ஓட்டத்தில் குதிரையைத் தோற்கடித்த இளைஞர்.. இப்படி எல்லாம் கூட ஓட முடியுமா?

0

இங்கிலாந்தில் நடைபெற்ற குதிரைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான ஓட்டப்பந்தயத்தில் சுமார் 32 கிமீ தூரம் ஓடி, குதிரையைத் தோற்கடித்து வெற்றி வாகைச் சூடியுள்ளார் ரிக்கி லைட்பூட் என்ற தீயணைப்பு வீரர். 

ஓட்டத்தில் குதிரையைத் தோற்கடித்த இளைஞர்.. இப்படி எல்லாம் கூட ஓட முடியுமா?

13 வருடங்களுக்குப் பிறகு இந்தப் போட்டியில் குதிரையை வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் லைட்பூட். அதற்கு பரிசாக இந்திய மதிப்பில் 32 லட்ச ரூபாயைப் பரிசுத்தொகையாக வென்றுள்ளார்.

நமக்குத் தெரியாத பல வினோதமான போட்டிகளும், பந்தயங்களும் உலகம் முழுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. 

வெஜ் குருமாவுடன் சாப்பிட சாஃப்ட் பரோட்டா செய்வது எப்படி?

அவற்றில் ஒன்றுதான், மனிதர்களுக்கும், குதிரைகளுக்கும் இடையேயான ஓட்டப்பந்தயம். பந்தயம் என்றால் ஒன்று ஒரே வகையைச் சேர்ந்த விலங்குகளுக்குள் வைக்க வேண்டும். 

இல்லையென்றால் மனிதர்களுக்குள் வைக்க வேண்டும். இதென்ன வித்தியாசமாக மனிதர்களுக்கும், குதிரைகளுக்கும் இடையே என கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா...

ஓட்டத்தில் குதிரையைத் தோற்கடித்த இளைஞர்.. இப்படி எல்லாம் கூட ஓட முடியுமா?

மனிதன் vs குதிரை (Man vs Horse) என்று அழைக்கப்படும் இப்போட்டி அந்நாட்டில் உள்ள லான்ரிடைய்ட் வெல்ஸ் என்ற நகரில் நடைபெற்றது. 

இதில் 1000 மனிதர்கள் மற்றும் 50 குதிரைகள் பங்குபெற்றன. இந்த ஓட்டப்பந்தயம் கடந்த 1980-ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. 

ஸ்பெஷல் பால் அல்வா செய்வது எப்படி?

கடந்த 44 ஆண்டுகளில் இப்போட்டியில் இதற்கு முன்பு இரண்டு நபர்கள் மட்டுமே குதிரைகளை வென்று முதல் இடத்தைப் பிடித்துள்ளனர். தற்போது மூன்றாவது நபராக லைட்பூட் சரித்திரம் படைத்துள்ளார். 

மலைப்பாங்கான இடங்கள், சிறிய ஓடைகள், கரடு முரடான சாலைகள் என நீளும் 36 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 2 மணி நேரம் 22 நிமிடங்கள் 23 நொடிகளில் கடந்து லைட்பூட் முதலிடத்தைப் பிடித்தார்.

ஓட்டத்தில் குதிரையைத் தோற்கடித்த இளைஞர்.. இப்படி எல்லாம் கூட ஓட முடியுமா?

அடிப்படையில் ஒரு தீயணைப்பு வீரரான அவர் தன் சொந்த ஊரிலிருந்து போட்டி நடக்கும் ஊருக்கு நீண்ட பயணத்தை மேற்கொண்டதாகவும், இதனால்  போட்டிக்கு முன்பு 29 மணி நேரம் தூங்காமலிருந்ததாகவும் தெரிவித்தார்.

தான்  குதிரைகளை ஓடி வென்றதை  தெரிவித்தபோது தன் மனைவி அச்செய்தியை நம்பவில்லை என ரிக்கி லைட்பூட் தெரிவித்துள்ளார். 

தீபாவளி கோதுமை அல்வா செய்வது எப்படி?

மிக அதிக ஸ்டெமினா தேவைப்படும் இந்த ஓட்டப் பந்தயத்தில் போதிய ஓய்வு இல்லாமலேயே வென்ற லைட்பூட் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings