சூட்டெரிக்கும் கோடை வெயிலில் நம்மை பாதுகாக்க கொள்ள சில டிப்ஸ் !

0

என்னா வெயிலு என்னா வெயிலு... ஏசியை 2 பாயிண்ட் கூட்டி வை.. என சொல்லும் அளவுக்கு அப்படியே நெருப்பில் உட்கார்ந்திருப்பது போல் இருக்கிறது. 

சூட்டெரிக்கும் கோடை வெயிலில் நம்மை பாதுகாக்க கொள்ள சில டிப்ஸ் !

கோடை வெயில் என்றாலே மக்கள் பதைபதைக்கும் காலமாக மாறி விட்டது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் வெப்பத் தாக்குதலுக்கு இரையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இருப்பினும் வெயிலில் இருந்து பிழைத்துக் கொள்ள பெரும்பாலானோர் தங்களின் உணவு வழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.

இதனால் குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். என்ன தான் இன்று பெரும்பாலான வீடுகளில் ஏசி வசதி இருந்தாலும் 24 மணி நேரமும் ஏசி போட்டுக் கொண்டிருக்க முடியாது.

உடல் உஷ்ணத்தை நீக்கும் இளநீர் ஆப்பம் செய்வது எப்படி?

இது போல் 24 மணி நேரமும் ஏசியில் இருப்பதால் உடல் வலியும், மின் கட்டணமும் தான் அதிகரிக்கும். நம் உடலுக்கு இயற்கையாக குளிர்ச்சி கிடைக்காது. 

நம் உடலுக்கு இயற்கையிலேயே குளிர்ச்சி கிடைக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தினந்தோறும் பெரியவர்கள் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். அது போல் சிறியவர்கள் என்றால் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அன்றாடம் குடிக்க வேண்டும். 

சூட்டெரிக்கும் கோடை வெயிலில் நம்மை பாதுகாக்க கொள்ள சில டிப்ஸ் !

தண்ணீர் நிறைய குடித்து சிறுநீர் நிறைய கழிக்க வேண்டும். வாரத்தில் 3 நாட்களாவது தலையில் நல்லெண்ணெய் வைத்து தேய்த்து குளிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். 

எங்குச் சென்றாலும் குடிநீர் கையில் வைத்துக் கொள்வது அவசியம். எவ்வளவு தண்ணீர் அருந்துகிறோமோ உடல் நிலை அவ்வளவு சீராக இருக்கும்.

வெயில் காலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் உடலில் இருந்து வியர்வை மூலம் நீர்போக்கு அதிகமாக இருக்கும். அதிகமான நீர்போக்கினால் உடல் சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 

ஆரோக்கியம் தரும் வெள்ளை அரிசி !

மேலும் உடலில் போதுமான நீர் இல்லாமல் போவதால் மயக்கம், அஜீரனம், மற்றும் சரும பிரச்சனைகள் வரக்கூடும். இதைத் தடுக்க நீர் மற்றும் சரியான உணவுகள் அருந்துவது அவசியம்.

உடலுக்கு குளிர்ச்சியை தரும் பொருட்களை கொண்டு சீயக்காய் அரைத்து வைத்துக் கொண்டு அதை பயன்படுத்தலாம்.

எப்போதும் காட்டன் உடைகளையே அணிய வேண்டும். அதிலும் வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும். கருப்பு, டார்க் நிறங்களில் அணிந்தால் வெப்பம் உள்ளே எடுத்துக் கொள்ளும். 

இதனால் மேலும் அனல் அடிக்கும். ஜீன்ஸ், லெக்கின்ஸ் உள்ளிட்ட ஆடைகளை இந்த வெயிலில் தவிர்க்க வேண்டும். நல்ல கதர் ஆடைகளையும் அணியலாம். 

சூட்டெரிக்கும் கோடை வெயிலில் நம்மை பாதுகாக்க கொள்ள சில டிப்ஸ் !

உண்ணும் பொருட்களிலும் கவனம் இருக்க வேண்டும். புளி அதிகம் சேர்த்த கிரேவி குழம்பு வகைகள், காரமான உணவு, புளிப்பு உள்ளிட்டவற்றை அதிகம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். 

அதற்கு பதிலாக ராகி கூழ், கம்பங்கூழ், தயிர் சாதம், மோர் சாதம், மோர் குழம்பு, லெமன், தக்காளி சாதங்களை உண்ணலாம்.

பொதுவாகக் காபி மற்றும் டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். காபி மற்றும் டீ உடல் வெப்பத்தை அதிகரிக்கும் குணங்கள் கொண்டவை எனவே வெப்ப சூட்டை தவிர்த்துக்கொள்ள டீ மற்றும் காபியை தவிர்ப்பது நல்லது.

ஏன் கோடை காலத்தில் லெகிங்ஸ், ஜீன்ஸ் தவிர்க்க வேண்டும்?

காபி, டீக்கு பதிலாக பழ ரசம், நீர் மோர், சர்பத், உள்ளிட்டவைகளை அருந்தலாம். வெயிலில் இருந்து வந்தவுடன் பிரிட்ஜில் வைத்திருக்கும் தண்ணீரை குடித்தால் உடலுக்கு இதமாகத்தான் இருக்கும். 

ஆனால் அது தான் அதிக உஷ்ணத்தை கிளப்பி விடும். எனவே பானையில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடிக்கலாம். அதில் நிறைய சத்துகள் கிடைக்கும். சுடு தண்ணீரை குடிக்கலாம்.

குழந்தைகள், கர்ப்பிணிகள், பெரியவர்களை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை எங்கும் அழைத்து செல்ல வேண்டாம். 

அவசியத் தேவை, மருத்துவ தேவை என்றால் மட்டுமே வெளியே செல்லலாம். இவர்கள் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெயிலுக்கு இதமாக நுங்கு, முலாம் பழம், கிர்னி பழம், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை தினந்தோறும் சேர்த்துக் கொள்ளலாம். 

சூட்டெரிக்கும் கோடை வெயிலில் நம்மை பாதுகாக்க கொள்ள சில டிப்ஸ் !

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை மோருடன் கலந்து உண்ணலாம். அது போல் நீர் சத்து அதிகம் உள்ள காய்கறிகளை சமைக்கலாம். 

அசைவ உணவுகளை வெயில் நேரத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். முகத்தை கழுவ அலோவேரா செடியிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் இயற்கையான ஜெல்லை பயன்படுத்தலாம். 

கேரட், பீட்ரூட், தக்காளி, பப்பாளி ஆகியவற்றை கொண்டு ஃபேஸ்பேக் போடலாம். 

கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்க கண்களில் நல்லெண்ணெய் விட்டுக் கொள்ளலாம். கண்களில் வெள்ளரிக்காய் பில்லையை வைத்து சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்யலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings