஜிம்பாப்வே பையனைத் திருமணம் செய்வேன்... பாக். நடிகை !

இந்தியாவிற்கும் ஜிம்பாப்வேவிற்கும் நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா தோற்றால் மட்டுமே பாகிஸ்தானின் கனவு நினைவாகும். 

நம் உடல் அதிக வலிமையோடு இருக்க மூங்கில் அரிசி !

காரணம், அப்போது தான் இந்திய அணி, 6 புள்ளிகளிலேயே இருக்கும். பாகிஸ்தானும் 6 புள்ளி யிலிருந்தாலும் அவர்களின் நெட் ரன்ரேட் அதிகம் என்பதால் அவர்களே அரையிறுதிக்குத் தகுதி பெறுவார்கள்.

இந்நிலையில் பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி ட்வீட்  ஒன்றைப் பதிவிட்டுள்ளார். 

அதில், ஜிம்பாப்வே அணி இந்தியாவைத் தோற்கடித்தால், ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த நபரைத் திருமணம் செய்து கொள்வேன் என்று சேஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் இந்தியாவிற்கும் - ஜிம்பாப்வேயிற்கும் இடையே நடைபெறும் போட்டியில் இந்தியா தோற்றுவிடும். 

மனிதர்களைக் காக்கும் பாக்டீரியாக்கள் !

சிகந்தர் ராசா நன்றாக விளையாடி பாகிஸ்தானை அரையிறுதிக்குத் தகுதி பெறச் செய்வார் என்று தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரியின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings