அழற்சி என்பது உங்க உடலில் உள்ள தொற்று, காயங்கள் மற்றும் நச்சுக்கள் போன்ற விஷயங்களுக்கு எதிராக செயல்படும் விஷயமாகும். 

அழற்சி என்றால் என்ன? அதற்கான அறிகுறிகள் என்னென்ன?
அதாவது உங்க உடலில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு எதிராக நோயெதிர்ப்பு மண்டலத்தில் இருந்து இராசயனங்கள் தூண்டப்படும். 

இதுவே உங்களுக்கு அழற்சி விளைவை உண்டாக்கும். சிலருக்கு அழற்சி இருப்பதே தெரிவதில்லை. 

இதனால் அந்த அழற்சியே பின்னாளில் நாள்பட்ட அழற்சியாக மாறி விடுகிறது. இப்படி ஏற்படும் நாள்பட்ட அழற்சியை நாம் கவனிக்க வேண்டும். 

மனித உடலிலுள்ள அதிசயங்கள்

இதய நோய், பக்கவாதம், புற்றுநோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற பாதிப்புக்கு கூட நாள்பட்ட அழற்சி தான் முக்கிய காரணமாக அமைகிறது. 

உங்க உடம்பில் ஏற்படும் காயம் காரணமாக அந்தப் பகுதியில் வீக்கம் அதாவது அழற்சி உண்டாகிறது. பிறகு காயம் குணமானதும் வீக்கம் சரியாகி விடுகிறது.

இந்த அழற்சி விளைவுகள் அனைத்தும் செல்லுலார் மட்டத்தில் இருந்து நடைபெறுவதால் அழற்சியானது வெளிப்படையாக தெரிவதில்லை. 

எனவே உங்களுக்கு நாள்பட்ட அழற்சி இருந்தால் அதன் மறைமுக அறிகுறிகளை நீங்கள் கவனமாக கவனிக்க வேண்டும்.

வீக்கம் உண்டாக காரணம் :

அழற்சி என்றால் என்ன? அதற்கான அறிகுறிகள் என்னென்ன?

நோய்க்காரணிகள் தொற்றுவதால் அல்லது திசுக்கள் சேதமடைந்தால் அவ்விடத்தில் உள்ள உயிரணுக்களிலிருந்து புரதங்கள் மற்றும் எதிர்ப்பாற்றலூக்கிகள் வெளிப்படும். 

இது தன்னிச்சையாக தொடங்கி அவசரக்காலத்தில் வேலை செய்வது போல் உடம்பில் நோயெதிர்ப்புக் காரணிகளான இரத்த வெள்ளையணுக்கள், அவ்விடத்தில் சீக்கிரமாக குவிய ஆயத்தமாக்கும். 

அவ்வாறு குவியும் போது இரத்தத்தில் வழக்கமாக உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை விட, தேவையைப் பொறுத்து வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். 

இவ்வாறு ஊக்குவிக்கும் போது அவ்விடத்தில் இரத்த நுண்குழாய் மூலம் குவியும் உயிரணுக்களான வெள்ளையணுக்கள், (இரத்தத்தில் உள்ள உயிரணுக்களில் மிகவும் பெரியவை) 

உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் !

திசுக்களின் அடர்த்தி, இரத்தக் குழல்களின் விரிப்பு ஆகியவற்றையும் சேர்த்து இயங்கச் செய்யும். 

அதுவே நமக்கு வீக்கமாக காட்சியளிக்கும். இதில் தசை சிவப்படைதல், எரிச்சல், வலி மற்றும் சூடு அதிகரித்தல் ஆகியன இணைந்து நிகழும். 

இவ்வாறு ஏற்படும் நோயெதிர்ப்பு செயலே அழற்சி என அழைக்கப்படுகிறது. 

இவ்வாறு குவியும் வெள்ளையணுக்களை நாம் காயம் ஆறியவுடன் வெளிப்படும் வெள்ளைநிற சீழ்களின் வடிவில் காண முடியும். 

இது ஆங்கிலத்தில் லீசன்சு என அறியப்படுகிறது. இவ்வாறு வெளிப்படும் சீழ்களில் நிணநீரும் மிகுந்திருக்கும். 

அழற்சி என்ற எதிர்வினை இல்லாது இருக்குமேயானால் ஓர் உயிரியின் புண்களும் தொற்றுநோய்களும் குணமடையாது திசுக்கள் உயிர் வாழ்வதையே பாதிக்கும். 

ஆனால், நீண்டநாள் அழற்சி பல நோய்களுக்கு வித்தாக அமைகிறது. 

தும்மல், சுரம், தமனித் தடிப்பு, முடக்கு வாதம் போன்றன நீடித்த அழற்சியால் உண்டாவன. ஆகவே உடல் தன்னிடத்தே காண்கின்ற அழற்சியை விரைவில் சரிப்படுத்த விழைகிறது.

அழற்சியை காட்டும் அறிகுறிகள்

அழற்சி என்றால் என்ன? அதற்கான அறிகுறிகள் என்னென்ன?
கடுமையான அழற்சியின் காரணமாக அழற்சி ஏற்படும் இடத்தில் தோன்றும் முக்கியமான ஐந்து அறிகுறிகளாவன:

சிவந்திருத்தல்

வீக்கமடைந்திருத்தல்

சூடாக இருத்தல்

வலி இருத்தல்

தொழிற்பாட்டை இழந்திருத்தல்

ஆரம்பத்தில் முதல் நான்கு அறிகுறிகளுமே செல்சசு (Celsus) என்பவரால் குறிப்பிடப்பட்டிருந்தன. 

அழற்சி ஏற்படும் இடத்திற்கு அதிகளவு குருதி செல்வதால் அவ்விடம் சிவந்து காணப்படுவதுடன், சூடாகவும் இருக்கும். அதிகளவில் திரவம் அவ்விடத்தில் சேர்வதனால் வீக்கம் ஏற்படுகின்றது. 

மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம் !

அவ்விடத்தில் வெளியேற்றப்படும் சில வேதிப் பொருட்கள் நரம்புகளில் ஏற்படுத்தும் தூண்டுதலால் வலி ஏற்படும். பின்னரே ஐந்தாவது அறிகுறி சேர்த்துக் கொள்ளப்பட்டது.

பொதுவாக உடலின் மேற்பரப்பில் ஏற்படும் அழற்சியே இந்த ஐந்து அறிகுறிகளையும் கொண்டிருக்கும். உள்ளுறுப்புக்களில் ஏற்படும் அழற்சிகள் எல்லா அறிகுறிகளையும் கொண்டிருப்பதில்லை.

​சரும வடுக்கள் :

அழற்சி என்றால் என்ன? அதற்கான அறிகுறிகள் என்னென்ன?

தோல் சிவத்தல், கொப்புளங்கள், தோல் வறட்சி மற்றும் நமைச்சல் புடைப்புகள் போன்றவை நாள்பட்ட அழற்சியின் அறிகுறிகளாக இருக்கலாம். 

உங்க ஒவ்வாமையை சமாளிக்க இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம். இதனால் தோல் அழற்சி மற்றும் சொரியாடிக் அழற்சியை நீங்கள் பெற வாய்ப்பு உள்ளது.

​இன்சுலின் எதிர்ப்பு :

அழற்சி என்றால் என்ன? அதற்கான அறிகுறிகள் என்னென்ன?

நாள்பட்ட அழற்சி கார்டிசோல் என்ற ஹார்மோன் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது, இது உடலின் இன்சுலின் பாதிப்புகளை எதிர்க்கும். 

இந்த அழற்சியால் தூண்டப்பட்ட இன்சுலின் எதிர்ப்பு உயர் இரத்த சர்க்கரையை ஏற்படுத்தி டைப் 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

அடுத்த வைரஸ் சீனாவிலிருந்து - இதை எல்லாம் அன்இன்ஸ்டால் செய்யவும் !

டைப் 2 நீரிழிவு அல்லது உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் நீண்டகால ஸ்டெராய்டுகளை எடுத்துக் கொண்டவர்களுக்கு நாள்பட்ட அழற்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

​வயிற்று பிரச்சினைகள் :

அழற்சி என்றால் என்ன? அதற்கான அறிகுறிகள் என்னென்ன?

