ஏன் குடைகள் கருப்பு நிறத்தில் தயாரிக்கப்படுகிறது?

0

குடைகள் இயல்பாக அனைவராலும் பயன்படுத்தப்பட்ட காலங்களில் பெரும்பாலும் மழைக்காகவே உருவாக்கப்பட்டன.

ஏன் குடைகள் கருப்பு நிறத்தில் தயாரிக்கப்படுகிறது?

ஆரம்ப நாட்களில் குடைகள் அடர்த்தியான பருத்தி துணியால் செய்யப்பட்டன. மழையில் ஈரமாகும் போது, ​​அவை வறண்டு போக நீண்ட நேரம் ஆகும். 

கறுப்புத் துணியால் செய்யப்பட்ட குடைகள் மற்ற வண்ணத் துணியால் செய்யப்பட்டதை விட வேகமாக உலர்ந்திருப்பது கண்டறியப்பட்டது. 

எனவே குடைகள் தயாரிப்பதில் கறுப்பு துணியைப் பயன்படுத்துவது ஒரு நிலையான நடைமுறையாக மாறியது.

கறுப்பு அல்லது இருண்ட மேற்பரப்புகள் கொண்ட நிறங்கள் மற்ற நிறங்களை விட அதிக வெப்பத்தை உறிஞ்சுவதால் கறுப்புத் துணி வேகமாக காய்ந்து விடும். 

பெண்கள் சரியாக தூங்காவிட்டால் புற்றுநோய் தாக்கும் அபாயம் !

கறுப்பு நிற குடைகளில் ஆவியாதல் செயல்முறை வேகமாக இருக்கும்(அதிக வெப்ப உறிஞ்சுதலின் காரணமாக).

ஆனால் இன்றைய தினங்களில் நாம் பயன்படுத்தும் குடைகள் தண்ணீரில் நனையாத, நீர்விலக்கு பண்பு கொண்டவையாக உள்ளன. 

எனவே, உலர்த்துவது இனி ஒரு பிரச்சினையாக இல்லாததால், குடைகள் எல்லா நிறங்களிலும் வண்ணங்களிலும் வருகின்றன.

வேறு காரணம்?

ஏன் குடைகள் கருப்பு நிறத்தில் தயாரிக்கப்படுகிறது?

முன்பு போலல்லாமல் தற்போது தொழில்நுட்பங்கள் மூலம் பருத்தியல்லாமல் செயற்கை மூலக்கூறுகளைப் பயன்படுத்தி குடைகள் தயாரிக்கப் படுகின்றன. 

இவற்றில் வேறு எந்த நிறக் குடையை விடவும் மிகச் சிறந்ததாகவும் வேகமாகவும் வெப்பத்தை உறிஞ்சும் மேம்பட்ட திறனைக் கொண்டிருப்பதால் தான் இன்றும் கறுப்பு வண்ண குடைகள் வருகின்றன.

ஆணுறுப்பு, மார்பகம் மட்டும் கருமையாக காணப்படுவது ஏன்?

வெப்பத்தை அதிகமாக உறிஞ்சினால் அதன் கீழே இருக்கும் நமது உடலை வெப்பம் பாதிக்காதா? அப்படியானால் இந்த குடை பயன்படுத்த உகந்தது இல்லை தானே?

இப்போது இன்னொன்றும் நாம் கவனிக்க வேண்டும். கறுப்பு நிற குடைகளால் உறிஞ்சப்பட்ட வெப்பமானது விரைவான விகிதத்தில் விடுவிக்கப் படுகிறது. கீழே இருக்கும் நமது உடலை பாதிப்பது இல்லை.

ஆனாலும் குடைக்குள்ளாக வெப்பத்தை உணர முடிகிறதே?

ஏன் குடைகள் கருப்பு நிறத்தில் தயாரிக்கப்படுகிறது?

பெரும்பாலான குடைகள் அதன் உட்பகுதியில் வெள்ளி நிறத்தால் ஆக்கப்பட்டிருக்கும். குடைக்குள் வெப்பத்தைத் தடுக்கும் பொருட்டு கறுப்பு நிறமானது எல்லா திசைகளிலும் வெப்பத்தை வெளியேற்றுகிறது. 

ஆனால் வெள்ளி நிறம் ஒரு கண்ணாடியாக செயல்படுவதால் இது குடைக்குள் வெப்பத்தைப் பிரதிபலிக்கிறது. எனவே வெள்ளி பூசப்பட்ட குடை வெப்பத்தை சிறிதளவு உள்ளே பிரதிபலிக்கிறது. (மழை க்காலத்திற்கு ஏற்றது)

ஆண்கள் ஆபாச படம் பார்க்கலாமா ?

உட்பகுதியில் கறுப்பு நிறத்துடன் இருக்கும் குடையினுள்ளே சிறிது குளிர்ச்சியை உணரலாம். (கோடைக்காலத்திற்கு ஏற்றது)

மழை நேரத்திற்கு நீங்கள் வண்ணக் குடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெயிலுக்கு பயன்படுத்துவதானால் கறுப்பு குடைகளே சிறந்தது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)