இரத்தக்கட்டு என்றால் என்ன? இரத்தம் உறைய காரணம் என்ன?

0

உடலில் ஏதேனும் வெட்டுகாயம் ஏற்பட்டால் ரத்தம் பீறிக்கொண்டு வெளியேறும். ஆனால், சிறிது நேரத்தில் அது தானாகவே நின்று விடும். 

இரத்தக் கட்டு என்றால் என்ன? ரத்தம் உறைய காரணம் என்ன?

ஏனென்றால் ரத்தத்திலுள்ள பைப்ரினோஜன் எனப்படும் நார்புரதம் வெளிக்காற்று பட்டவுடன் ஓர் வலை போலப் பின்னிக் கொண்டு மேற்கொண்டு ரத்தம் வெளியேறாமல் காக்கிறது. 

இதற்கு ரத்தம் உறைதல்' என்று பெயர். ரத்தம் உறைதல் என்பதை நாம் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. 

நம்முடைய உடலில் ரத்தம் நீர்மமாக இருந்தால் தான் உடலின் எல்லா பகுதிகளுக்கும் ரத்தம் சீராகப் பாய்ந்தோடும். 

அப்படி ஏதேனும் பிரச்சினையால் ரத்தம் உறையாமல் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தான் வைட்டமின் டி நிறைந்த உணவுகளையும் சப்ளிமெண்டரிகளையும் எடுத்துக் கொள்கிறோம். 

குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது?

ஆனால் நம் உடலுக்குள் ரத்தம் உறைதல் குறித்த விழிப்புணர்வு நம்மிடையே பெரிதாக இல்லை. அப்படி ரத்தம் உறைவதற்கான அறிகுறிகளை எப்படி கண்டு கொள்வது என்பது குறித்துப் பார்க்கலாம்.

இரத்தம் உறைதல் காரணம்

இரத்தக் கட்டு என்றால் என்ன? ரத்தம் உறைய காரணம் என்ன?

இரத்த உறைதல் (Coagulation) என்பது காயம் ஏற்படும்பொழுது திசுக்கள் பாதிக்கப்படுவதனால் இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும் பொருட்டு நிகழும். 

இரத்ததில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் மற்றும் இரத்தத் தட்டுக்கள் உள்ளன. இரத்தப் பெருக்கைத் தடுக்க, இரத்தத் தட்டுக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

​ரத்தம் உறைதல்

இரத்தக் கட்டு என்றால் என்ன? ரத்தம் உறைய காரணம் என்ன?

சில நேரங்களில் எங்கயாவது இடித்து விட்டாலோ அல்லது அடிபட்டாலோ அல்லது கீழே விழுந்தாலோ நமக்கு இரத்தக் கட்டு ஏற்படுவது சகஜமான ஒன்று தான். 

பல நேரங்களில் இந்த இரத்தக் கட்டை நாம் பெரிதாக எடுப்பதில்லை. லேசாக தேய்த்து விட்டு அல்லது ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்து விட்டு சரி ஆகிடும் என்று விட்டு விடுவோம். 

விண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் கறையான்கள் !

ஆனால் சில நேரங்களில் நம்முடைய அலட்சிய போக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள். இரத்தக் கட்டு தீவிரம் அடையும் போது சில அறிகுறிகள் தென்படுகிறது. 

காயங்கள் நமது இரத்த குழாய்களில் அல்லது நரம்புகளில் இருக்கும் போது பிரச்சனை வேறு பக்கம் செல்கிறது என்று அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் ஹீமாட்டாலஜி (ASH) தெரிவித்துள்ளது.

​இரத்தக் கட்டுகள் கரைதல்

இரத்தக் கட்டு என்றால் என்ன? ரத்தம் உறைய காரணம் என்ன?

இரத்தக் கட்டு இயற்கையாகவே கரைந்து விட்டால் பிரச்சினை இருக்காது, இதுவே இதயம், மூளை, கை, கால்கள், நுரையீரல் மற்றும் 

அடிவயிறு போன்ற இடங்கள் என்றால் அவை வெவ்வேறு விதமான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. 

எனவே இந்த அறிகுறிகளை தெரிந்து கொண்டு உடனே சிகிச்சை பெறுவது நல்லது. சிலருக்கு ஊட்டச்சத்து பற்றாக் குறையால் கூட இந்த ரத்தக் கட்டுக்கள் ஏற்படும். 

அவை தானாகவே சரியாகி விடும். அப்படி தானாக சரியாகி விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை. உடலின் வெளியுறுப்புகளில் உணடாகும் ரத்தக்கட்டு கரைவதை உங்களால் எளிதில் கண்டு கொள்ள முடியும். 

தென்னாட்டில் பயன்படுத்தும் மருத்துவ பொக்கிஷம் முருங்கை !

இதுவே உடலின் உள்ளே உள்ளுறுப்புகளில் ஏதேனும் ரத்தக்கட்டுக்கள் இருந்தால் நம்மால் அவ்வளவு எளிதாகக் கண்டு கொள்ள இயலாது.

ரத்தக்கட்டைக் கரைக்க நிறைய வழிகள் இருக்கின்றன. முதலில் அடிபட்ட இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும். 

ஆமணக்கு இலை, நொச்சி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, விளக்கெண்ணையில் வதக்கி, வெள்ளைத் துணியில் வைத்துக் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். 

இதற்கு வீக்கத்தை உருக்கி ரத்தக்கட்டைப் போக்கும் தன்மை அதிகம்.

உணவுப் பழக்க முறைகள்

இரத்தக் கட்டு என்றால் என்ன? ரத்தம் உறைய காரணம் என்ன?

உண்ணும் உணவுப் பழக்க முறைகள் கூட ரத்தத்தை உறையச் செய்யாமல் ரத்தக் கட்டுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். 

ரத்தத்தை உறையாமல் பாதுகாக்கும் வைட்டமின் டி நிறைந்த சில உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமானது.

​கால்களில் ஏற்படும் தசைப்பிடிப்பு

இரத்தக் கட்டு என்றால் என்ன? ரத்தம் உறைய காரணம் என்ன?

பொதுவாக கால்களில் இரத்த உறைவு ஏற்பட்டால் அதை அலட்சியமாக விடாதீர்கள். உங்கள் கை அல்லது காலில் உள்ள நரம்புகளில் உருவாகும். 

இந்த உறைவுக்கு ஆழமான நரம்பு த்ரோம்போசிஸ் (deep vein thrombosis (DVT)) என்று அழைக்கப்படுகிறது. இந்த வகையான கட்டிகள் மிகவும் ஆபத்தானவை. 

இது பின்னாளில் கால் வலி அல்லது பிடிப்பு பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது. மேலும் கால்களில் உள்ள சிரை இரத்தக் குழாய்களில் ஆழமான பாதிப்பு இருந்தால் உயிருக்கே ஆபத்தாக நேரிடும். 

ராயப்பேட்டை மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

உறைந்த இரத்தம் காலிலிருந்து நுரையீரலுக்கு சென்றால் அங்கே அடைப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதை நுரையீரல் தக்கையடைப்பு என்கிறார்கள். 

இதனால் உயிர் போகக் கூடிய நிலை கூட ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே உடனே மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெறுவது நல்லது.

​நிற மாற்றம்

இரத்தக் கட்டு என்றால் என்ன? ரத்தம் உறைய காரணம் என்ன?

இரத்தக் கட்டு ஏற்பட்ட இடத்தில் இரத்த ஓட்டம் தடைபடுவதால் அந்த சருமம் சிவந்து போய் இருக்கும். 

எங்காவது இடித்துக் கொண்டாலோ அல்லது வேறு காரணங்களாலோ உங்களுடைய சருமத்தின் நிறத்தில் மாற்றம் காணப்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெற்று கொள்ளுங்கள்.

நீரிழிவு நோயாளிகளுக்கு இது இன்னும் வித்தியாசமானதாக இருக்கும். முதலில் எங்காவது அடிபட்டாலோ ரத்தக்கட்டு ஏற்பட்டாலோ ஆரம்பத்தில் சருமத்தின் நிறம் சிவப்பாக மாறும். 

ருசியான கருப்பட்டி கேரட் பால் செய்வது எப்படி?

நாளடைவில் அது அப்படியே கருமை நிறத்தில் மாறத் தொடங்கி விடும். பிறகு அந்த இடத்தின் நிறமே கருப்பாகி விடும். 

அதனால் நீரிழிவு நோயாளிகள் உடலில் காயங்கள் ஏற்படாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)