தன்னை கடித்த பாம்புடன் 108 ல் சிகிச்சைக்காக சென்ற வீரர் !

0

திருவள்ளுர் மாவட்டம் அயப்பாக்கம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த நல்ல பாம்பை பிடிக்க சென்ற பாம்புபிடி வீரரான கணேசனை அங்கிருந்த நல்ல பாம்பு கடித்தது. 

தன்னை கடித்த பாம்புடன் 108 ல் சிகிச்சைக்காக சென்ற வீரர் !

தன்னை பாம்பு கடித்த நிலையிலும்  பாம்பை பிடித்த அவர் சாக்கு பையில் எடுத்துக் கொண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சேகர் என்பவரின் வீட்டில் பாம்பு இருப்பதை கண்ட சேகர், உடனடியாக வனத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். 

நினைவுகள் யாவும் மூளையில் இருந்து மறக்காமல் இருக்க !

அந்த அழைப்பை எடுத்த முத்து என்கிற வனத்துறை அதிகாரி சேகரின் வீட்டுக்கு சென்று பிடிக்க இருந்த நிலையில் 

பாம்பு புகுந்த தகவலறிந்து அம்பத்தூரில் அனைவராலும் அறியப்படும் பாம்பு பிடி வீரர் கணேசன் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றுள்ளார்.

அங்கு வீட்டின் படிக்கட்டுக்கு பின்புறம் பதுங்கி இருந்த இரண்டரை அடி நீளம் இருந்த நல்ல பாம்பை பிடித்து, சாக்குப்பையில் போடும் பொழுது, அந்த பாம்பு அவரின் கைவிரலில் கடித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து, அதில் ஏறி, அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். 

தன்னை கடித்த பாம்புடன் 108 ல் சிகிச்சைக்காக சென்ற வீரர் !

அப்போது, அவர் பிடித்த நல்ல  பாம்பையும் ஆம்புலன்சிலேயே எடுத்து சென்றார். ஆம்புலன்சில் முதலுதவியாக கணேசனுக்கு ஊசி போடப்பட்டது. 

கருங்கல்லில் சிலை வடிப்பது ஏன்? தெரியுமா? உங்களுக்கு !

இந்நிலையில், பாம்பு கடித்தவுடன், நாகமணி வேர் பொடி உட்கொண்ட தாகவும், அது  சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது எனவும், 

அதை சாப்பிட்டால் பாம்பு விஷம் முறிந்து எந்த பாதிப்பும்  ஏற்படாது எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)