சென்னை பறக்கும் ரயிலில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரயிலில் பள்ளி மாணவர்களின் ஆபத்தான பயணம் !

நவீன்ராஜ் என்பவர் தனது தனது சமூக வலைதள பக்கத்தில் பள்ளி மாணவர்கள் சிலர், சென்னை பறக்கும் ரயில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதல் இரவுக்கு சாந்தி முகூர்த்தம் என்ற பெயர் ஏன்? தெரியுமா?

விளையாட்டு போல நினைத்து ரயிலில் ஆபத்தான பயணம் கொள்ளும் மாணவர்களை காவல்துறை காப்பாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த வீடியோவில், ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் போது ஒடிப்போய் ரயில் ஏறி, ஒரு காலை ரயிலில் வைத்துக் கொண்டு 

மறு காலை ரயில் நடைமேடையில் தேய்த்துக் கொண்டே செல்லும் அந்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்று மாணவர்கள் இப்படி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் வீடியோ பார்ப்போரின் மனதை பதை பதைக்க வைக்கிறது. 

மேலும் நடைமேடையில் நிற்கும் மாணவன் ஒருவன், ரயிலில் ஆபத்தான முறையில் சாகச பயணம் செய்யும் மாணவனின் கால்களைத் தட்டி விட முயற்சி செய்யும் காட்சியும் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக ரயில் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சென்னை காவல்துறை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

ஜிம்முக்கு போனால் போதுமா? இந்த உணவுகளையும் சாப்பிடுங்க !

மாணவர்கள் அணிந்திருக்கும் சீருடை வைத்து, அவர்கள் எந்த பள்ளி மாணவர்கள் என அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரயில்வே பாதுகாப்பு படையினரும் இந்த விவகாரம் குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.