சிலருக்கு கை அல்லது காலில் ஆறாவதாக சிறு விரல் ஒன்று வளர்ந்து இருப்பதை நம் நமது அன்றாட வாழ்வில் கண்டிருப்போம். இது சிலருக்கு மட்டும் எதனால் ஏற்படுகிறது. 

ஆறு விரலை தனி அடையாளமாக கொண்ட ஹரியானா குடும்பம் !

இது ஏதாவது நோயின் அறிகுறியா போன்ற சந்தேகங்கள் பலருக்கு எழும். இதற்கான விடையைக் காண்போம்.

பாலிடாக்டலி (Polydactyly) என்றால் கை அல்லது காலில் ஐந்துக்கும் மேற்பட்ட விரல்கள் முளைக்கும் குறைபாடு. பெரும்பாலும் இந்த குறைபாடு தாய், தந்தையின் மரபணுக்கள் மூலமாகவே பிறக்கும் குழந்தைக்கு உண்டாகும். 

வலது கையில் ஆறு விரல் இருந்தால் சுகமான வாழ்க்கை உடையவர்கள் என்றும். இடது கையில் ஆறு விரல் இருந்தால் போராட்ட குணம் அதிகம் உடையவர்கள் என்றும் பலன் கூறப்படுகிறது.

இது குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கும் பெரிய குறைபாடு இல்லை என்ற போதிலும் ஆறாவது விரல் குழந்தைகளின் விரல் அமைப்பில் இருந்து வித்யாசமாகத் தெரியும்.

டவுன் சிண்ட்ரோம் உள்ளிட்ட பிறவி மனநல மற்றும் உடல்நல குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் பாலிடாக்டலி தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது.

புரோஸ்டேட் சுரப்பி என்பது என்ன?

பெரும்பாலும் கட்டைவிரலை ஒட்டியே ஆறாவது விரல் வளரும். சிலருக்கு ஆறாம் விரல் முழுவதுமான வளர்ந்து இருக்கும். இதனை மற்ற விரல்கள் போல அவர்களால் மடக்கி நிமிர்த்த முடியும். 

சமயத்தில் இந்த விரல் அவர்கள் செய்யும் அன்றாட பணிக்கும் பயன்படும். சிலருக்கு ஆறாம் விரல் பாதி வளர்ந்து இருக்கும். இந்த விரலை மற்ற விரல்கள் போல அவர்களால் இயக்க இயலாது. 

ஆறாவதாக சிறு விரல்... சிலருக்கு மட்டும் எதனால் ஏற்படுகிறது !

மேலும் சிலருக்கு மிகச் சிறிய எலும்பு வளர்ச்சி அற்ற ஆறாம் விரல் இருக்கும். சிறு சதை வளர்ச்சிபோல காணப்படும் இது அடுத்தவர்கள் கவனத்தை ஈர்க்காத அளவுக்கு சிறிதாக இருக்கும்.

பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் (48) பாலிடாக்டலி எனப்படும் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இவருக்கு வலது கையில் ஆறு விரல்கள் உண்டு.

மஷ்ரூம் மசாலா தோசை செய்வது எப்படி?

இவரது ஆறாவது விரல் கட்டை விரலோடு ஒட்டி உள்பக்கம் மடிந்து இருக்கும். ஆனால் இது அவரது திரை வாழ்க்கையை பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.