கிம் கர்தாஷியன் சாப்பிட்ட உணவின் விலை 46 ஆயிரம்? வைரலாகும் பில் !

0

ஹாலிவுட் மாடலான கிம் கர்தாஷியன் 46 ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிட்ட தன்னுடைய பில்லை சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது.

கிம் கர்தாஷியன் சாப்பிட்ட உணவின் விலை 46 ஆயிரம்? வைரலாகும் பில் !
ஹாலிவுட் நட்சத்திரமான கிம் கர்தாஷியன், தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர். 

ஃபேஷன், மாடல் மற்றும் ரியாலிட்டி டிவி நட்சத்திரம் என வலம் வரும் கிம் கர்தாஷியனின் வாழ்க்கை மிகவும் ஹை-கிளாசான ஒன்று என்று எல்லோருக்கும் தெரியும். 

சமீபத்தில் அவரின் மிக விலை உயர்ந்த ஆடைகள், மெர்லின் மன்றோவின் பிரத்யேக ஆடை மற்றும் 

அவரின் 100 மில்லியன் டாலர் உடல் இன்சூரன்ஸ் என்னும் செய்திகள் அனைத்தும் அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.

உலக அளவில் பிரபல சூப்பர் மாடலாக இருந்து வரும் இவர், அமெரிக்காவின் பில்லியனர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

அழகு சாதன நிறுவனம் ஒன்றையும், உள்ளாடை நிறுவனம் ஒன்றையும் நிர்வகித்து வரும் தொழிலதிபராகவும் உள்ளார். 

டமோன் தாமஸ், க்ரிஸ் ஹம்ஃபிரீஸ் மற்றும் கன்யே வெஸ்ட் ஆகிய மூன்று பேரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற இவர்,

தினமும் சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

தன்னுடைய 4 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும் நான்காவதாக ராப் பாடகர் ஒருவருடன் டேட் செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அதையும் உறுதி செய்துள்ளார். 

மாடலிங் துறையில் இருப்பவர்கள் அதிகம் சாப்பிட மாட்டார்கள். டயட் கடைபிடிப்பார்கள் என கேள்வி பட்டிருப்போம். 

ஆனால் சமீபத்தில் கிம் கர்தாஷியன், தனது நீண்டநாள் நெருங்கிய நண்பரான பீட் டேவிட்சனைச் சந்திக்க ஆஸ்திரேலியா சென்றுள்ளார். 

அங்குப் பிரமாண்ட ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர், காலை உணவைச் சாப்பிட உணவகம் வந்துள்ளார். அங்கு பல வகை சாப்பாடுகளை காலை உணவாக உட்கொண்டுள்ளார். 

அப்போது அவருக்கு உணவு வழங்கிய வெயிட்டர், கிம் கர்தாஷியன் சாப்பிட்ட உணவின் விலைக் கண்டு அதிர்ச்சியடைந்து அதன் பில்லை போட்டோ பிடித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வீட்டுக்கு அருகில் உள்ள மொபைல் டவரில் கதிர்வீச்சு எவ்வளவு? அறிந்து கொள்ள !

இதற்கு 576$ அமெரிக்க டாலர் பில் தொகையாக வந்துள்ளது. இந்திய மதிப்பின் படி 46000 ரூபாய் ஆகும். 

இவருக்கு கொடுக்கப்பட்ட பில் தொகையை பார்த்து இவரே அதிர்ச்சி அடைந்து, சமூக வலைத்தளத்தில் அதனை பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings