பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ரயில் முன் தள்ளி கொன்று விட்டு தப்பிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

கொலையில் முடிந்த காதல்... லவ் ஃபெயிலியர்.. பின்னணி !

இந்த நிலையில் கொல்லப்பட்ட சத்யா மற்றும் அவரை கொன்ற சதீஷ் ஆகியோர் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சென்னை அருகே உள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (47). இவரது மனைவி வரலட்சுமி (43). 

இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சத்யா(20). இவர் தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாமாண்டு படித்து வந்தார். 

ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த சத்யா தனது குடும்பத்தோடு சிறு வயதிலிருந்தே வசித்து வந்திருக்கிறார். 

அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23). இவரும் சத்யாவும் பள்ளி பருவத்தில் காதலித்ததும், சதீஷ் போதை பழக்கம் கொண்டவர் என தெரிந்ததால் அவரை விட்டு சத்யா விலகினார். 

சயனைட் கொலையாளி வைத்தியராய் - விசித்திரமான விஞ்ஞானி !

தற்போது சத்யா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களாக சதீஷுக்கும் சத்யாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. 

சதீஷின் நடவடிக்கை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி சத்யா அவரை தவிர்க்க தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனால் மனம் உடைந்த சதீஷ் சத்யாவை பல முறை பின் தொடர்ந்து சமாதானம் செய்ய முயன்றிருக்கிறார். தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து சதீஷ் சந்தியாவிடம் வற்புறுத்தி வந்துள்ளார். 

ஒரு முறை சத்யா படித்து வந்த கல்லூரிக்கு சென்றே சதீஷ் அவரை தாக்கியும் இருக்கிறார். இதற்காக கடந்த ஜூலை மாதம் அவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாம் பயன்படுத்தும் பற்பசையில் கார்பன் !

இந்த நிலையில் தினமும் கல்லூரிக்கு சத்யா மின்சார ரயிலில் செல்வது வழக்கம். அது போல் நேற்று மதியமும் கல்லூரி செல்ல பரங்கிமலை ரயில்நிலையத்திற்கு சத்யா வந்தார். 

சத்யாவை சந்தித்து அவரை சமாதானம் செய்ய முயன்றுள்ளார் சதீஷ். அப்போது இருவருக்கும் திடீரென சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. 

அந்த சமயம் பார்த்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. 

இதனிடையே காதல் தோல்வியால் ஆத்திரமடைந்த சதீஷ், சத்யாவை தண்டவாளத்தில் தள்ளி விட்டுவிட்டு தப்பியோடி விட்டார்.

கொலையில் முடிந்த காதல்... லவ் ஃபெயிலியர்.. பின்னணி !

அப்போது சத்யா மீது ரயில் சக்கரங்கள் ஏறி இறங்கியதால் மாணவியின் தலை தனியாகவும் உடல் தனியாகவும் சிதறியது. 

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சத்யா உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த சத்யாவின் தோழிகள் அழுது கொண்டே ஓடி வந்தனர்.

தலை துண்டான நிலையில் தண்டவாளத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்த சத்யாவின் உடலை கண்ட ரயில் நிலையத்தில் காத்திருந்த ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

சிறுநீரின் நிறத்தை கொண்டு இதை கண்டுபிடிக்கலாம்?

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த தகவலை அறிந்த சத்யாவின் தோழிகள் அழுது கொண்டே ஓடி வந்தனர். அவர்கள் ரயில்நிலைய போலீஸில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

இந்த நிலையில் சதீஷ் துரைப்பாக்கத்தில் இருப்பதை அறிந்த தனிப்படை போலீஸார் அவரை அதிகாலை கைது செய்தனர்.

இதனிடையே சத்யா இறந்த சம்பவம் குறித்து அங்கிருந்த அவரது தோழிகள் சத்யாவின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். 

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு மாணிக்கம் தனது மகளை நினைத்து கதறியுள்ளார். நேற்று முழுவதும் மன உளைச்சால் புழுங்கியுள்ளார். 

கொலையில் முடிந்த காதல்... லவ் ஃபெயிலியர்... பின்னணி !

இந்த நிலையில் மகளின் இழப்பை ஏற்க முடியாமலும் பிரிவை தாங்கி கொள்ள முடியாமலும் மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இந்த செடிகளை எப்போதும் தொட்டு விடாதீர்கள் - மரணம் கூட நேரலாம் !

முறிந்த காதலை ஒட்ட வைக்க இளைஞர் வெறி கொண்டதால் கொல்லப்பட்ட மாணவியின் உடலும், மகளின் பிரிவால் தற்கொலை செய்த தந்தையின் உடலும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளது. 

இரு உயிர்கள் பலியான சம்பவம் ஆதம்பாக்கத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.