நாள்பட்ட அழற்சியின் காரணமாக வீக்கம், வயிற்று அசெளகரியம், மலச்சிக்கல் மற்றும் வயிற்று போக்கு போன்ற செரிமான சிக்கல்களை நீங்கள் சந்திக்க வாய்ப்பு உள்ளது. 

வயிற்றில் இரைப்பை புறணி அழற்சியால் மேல் வயிற்று வலி, நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் போன்ற அறிகுறிகளை நீங்கள் சந்திக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

​அதிகப்படியான சளித்தொல்லை :

அழற்சி என்றால் என்ன? அதற்கான அறிகுறிகள் என்னென்ன?

சுவாச மண்டலத்தின் புறணி அமைந்துள்ள எபிடெலியல் செல்களைப் பாதுகாக்க சளி சவ்வுகள் சளியை உருவாக்குவதால் காற்றுப் பாதையில் சளியின் அதிகப்படியான உற்பத்தி நிகழ்கிறது. 

இது குறிப்பாக நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் போன்ற அழற்சி நுரையீரல் நோயை உண்டாக்க வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

நாக்கு வறண்டு போனால் செய்ய வேண்டிய எளிய வைத்தியம் !

ஒவ்வாமை நாசியழற்சி காரணமாக உங்க நாசியில் அதிக சளி ஏற்படலாம், இது ஒரு ஒவ்வாமை காரணிகளான (மகரந்தம் போன்ற துகள்களால்) ஏற்படலாம்.

​சோர்வாக உணர்தல் :

அழற்சி என்றால் என்ன? அதற்கான அறிகுறிகள் என்னென்ன?

நாள்பட்ட அழற்சி காரணமாக நிறைய பெண்கள் சோர்வை சந்திக்கின்றனர். படுக்கையில் படுத்த படியே இருக்க விரும்புகிறார்கள். நாள்பட்ட அழற்சி உடலில் மன அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

மேலும் உங்க நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி எப்பொழுதும் டென்ஷன், சண்டை மற்றும் வாக்கு வாதங்களில் ஈடுபட வழி வகுக்கும். காலப்போக்கில் நீங்கள் மிகுந்த சோர்வை அனுபவிப்பீர்கள். 

அழற்சி குடல் நோய், கல்லீரல் நோய், தடிப்புத் தோல் அழற்சி மற்றும் முடக்கு வாதம் ஆகியவை சோர்வை ஏற்படுத்தும் நாள்பட்ட அழற்சி நோய்கள் உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தக் கூடும்.

​நாள்பட்ட அழற்சி ஏற்படக் காரணங்கள்

அழற்சி என்றால் என்ன? அதற்கான அறிகுறிகள் என்னென்ன?

தொற்று மற்றும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்காமல் இருப்பது. ஆட்டோ இம்பினியூ டிஸ் ஆர்டரால் நோயெதிர்ப்பு செல்களை தாக்கும் போது நாள்பட்ட அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது. 
மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்தவருக்கு கிடைத்த தெரியுமா? 

தொழில்துறை இரசாயனங்கள் அல்லது மாசுபட்ட காற்று போன்ற எரிச்சலூட்டும் விஷயங்கள்

புகைப்பிடித்தல்

உடல் பருமன்

ஆல்கஹால்

நாள்பட்ட அழுத்தம்

​முடிவு

நாள்பட்ட அழற்சி பல கடுமையான நோய்களை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு இருக்கும் நாள்பட்ட அழற்சியை கண்டறிய மருத்துவர் இரத்த பரிசோதனை செய்ய பரிந்துரைப்பார். 

அழற்சி எதிர்ப்பு உணவுகளை எடுத்துக் கொள்வது உங்க அழற்சியை குறைக்க உதவி செய்யும். 

புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை தவிர்ப்பது உடல் பருமனை குறைப்பது போன்றவை நாள்பட்ட அழற்சியை தடுக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.