ஒரு பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?

0

 பாம்பு ஒருவரை கடித்து உடம்பில் விஷம் ஏறி விட்டால் உடல் முழுவதும் நீல நிறமாக மாறி விடும், வாயில் நுரை தள்ளும் என்பதெல்லாம் உண்மையில்லை.

ஒரு பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?
எனவே உடல் நீலமாக மாறவில்லை, வாயில் நுரை தள்ளவில்லை எனவே விஷம் இல்லை என்று முடிவு செய்து கொண்டு வீட்டிலேயே இருந்து விடாதீர்கள். 

பாம்பு கடித்ததற்கான விஷப் பல்லின் அடையாளம் உடலில் இருந்தால் காலதாமதம் செய்யாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

ஒருவரை விஷ பாம்பு தீண்டினால் உடனே அவர் இறந்து போவார் என்பது உண்மையில்லை. ஏனெனில் பல நேரங்களில் பாம்புகள் கடிப்பதோடு நிறுத்தி விடுகின்றன விஷத்தை உடலில் செலுத்துவதில்லை. 

அரசு வேலை இல்லாத சாமானிய மக்களுக்கு கூட அரசு பென்சன் தொகை !

அப்படியே உடலில் விஷம் செலுத்தப் பட்டாலும் கூட சிலவகை பாம்புகளின் விஷம் உயிரை பறிக்க சராசரியாக மூன்று நாட்கள் வரை எடுத்துக் கொள்கின்றன.

விஷத்தினால் ஏற்படும் மரணத்தை விட பயத்தினாலும், அதிர்ச்சியினாலும் தான் அதிக மரணம் நிகழ்வதாக சொல்கிறார்கள். 

எனவே பாதிக்கப் பட்டவருக்கு நாம் முதலில் கொடுக்க வேண்டிய சிகிச்சையே தைரியம் தான்.

எந்த பாம்புக் கடியானாலும் அதை செயலிழக்கச் செய்யக்கூடிய அளவிற்கு மருத்துவமும், அறிவியலும் வளர்ச்சி அடைந்துள்ளதை சுட்டிக்காட்டி அவருக்கு தைரியம் கொடுங்கள்.

பாம்பு தீண்டியவுடன் இதயத்துடிப்பு குறையும். ஏனென்றால் பாம்பு விஷம் உடலில் மிக மெதுவாக பரவ வேண்டும் என்பதற்காக மூளை எடுக்கும் ராஜதந்திர நடவடிக்கை.

ஒரு பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?

ஆனால் நாம் பாம்பு கடிபட்டவருக்கு பயத்தை உண்டாக்கி, இதயத் துடிப்பை வேகமாக்கி விரைவாக விஷம் உடல் முழுக்க பரவ வழி செய்து விடக்கூடாது.

எனவே சம்பத்தப்பட்ட நபரை பரபரப்பில்லாமல் அமைதியாக இருக்கும்படி செய்யவும். அதே வேளையில் பாம்புக் கடித்தவரை எழுந்து நடக்கவிடவும் கூடாது. 

நடப்பதாலும், ஓடுவதாலும் இரத்த ஓட்டம் அதிகரித்து உடல் முழுவதும் விஷம் வேகமாக பரவ வழிவகுத்து விடும்.

எனவே உடம்பில் அதிக அளவில் அசைவை ஏற்படுத்தாமல் அமைதியாக இருக்கும்படி சொல்லுங்கள்.

பாம்பு எந்த இடத்தில் கடித்ததோ அந்த இடத்தின் மேற்பகுதியில் இறுக்கமாக கட்டு போடும் பழக்கம் நம்மிடையே பரவலாக இருக்கிறது. இது ஒரு தவறான பழக்கம்.

இனி நெடுஞ்சாலைகளில் டிராக்... இதுக்கு எவ்வளவு கட்டணமோ தெரில !

ஏனெனில் பாம்பின் விஷம் சதைகளை கூழாக்கும் தன்மை படைத்தது.

கைகளிலோ, கால்களிலோ பாம்பு தீண்டினால் அதன் மேல்பகுதியில் இறுக்கமாகக் கட்டுவதால் பாம்பு விஷம் வேறு எங்கும் செல்ல முடியாமல் மொத்த விஷமும் அந்தப் பகுதியிலேயே தங்கி 

அந்த பகுதி சதைகளை கூழாக்கி நரம்புகளையும் சிதைத்து மீட்கவே முடியாத அளவிற்கு சிக்கலாக்கி கை, கால்களை உடம்பிலிருந்து நிரந்தரமாக எடுக்க வேண்டிய நிலைக்கு கொண்டு சென்று விடும்.

எனவே இரத்த ஓட்டம் தடைப்படும்படி மிக இறுக்கமாக கட்டு போடுவதை தவிர்க்க வேண்டும். பாம்பு கடித்த கடிவாயை கண்டிப்பாக நீரினால் சுத்தம் செய்தல் கூடாது.

பாம்பு கடித்த இடத்தில் விஷத்தை எடுப்பதாக கூறிக் கொண்டு வாய் வைத்து உறிவதை தவிர்க்க வேண்டும். 

ஒரு பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?
இதனால் உங்கள் வாய் வழியாக விஷம் உங்கள் உடலிலும் பரவி உங்களுடைய உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

பாம்பு கடித்த இடத்தில கத்தியால் கீறி விஷத்தை வெளியே எடுக்கிறேன் என்று கத்தியை தீட்ட நீங்கள் ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் 

காலன் உங்கள் ரூபத்தில் வந்து கணக்கை முடிக்க முடிவு செய்து விட்டான் என்று உறுதிப்படுத்தி விடலாம்.

ஏனெனில் பல வகையான பாம்புகளின் விஷங்கள் இரத்தத்தை உறைய விடாமல் நீர்த்துப் போக செய்யும் குணம் கொண்டதாகவே உள்ளது. 

சில வகை பாம்புகளின் விஷம் மட்டுமே இரத்தத்தை உறையச் செய்யும் குணம் கொண்டதாக உள்ளது. 

எந்தவகையான பாம்பு தீண்டியது என்று தெரியாமல் தீண்டிய காயத்தில் கத்தி வைத்து கீறி விட ஆரம்பித்தீர்கள் என்றால் அவ்விடத்தில் இரத்தம் உறையாமல் ஆறு போல் பெருக்கெடுத்தோட ஆரம்பித்து விடும். 

பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை !

அடுத்த 5 நிமிடத்தில் அவர் பரலோகம் பயணித்து விட வேண்டியது தான். பாம்பு கடித்த இடத்தில் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

இன்னொன்றையும் இங்கு கவனத்தில் கொள்ளுங்கள். பாம்பு விஷத்தை நீக்குவதற்கு நாட்டு வைத்திய சிகிச்சைகளோ, 

மூலிகை சிகிச்சைகளோ எந்த விதத்திலும் பயன்தராது என்பதனை தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள்.

பாம்பு விஷத்தை செயலிழக்க செய்யும் திறன் எந்த விதமான மூலிகைகளுக்கும் கிடையாது என்பது மட்டுமல்ல 

அப்படியான அதிசய மூலிகை எதுவும் உலகில் இல்லை என்பதனை தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள். மூலிகை மருத்துவம் மிக அற்புதமான மருத்துவம் தான் மறுப்பதற்கில்லை. 

ஆனால் பாம்புக்கடி என்று வரும்பட்சத்தில் தயவு செய்து மூலிகை சிகிச்சை செய்கிறேன் என்று கூறிக்கொண்டு உயிருக்கு உலை வைத்து விடாதீர்கள்.

பாம்பு கடிகளால் பாதிக்கப் பட்டவருக்கு நீங்கள் உண்மையாகவே உதவி செய்ய விரும்பினால் முதலாவதாக பாதிக்கப் பட்டவருக்கு தைரியம் கொடுங்கள். 

ஒரு பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?

தற்காலங்களில் விஷத்தை நீக்குவதற்கான தடுப்பூசிகள் உள்ளதை எடுத்துரைத்து விஷத்தினால் உயிருக்கு ஆபத்தில்லை என்பதனை புரிய வையுங்கள்.

இரண்டாவதாக கட்டு போடுவது, கீறுவது, நீரினால் கழுவுவது, வாயால் உறிவது, கடிவாயில் சூடு போடுவது இவைகளை தவிருங்கள்.

போர்னை நம்முடைய சுய வாழ்க்கையோடு ஒப்பிடுவது கூடாது !

மூன்றாவதாக விஷத்தினால் பாதிக்கப் பட்டவரை ஓடுவது, வேகமாக நடப்பது இவைகளை நிறுத்த சொல்லுங்கள்.

நான்காவதாக சிறிதும் காலதாமதம் செய்யாமல் அருகிலிருக்கும் அரசாங்க மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)