உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிற ஒரே தீர்வு உடற்பயிற்சி தான். முதலில் காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது நல்லது.

ஏன் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?
உங்கள் நாள் ஆரம்பிக்கும் முன் தூங்கி எழுந்து ப்ரஷாக இருக்கும் போது. உடற்பயிற்சி செய்வது புத்துணர்ச்சி கிடைக்கும். அதுவே ஒரு வழக்கமாக இருக்கும் போது நல்ல முறையில் உடல் நிலை இருக்கும்.  

உங்களால் காலையில் எழுந்து கொள்ள முடியாது போனால்.. தாராளமாக மாலையில் உடற்பயிற்சி செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால் ஏற்படும் முதல் மாற்றம் நல்ல பசி ஏற்படும். 

மற்றும் படுத்த உடனே நல்ல உறக்கம் வரும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் கொழுப்பை குறைக்கும். சில பயிற்சி தொடர்ந்து செய்து வந்தால் நல்ல தூக்கத்தை தரும்.  

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவு உடற்பயிற்சி செய்வதால், அமைதியான மனநிலையை உருவாக்கும் 

நியூரோ டிரான்ஸ் மீட்டர் ரசாயனங்களை உற்பத்தி செய்யும் நியூரான் செல்கள் புதிதாக உருவாவதாக சொல்கிறது. 

உடற்பயிற்சிகளின் போது, மூளை உற்பத்தி செய்யும் நரம்புகளை தூண்டும் சில ரசாயனங்கள், வலி மற்றும் மனச்சோர்வு உணர்வை தற்காலிகமாக நிறுத்துவதும் தெரிய வந்துள்ளது. 

மேலும், செரடோனின், டோபாமைன், நார் எபினெப்ரின் போன்ற மன அழுத்தத்தை குறைத்து சாந்தமான மனநிலையையும் மகிழ்ச்சியையும் உண்டாக்கும். 

ஹார்மோன்கள் சுரப்பையும் உடற்பயிற்சி ஊக்கப்படுத்துகிறது. இந்த ரசாயனங்கள், நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கின்றன. 

தவணை முறையில் மனை வாங்குவது சரியா?

உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால், அது ஆண்கள், பெண்கள் இருபாலரிடமும் உடலுறவு செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், ஆர்வத்தையும் அதிகரிக்கிறது. 

தாம்பத்ய உறவில் நாட்டத்தை ஏற்படுத்துவதில் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்குப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் கூட குறையும் என்கிறது ஆராய்ச்சி. 

உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் நன்றாக விரிவடையும். உடலில் சோர்வு நீங்கும், மனதில் உற்சாகம் பிறக்கும். 

தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உள்ளுக்குள் செல்லும் பிராணவாயுவின் அளவு அதிகரிக்கிறது.

உடற்பயிற்சி ஏன் முக்கியமானது?

நோயெதிர்க்கும்.

வலுவாக்க உதவும்.

உற்சாகம் பிறக்கும்.

சேர்ந்து செயல்பட பயிற்சி கிடைக்கும்.

கூர்ந்து கவனமாய் செயல்பட முடியும்.

கிழவன் குமரனாகலாம்.

உடலுறவு கொள்வதில் இன்பம் அதிகமாக உதவும்.

பசி தூக்கம் சிறப்பாக நடைபெறும்.

புதிதாக உடற்பயிற்சி செய்ய தொடங்குபவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்?

ஏன் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

முதலில் நடைப்பயிற்சியில் இருந்து துவங்க வேண்டும். பின்னர் உடற்பயிற்சியே மேற்கொள்ளலாம். மிகவும் சுலபமான உடற்பயிற்சியை முதலில் மேற்கொள்ளலாம்.

ஆரம்பத்தில் அனைத்து பயிற்சியையும் 4 எண்ணிக்கை வரை செய்தால் போதுமானது பின்பு அதன் எண்ணிக்கையை கூட்டிக் கொள்ளலாம். 

கட்டிட கட்டுமானத்தின் போது பணிகளை முறையாகப் மேற்கொள்ள !

ஆரம்பத்தில் செய்யும் போது சில இடங்களில் பிடிப்பு ஏற்படும் பயம் வேண்டாம். உடற்பயிற்சிகள் செய்யும்போது தண்ணீர் குடிக்க வேண்டும். 

ஏனெனில் உடற்பயிற்சிகள் செய்யும் போது உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். 

அதைச் சமன்படுத்த போதுமான அளவில் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். குளிர்ந்த நீர் மட்டும் குடிக்கக் கூடாது. இது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.