நன்றாக பல்லை துலக்கினால் வாய் துர்நாற்றம் போய் விடும் என்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் சுத்தமாக பல் துலக்கினாலும் வாய் துர்நாற்றம் வரும். 

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிமுறை !
காரணம் என்னவென்றால், வாய் துர்நாற்றம் என்பது வாயோடு மட்டுமே தொடர்புடையது அல்ல. வாய் மட்டுமல்ல, வயிற்றில் பிரச்னைகள் இருந்தாலும் வாய்நாற்றம் உண்டாகும். 

10 சதவீதம் பேருக்கு மற்ற உடல் பிரச்னைகளான நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்னைகளால் வாய் துர்நாற்றம் வருகிறது. 

சுவையான கேப்பை இனிப்பு பணியாரம் செய்வது எப்படி?

வயிற்றில் அல்சர் இருப்பவர்களுக்கு வாய் துர்நாற்றம் வீசும் வாய்ப்புகள் அதிகம் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

உணவுப்பழக்கம் தவிர ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கத்தால் மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு இந்த பிரச்னை இருக்கிறது என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அல்சர் என்பது என்ன?
வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிமுறை !
தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக ‘பெப்டிக் அல்சர்’ (Peptic ulcer) என்கிறோம்.

இரைப்பையில் புண் ஏற்பட்டால் ‘கேஸ்ட்ரிக் அல்சர்’ (Gastric ulcer) என்றும், முன் சிறுகுடலில் புண் ஏற்பட்டால் ‘டியோடினல் அல்சர்’ (Duodenal ulcer) என்றும் அழைக்கிறோம்.

இரைப்பையில் உணவு செரிப்பதற்காகச் சுரக்கப்படுகின்ற ஹைட்ரோ குளோரிக் அமிலமும் பெப்சின் எனும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும் போது, 

சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வெளியே வரலாமா?

இரைப்பை, முன் சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம் அழற்சியுற்று வீங்கிச் சிதைவடையும். 

இதை ‘இரைப்பை அழற்சி' (Gastritis) என்கிறோம். இதைக் காலத்தோடு கவனிக்கத் தவறினால், நாளடைவில் இது இரைப்பைப் புண்ணாக மாறிவிடும்.
பொதுவாக பாக்டீரியா தொற்றால் அல்சர் பிரச்னை உருவாகிறது. குறிப்பாக ஹெலிகோபாக்டர் பைலரி (Helicobacter pylori) என்ற பாக்டீரியாவால் வயிற்றுப்புண் உருவாகிறது. 

ஆனால் இந்த பிரச்னையை மருந்து மாத்திரைகள் மூலம் சரி செய்ய முடியும். ஆனால் இந்த பாக்டீரியா மட்டுமே வாய் துர்நாற்றத்துக்கு காரணமாக இருக்க முடியாது. 

ஏனென்றால் ஹெலிகோபாக்டர் பைலரி பாக்டீரியாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ப்ரிவோடெல்லா இன்டர்மீடியா (Prevotella intermedia) என்ற 

மற்றொரு வாய் துர்நாற்றத்தை உருவாக்கக்கூடிய முக்கியமான பாக்டீரியா தொற்றும் இருந்தது அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 

எனவே வாய் துர்நாற்றம் எழும் போது எதனால் என்பதை மருத்துவரிடம் சென்று பரிசோதித்து அதற்கான சிகிச்சை எடுப்பது நல்லது.

நம் உடலை எப்படி அழகாக வைத்துக் கொள்வது தெரியுமா?

இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (Gastroesophageal Reflux Disease) GERD என்று சொல்லப்படுகிற இரைப்பை உணவுக்குழாய் நோயும் வாய் துர்நாற்றத்துக்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். 

வயிற்றிலுள்ள அமிலம் உணவுக்குழாய்க்கு திரும்புவதால், மார்பு மற்றும் தொண்டையில் ஒருவித எரிச்சல் உண்டாவதுடன் வாய் துர்நாற்றத்துக்கும் காரணமாகிறது. 

மேலும் வயிற்றிலுள்ள அமிலம் வாய்க்கு வருவதால் பற்களை அரித்து பலவீனமாக்குகிறது. எனவே மருத்துவரை கட்டாயம் அணுகி அறிவுரை பெறுவது சிறந்தது.

மேலும் உடலிலுள்ள சல்ஃபர் அளவை சோதிக்க sniff test எடுக்க வேண்டும். மேலும் வாய் துர்நாற்றம் வந்தால் பல்சொத்தை அல்லது ஈறுகளில் பிரச்னை இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். 

அதே போல் தினமும் நாக்கை சுத்தம் செய்வதும் அவசியம்.

வாய் துர்நாற்றத்தைக் குறைக்க சில வழிகள்

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிமுறை !

சாப்பிட்டு விட்டு 2 அல்லது 3 மூன்று மணி நேரம் கழித்து தூங்கச் செல்ல வேண்டும். 

ஒரு நாளில் மூன்று வேளை அதிகமாக சாப்பிடுவதற்கு பதிலாக, எளிதில் செரிக்கக்கூடிய வகையில் அதை பல வேளைகளாக பிரித்து சாப்பிடலாம்.

வாய் துர்நாற்றம் போக சூயிங்கம் அல்லது இதற்கென்றே விற்கும் பிரத்யேக மிட்டாய்களை வாங்கி பயன்படுத்தலாம்.

நாணயங்களில் புள்ளி நட்சத்திரக் குறியீடு ஏன்? அரிய தகவல் !

மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கத்தை கைவிடல் சிறந்தது. வெங்காயம், பூண்டு போன்ற உணவுகளை தவிர்க்கலாம்.

நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இது வயிற்றிலுள்ள நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.