மாணவி ஸ்ரீமதியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது... அமைச்சர்கள் அஞ்சலி !

0

இன்று காலை அவரது உடல்  பெற்றோரிடம்  ஒப்படைக்கப்பட்டு பள்ளிக்கூட பாடப்புத்தகங்களுடன் ஸ்ரீமதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மாணவி ஸ்ரீமதியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது... அமைச்சர்கள் அஞ்சலி !

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த கடலூரை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூன் 12ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இண்டக்சன் ஸ்டவ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஆனால் பள்ளியில் 3 வது மாடியில் இருந்து குதித்து மாணவி, தற்கொலை செய்துக் கொண்டதாக பள்ளி தரப்பில் செய்யப்பட்டது. 

ஆனால் மாணவியின் மரணத்தில் சந்தேக இருப்பதாக கூறி அவரது பெற்றோர், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இரு முறை ஸ்ரீமதியின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று பெற்றோர் உடலை வாங்கினர். 

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான் பெரிய நெசலூருக்கு கொண்டு வரப்பட்டது.

மாணவியின் வீட்டிலிருந்து மயானம் வரை இறுதி ஊர்வலம் நடைபெற்றது. வாகனத்தில் வைத்து மயானத்திற்கு மாணவி உடல் கொண்டு செல்லப்பட்டது. 

அப்போது வாகனத்தின் முன்னும் பின்னும் பெற்றோர், உறவினர்கள், ஊர் மக்கள் ஏராளமானோர் சென்றனர். முதலில் மாணவியின் உடல் தகனம் செய்வதாக இருந்தது. 

திடீரென்று அந்த முடிவு மாற்றப்பட்டு, புதைப்பதற்கான பணிகள் நடைபெற்றது. 

உறவின் போது ஆண்களிடம் இதை சொன்னால் யானை பலம் வந்து விடுமாம் ! 

ஏனெனில் பிரேத பரிசோதனையில் முடிவில் சிக்கல் இருந்தால், மீண்டும் பரிசோதனை செய்யும் வகையில் உறவினர்கள் தரப்பில் புதைக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இறுதி ஊர்வலம் முடிந்து மாணவியின் உடல் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. சுடுக்காட்டில் உள்ளூரை சேர்ந்த ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர். 

முன்னதாகவே  அசம்பாவிதம் நேராமல் இருக்க   பெரிய நெசலூர் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.  

அந்த  கிராமத்தையே முழுவதுமாக  போலீசார் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.   

அவரது வீட்டில் வைக்கப்பட்ட  மாணவியின் உடலுக்கு   பெற்றோர், உறவினர்கள், ஏராளமான மக்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.   

பூமிக்கு பக்கத்துல இப்படி ஒரு கோள் இருக்குன்னு தெரிஞ்சா தலை சுத்தி போயிருவீங்க !

இதனையடுத்து  உயிரிழந்த மாணவி  உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன்   கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார், எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  

மாணவி ஸ்ரீமதியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது... அமைச்சர்கள் அஞ்சலி !

மாணவியின் தந்தை கண்ணீர் மல்க , உடலுக்கு இறுதிச் சடங்கு செய்தார். பின்னர் மாணவியின் ஆத்மா சாந்தியடையும் வகையில் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்பின்னர் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. புதைக்கப்படுவதற்கு முன்னர் ஸ்ரீமதி உடல் மீது உயிரியல் விலங்கியல் புத்தகம் (Zoology, Botany book) வைத்து புதைக்கப்பட்டது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings