ரெட் ஒயின் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் !

0
ரெட் ஒயின் அருந்துவதன் மூலமாகப் பெண்கள், தங்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்னையை சரிசெய்ய முடியும் என தெரிய வந்துள்ளது. 
ரெட் ஒயின் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்

இது தொடர்பாக, அமெரிக்கா வின் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஒர் ஆய்வை நடத்தி உள்ளனர். 

அதில், ரெட் ஒயின், திராட்சைப் பழம், சாக்லேட், பாதாம், பிஸ்தா போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகளவு சாப்பிடும் பெண்களுக்கு, ஹார்மோன் சுழற்சி சீராகவும், பிரச்னை ஏதுமின்றி, இயல்பாக வும் உள்ளதாகக் கூறப் பட்டுள்ளது.
இவ்வகை உணவுப் பொருட்களில் உள்ள பாலிஃபீனால் என்ற வேதிப் பொருள், ஹார்மோன் செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது. 

இதன் மூலமாக, உடல் எடை அதிகரிப்பு, மாதவிடாய் பிரச்னை, முடி கொட்டுதல், சரும பிரச்னை உள்ளிட்ட பிரச்னை களை எளிதில் தீர்க்க முடிவதாக வும் அந்த ஆய்வில் கூறப் பட்டுள்ளது.

குறிப்பாக, அதிக உடல் எடை காரணமாக நீரிழிவு நோய் ஏற்படுவதை முற்றிலு மாக தடுக்க இந்த பாலிஃபீனால் பயன்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings