அழிவின் விளிம்பில் பவளப்பாறைகள்... கடலின் பாதுகாவலன் !

0

உலகம் முழுவதும் பவளப் பாறைகள் அழிவின் விளிம்பில் உள்ளதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டி வருகின்றன. 

அழிவின் விளிம்பில் பவளப்பாறைகள்... கடலின் பாதுகாவலன் !
இவை தான் கடலின் பாதுகாவலனாக உள்ளது, பவளப் பாறைகளில் பாலிப்ஸ் என்ற உயிரினம் காணப்படுகின்றன. 

இந்த உயிரினங்கள் முள்ளந்தண்டு அற்றவை. பாலிப்ஸ் உயிரினம் வாய்வழியாக உணவை உட்கொண்டு, வாய் வழியாகவே அதன் கழிவுகளையும் வெளியேற்றுகின்றன. 

புரோட்டீன் சத்து உணவை கண்டபடி சாப்பிடாதீங்க ! 

இவை உண்பதற்காக மட்டும் தலையை வெளியில் நீட்டி தாவரம், சிறிய விலங்கின நுண்ணுயிரிகளைத் தின்று வாழ்கின்றன. 

பாலிப்ஸ் ஆனது கால்சியம் கார்பனேட்டால் ஆன ஒரு குடுவை போன்ற கூட்டிற்குள் இருக்கும் இந்த உயிரினம் தான் கடல் நீரிலுள்ள சுண்ணாம்பை எடுத்து பவளப் பாறைகளுக்கு கடினத் தன்மையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன.

கடல் நீரிலுள்ள கால்சியம் ஆனது கால்சியம் கார்பனேட் ஆக மாறி கற்பாறைகள் மீது ஒட்டிக் கொள்வதால் பவளப் பாறைகள் உருவாக்கப் படுகின்றன. 

இந்த பாலிப்ஸ் எனப்படுகிற உயிரினம் இறந்து விட்டால் பவளப் பாறைகள் உயிரிழந்து விடும். இதனால் அதன் கூடு கடினமான பொருளால் ஆன பவளப்பாறைத் திட்டுகளாக மாறி விடுகின்றன.

உலகின் அனைத்து சமுத்திரங்களிலும் பவளப் பாறைகள் உருவாவதில்லை. இது உருவாவதற்கு நல்ல சுற்றுச்சூழல் அவசியம். 

கடலில் அரிய வகை உயிரினங்கள் வாழ உதவுவது பவளப்பாறைகள். அதே நேரம் கடல்பகுதியின் தட்பவெப்பத்தைப் பேணுவதிலும் பவளப் பாறைகளுக்கு மிக முக்கிய பங்குண்டு. 

பெண்களே ஈசி ரீசார்ஜ் செய்ரீங்களா?.. உஷாரா இருங்கள் !

சுண்ணாம்புக் கற்களால் ஆனவை என்றாலும், பவளப் பாறைகளும் உயிரினமாகவே கருதப்படுகின்றன.

கடலில் வாழும் ஏனைய நுண்ணுயிரிகளையே உணவாக உட்கொண்டு வளர்வதாலேயே இவற்றை விலங்கு அல்லது தாவரம் என்ற விதிக்குள் அடக்கி யிருக்கிறது விஞ்ஞானம். 

உலகின் 70 சதவீதம் கடலால் சூழப்பட்டிருந்தாலும், ஒரு சில கடல் பகுதிகளிலேயே பவளப்பாறைகள் உருவாகின்றன. கடல் அலை குறைவாக இருக்க வேண்டும். கடலின் வெப்பநிலை- 24 செல்ஷியஸக்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.

ஈரப்பதம் 30 முதல் 35 சதவீதம் இருக்க வேண்டும். கடலின் அடிப்பகுதி வரை சூரிய ஒளி ஊடுருவ வேண்டும். இவற்றின் இருபாலின உறுப்புக்களும் ஒரே உயிரியில் இருப்பதால் இனப்பெருக்கத்திற்கும் உதவியாக இருக்கிறது. 

பாலிப்ஸ் என்ற உயிரி இறந்து விட்டால் பவளப் பாறைகளும் உயிரிழந்து அதன் கூடு கடினமான பொருளால் ஆன பவளப்பாறைத் திட்டுகளாக மாறி விடுகின்றன.

பவளப் பாளைகளை சார்ந்து தான் பலவிதமான கடற்பறவைகள், பாலூட்டிகள், ஒட்டுப்பிராணிகள், முள்தோல் பிராணிகளும் அதிக அளவில் உயிர் வாழ்கின்றன. 

அருமையான ஹனிமூன் செல்ல வேண்டுமா?

மிகப் பெரிய கடல் வளங்களை உள்ளடக்கியதாக இருக்கும் பவளப்பாறைகள் கடல்வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் திகழ்வதுடன், ஆராய்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது.

பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கடலோரப் பகுதிகளை மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவியாக இருக்கிறது. 

அழிவின் விளிம்பில் பவளப்பாறைகள்... கடலின் பாதுகாவலன் !

வளி மண்டலத்தில் கரியமில வாயுவின் அளவைக் குறைத்து சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துகிறது.

தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பது பவளப் பாறைகளைப் பலரும் வெட்டி எடுப்பது, கடலில் வெடி வைத்து மீன் பிடிப்பது போன்ற காரணங்களால் இவை பெரிதும் பாதிக்கின்றன. 

இவை மேலும் பாதிக்கப்படாமல் இருக்கவும், கடல் வளத்தைப் பாதுகாக்கவும் விஞ்ஞானிகள் செயற்கை பவளப் பாறைகளை உருவாக்கி கடலுக்கடியில் வைத்து வருகின்றார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)