இன்றைய பெண்களில் சிலர் இயற்கை முடிகளுடன் செயற்கை முடிகளை சேர்க்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். 

இஸ்லாத்தின் பார்வையில்  ஒட்டு முடி வைத்தல் சரியா?
இதைப் பெரும்பாலும் கலை நிகழ்ச்சி மற்றும் திருமண வைபவத்தில் ஈடுபடும் பெண்களிடமும். வயோதிபத்தின் காரணத்தால் முடிவுதிர்ந்த பெண்களிடமும் காணலாம். 

இதை முஸ்லிம் பெண்கள் காபீரான பெண்களை கண் மூடித்தனமாக பின்பற்றியதன் காரணமாகவும், சுன்னத்தை அறியாததன் காரணமாகவும் செய்து வருகிறார்கள்.

பெரிய சோம்பேறி யார்? தெரியுமா?

இது பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்று நோக்கும் போது அஸ்மா பின்த் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக நபியவர்களைத் தொட்டும் முஸ்லீமில் பதிவாகியுள்ள ஹதீஸ் விளக்குகிறது. 

ஒரு சமயம் ஒரு பெண் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நிச்சயமாக எனக்கு மணம் முடிக்கப்போகும் ஒரு மகள் இருக்கின்றாள். 

அவளுக்கு சிரங்கு நோய் ஏற்பட்டு அவளின் தலைமுடி உதிர்ந்து விட்டது. எனவே, அவளிற்கு நான் பொய்முடி சேர்க்கவா? எனக்கேட்டாள். 

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் ஒட்டு முடி சேர்ப்பவனையும், சேர்க்குமாறு வேண்டுபவரையும் சபிக்கிறான்" என்று பதிலளித்தார்கள்.

எள்ளு போச்சு... எண்ணெய் வந்தது சிறுகதை !

எனவே, ஒரு பெண் தன் அலங்காரத்தை மெருகூட்ட தற்காலிய அலங்காரமான ஒட்டுமுடி சேர்த்தலை இஸ்லாம் வண்மையாக கண்டிக்கின்றது என்பது தெளிவாகின்றது. 

இவ்வாறே ஒரு பெண் தன்னை அலங்கரிப்பதில் இஸ்லாத்தின் வரையறைக்கு அப்பாற்பட்ட முறைகளையும் அதன் தீர்ப்புக்களையும் பார்ப்போம். 

நாகரீகம் என்ற பெயரில் அனாச்சாரங்களும், கலாச்சாரச் சீரழிவுகளும், அலங்கரிக்கப்பட்டு மார்க்கத்தில் ஹராமாக்கப் பட்டவைகளும் 

அலங்காரமென மெருகூட்டப்பட்டு அவையனைத்தும் மார்க்கம் என்ற பெயரில் மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளது. 

இதைப் பின்பற்றுவதில் முஸ்லிம் சமுதாயப் பெண்களும் விதிவிலக்கல்ல. 

ஓவ்வொரு பெண்னும் தன் சமுகத்தில் அவளுடைய திறமை, ஆளுமை போன்றவற்றைக் கொண்டு தான் ஈர்க்கப்பட வேண்டும் என்று 

ஆசைப்படுவது போல் அவளுடைய அழகை கொண்டும் ஈர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றாள். 

ஒரு ஷாக் மரணம்.. சொல்லும் பாடம் !

இவ்வாறு மிதமிஞ்சி ஆசைப்படக் கூடிய பெண்கள் தன் அழகை மெருகூட்டுவதற்காக இறைவனின் வரையறைகளுக்கு அப்பாற்பட்ட முறைகளையும் நடைமுறைப்படுத்தத் துணிகின்றாள். 

இந்த விடயத்துடன் தொடர்பான இன்னும் சில விடயங்களையும் உற்று நோக்குவோம்.