புதை படிவங்களில் உருவான இமயமலை !

0

சில உண்மைகளை நம்மால் எளிதில் நம்ப முடியாது. நம்பாமலும் இருக்க முடியாது. கற்பனையோ, கட்டுக்கதையோ என்று யோசிக்கத் தோன்றும். 

புதை படிவங்களில் உருவான இமயமலை !
உதாரணமாக, இன்று உலகத்திலேயே உயர்ந்த மலையாக விளங்கும் இமயமலை ஒரு காலத்தில் ஆழ்கடலுக்குள் இருந்தது என்றால் யாராவது நம்புவார்களா? 

ஆனால் அது தான் உண்மை. நமது உலகம் தோன்றும் போது இப்போது கடல்கள் சூழ்ந்து காணப்படும் ஐந்து கண்டங்களும் அப்போதே இருந்தன. ஆனால் ஒரு வித்தியாசம். 

அவை இப்போது இருப்பதைப் போல் ஐந்து கண்டங்களாக இல்லை. உலகத்தின் சிறுபகுதி வெறும் நிலத்திட்டாகவும்,, பெரும்பகுதி நீரால் சூழப்பட்டதாகவும் இருந்தது. 

இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கும் நாகாசனம் !

ஆனால் அந்த நிலத்திட்டு நிலையாக இருக்கவில்லை. எப்போதும் நகர்ந்து கொண்டே இருந்தது. அதை கண்டங்களின் நகர்வு என்கிறார்கள். அதற்குக் காரணம் பூமி ஒரே திடப்பொருளாக இல்லாதது தான்.

பூமி முக்கியமாக நான்கு அடுக்குகளாகக் காணப்படுகிறது அவையாவன

பூமியின் மையத்தில் கனமான திடப் பொருளால் ஆன மையப் பகுதி அதைச் சுற்றி திரவ நிலையில் உள்ள புற மையம்.

அந்தப் புற மையத்தைச் சுற்றி ரப்பர் போன்ற மேன்டில் பகுதி. அந்த மேன்டில் மீள்தன்மை உடையது. கிட்டத்தட்ட பாகு நிலையில் இருக்கிறது.

மேன்டிலின் மீது தான் நாம் இருக்கும் நிலப்பகுதி மிதந்து கொண்டிருக்கிறது.

நம்முடைய நிலப்பகுதி ஒரே துண்டாக இல்லாமல் பல துண்டுகளாக இருப்பதால் அவை மேன்டிலின் மீது நகர்ந்து கொண்டே இருக்கின்றன. 

இதனால் ஒரு காலத்தில் நிலமாக இருந்த பகுதி இப்போது கடலாகவும், கடலாக இருந்த பகுதி இப்போது நிலமாகவும் இருக்கின்றன.

ரம்ஜான் முடிந்த பின் ஏற்படும் வயிற்று சிக்கல்களை சரி செய்ய?

அதாவது பூமியின் முகத்தோற்றம் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வருகிறது. நமது தமிழ்நாட்டுக்குத் தெற்கே லெமூரியாக் கண்டம் என்ற ஒரு நிலப்பரப்பு இருந்தது என்றும், 

புதை படிவங்களில் உருவான இமயமலை !

பின்னர் அதை கடல் கொண்டு விட்டது என்றும் படித்திருக்கிறோம். அதற்கு இலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளன.

இதே போல் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் ஈரானும், சீனாவும் ஒரே கடலால் இணைக்கப் பட்டிருந்தன. 

ஈரான், சால்ட் ரேஞ்ச், ஸ்பிடி, காஷ்மீர், இந்தோ -சீனா, சீனா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் இந்தப் பகுதிகள் அனைத்தும் ஒரே கடலால் இணைக்கப் பட்டிருந்தன என்பதை நிரூபித்திருக்கின்றன.

லடாக், நேபாளம் ஆகிய பகுதிகள் கூட கடலாகத் தான் இருந்திருக்கின்றன. 

இந்தப் பகுதிகள் எல்லாம் கடலாக இருந்தன என்று எதை வைத்துக் கூறுகிறார்கள்? பூமியின் வரலாற்றைப் பல்வேறு காலகட்டங்களாகப் பிரித்திருக்கிறார்கள். 

ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்தெந்தப் பகுதியில் என்னென்ன விலங்குகள் வாழ்ந்தன என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

தக்காளி சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கற்களா? உண்மை என்ன?

பழங்காலத்தில் வாழ்ந்த விலங்குகளில் சில பூமிக்கடியில், பாறைகளில் புதை படிவங்களாகப் பாதுகாக்கப்பட்டன. 

பூமியைத் தோண்டி ஆராய்ச்சிகளை மேற்கொண்டால், அங்கு இயற்கையால் பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கும் விலங்குகளின் புதை படிவங்களைக் காண முடியும்.

இந்தப் புதை படிவங்கள் பூமியின் வரலாற்றையும், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. 

புதை படிவங்களில் உருவான இமயமலை !

இவ்வாறு இமயமலைப் பகுதியைத் தோண்டி ஆராய்ச்சிகள் நடத்திய போது அங்கு கடல் வாழ் விலங்குகளின் புதை படிவங்கள் காணப்பட்டன.

அந்தப் புதை படிவங்களில் காணப்படும் கடல்வாழ் விலங்குகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் வாழ்ந்தவை. 

இந்த அடையாளம் உள்ள பெண்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுவார்களாம் !

எனவே பல கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதி கடலாக இருந்திருக்கும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்தனர். இந்த முடிவை வேறு பல சான்றுகளும் உறுதிப் படுத்துகின்றன.

பிரலய காலங்களில் காற்று, நீர் போன்ற இயற்கை சக்திகளினால் மணல் போன்ற தாதுப் பொருட்கள் அள்ளபட்டு ஓர் இடத்தில் குவிக்கப்படும் இவ்வாறு உருவானதே மலைகள் ஆகும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)