உடலை வலிமையாகவும் கவர்ச்சியாகவும் கட்டுக் கோப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது இளைஞர்கள் பலரின் ஆசை, கனவாக இருக்கிறது.
இதற்காகவே உடற்பயிற்சிக் கூடங்களை நோக்கி படையெடுக்கின்றனர். சிலர் நேரம் காலம் பார்க்காமல் வியர்க்க விறுவிறுக்க... கடும் சிரத்தையோடு உடற்பயிற்சி செய்கிறார்கள்.
உடற்பயிற்சிகள் ஒருபுறமிருக்க உடல் வலிமையாக வேண்டுமென்றால், உடல் தசைகள் மேம்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், இங்கே நடப்பதே வேறு.
அதாவது, இயற்கை உணவில் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் நிறைய இருக்க, டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்ட
புரோட்டின் பவுடர், எனர்ஜி ஃபுட் போன்ற செயற்கை ஊட்டச்சத்துகளைத் தான் நம்மில் பலர் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்டு, தசைகளுக்கு வலிமை சேர்க்க, நாம் சாப்பிடும் உணவுகள் வலிமையான தசைகளைப் பெற துணை புரிகின்றது.
விஞ்ஞான முறையில் விஷங்களாக மாறும் பழங்கள் !
அதுவே ஆரோக்கியமானதும் கூட, என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
பெஞ்ச் பிரஸ், ஓவர்ஹெட் பிரஸ் போன்ற சில உடற்பயிற்சிகள் தசைகளை வளமானதாக்க உதவும் உடற்பயிற்சியாக உள்ளது.
நிறைய இளைஞர்களும் கைகளில் வளமான தசைகள் இருக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.
அதற்காக அவர்கள் தினமும் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்கின்றனர். இந்த பயிற்சிகளானது ஒரே நேரத்தில் பல தசைகளின் மேம்பாட்டிற்கு உதவுகின்றன.
ஜிம்முக்குப் பின்னால்
சரியான ஊட்டச்சத்தை பெறாமல் எவ்வளவும் உடற்பயிற்சி செய்தாலும் அது சரியான பலனை அளிக்காது. அதிக தசையை பெறுவதற்கு புரத சத்து அதிகமாக தேவைப்படுகிறது.
ஆனால் கார்போ ஹைட்ரேட்டுகளும் கொழுப்புகளுமே தசைகளுக்கு ஆற்றலை வழங்குகிறது. சில உணவுப் பொருட்கள் கடுமையான பயிற்சியின் மூலம் தசைகளின் வளர்ச்சியை மீட்டெடுக்க உதவுகிறது.
நமது தசை திசுவானது 75 சதவீதம் நீரால் ஆனதால் நீரேற்றம் என்பது தசையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
இரத்தத்தில் பிளாஸ்மா என்றால் என்ன? #Plasma
மேலும் உடலின் தசையை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் உறுப்புகளின் நச்சுத்தன்மையை குறைக்கிறது.
மேலும் இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு மூட்டுகளையும் பாதுக்காக்கும். உங்கள் தசைகளை மேம்படுத்த உதவும் உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
காபி
காபியில் உள்ள காஃபைன் உடனடியாக நரம்பு மண்டலத்தைத் தூண்டி, உடனடி எனர்ஜி கொடுக்கக்கூடிய பானங்களில் ஒன்று.
அதனால் காலையில வொர்க்அவுட்டுக்கு முன்பாக ஸ்டிராங்கான பிளாக் காபி குடிப்பது நல்லது. அது கூடுதலாக உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் தக்க வைத்துக் கொள்ளவும் செய்யும்.
தொடர்ந்து சில மணி நேரங்கள் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்டவர்கள் பிளாக் காபி எடுத்துக் கொள்வது நல்லது.
முட்டை
முழு முட்டையில் அதிகப்பட்ச புரதம் உள்ளது. உடற்பயிற்சிக்கு பின்பு தசைகளை சரிசெய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.
முட்டைகளில் தசைகளை உருவாக்கும் அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளன. அவற்றை உடலால் மட்டுமே தயாரிக்க முடியாது. ஏனெனில் அவை உணவுகளில் மட்டுமே அதிகம் காணப்படுகின்றன.
பெண்கள் ஆபரணம் அணிவதன் சிறப்பு !
ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பி விட்டமின்கள், துத்தநாகம், இரும்பு மற்றும் கால்சியம் மற்றும் முக்கியமான ஊட்டச்சத்துகள் அனைத்தும் முட்டையில் உள்ளன.
ஓட்ஸ்
உடற்பயிற்சிக்கு பின்பு உண்பதற்கு ஓட்ஸ் சிறந்த உணவாகும். இது தசைகளை சரி செய்யவும் ஆரோக்கியமான தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது.
ஒரு கப் ஓட்ஸில் 7 கிராம் புரதம் கிடைக்கிறது. ஓட்ஸ் தானியத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஃபைபர் ஆகியவை அதிகமாக உள்ளது.
காலை நேரத்தில் வெறுமனே புரோட்டீன் ஷேக் போன்றவை மட்டும் போதுமானதாக இருக்காது. அதிலும் வொர்க்அவுட் செய்யும் போது இன்னும் கூடுதலான அளவு எனர்ஜி தேவைப்படும்.
சுவையான கத்திரிக்காய் முள்ளங்கி சூப் செய்வது எப்படி?
அதனால் ஓவர் நைட் ஓட்ஸ் போன்ற நார்ச்சத்தும் புரதமும் இணைந்திருக்கும் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.
குறிப்பாக ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்துவதோடு குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
ஓட்ஸ் உடன் சேர்த்து நிறைய பழங்கள் மற்றும் நட்ஸ், பெர்ரிஸ் ஆகியவை சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
கோழி
கோழியின் மார்பக பகுதியானது தசையின் வளர்ச்சிக்கு உதவும் பிரதான பகுதியாக உள்ளன. இதில் புரதம் உள்ளது. 85 கிராம் கோழியில் 26 கிராம் புரதங்கள் உள்ளன.
அதுவும் குறைந்த அளவு கொழுப்புடன் உள்ளன. கோழி மார்பு பகுதியில் பி விட்டமின்கள், நியாசின் மற்றும் பி6 ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உடற்பயிற்சியின் போது உங்கள் உடல் மேம்பட உதவும்.
கீன்வா
தசையை உருவாக்குவதற்கு புரதம் முக்கியமான அங்கம் என்றாலும் உடலில் உள்ள ஊட்டச்சத்தை எரித்து ஆற்றலை உருவாக்க கார்போ ஹைட்ரேட்கள் அவசியமாக உள்ளது.
பெண்கள் ஆடைகள் விஷயத்தில் இதை தெரிஞ்சுக்கணும் !
ஒரு கப் (185 கிராம்) சமைத்த கீன்வாவில் சுமார் 40 கிராம் கார்ப்ஸும் 8 கிராம் புரதமும் 5 கிராம் ஃபைபரும் உள்ளது. மேலும் இதில் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன.
மீன் எண்ணெய்
மீன் எண்ணெய் அதிகமாக ஓமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளது. இது தசைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
மீன் எண்ணெயில் அழற்சிக்கான எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. அவை தீவிரமான உடற்பயிற்சியின் போது தசை இழப்பை தடுக்க உதவுகின்றன.
மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா 3 வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. மேலும் தசைகளின் மேம்பாட்டிற்கு உதவுவதோடு உடலில் இருந்து கொழுப்பை குறைக்கவும் இது உதவுகிறது.
அன்னாசி பழம்
அன்னாசி பழத்தில் ப்ரோமைலின் உள்ளது. இது உடற்பயிற்சிக்கு பிறகு ஏற்படும் தசை வேதனையை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் இது உடல் புரதத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
இவை தசைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதை தினமும் உங்கள் சிற்றுண்டியுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
கார்போஹைட்ரேட் உணவுகளால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் !
இந்த உணவுகள் உங்கள் தசைகளின் மேம்பாட்டிற்கு உதவும் என நம்புகிறோம். இதுக்குறித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.