தவறுதலாக வருட சம்பளத்தை வழங்கிய நிறுவனம்... எஸ்கேப்பான ஊழியர் !





தவறுதலாக வருட சம்பளத்தை வழங்கிய நிறுவனம்... எஸ்கேப்பான ஊழியர் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

சிலி நாட்டைத் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்களுக்கு வழக்கம் போல் வங்கியின் வழியாக சம்பள பணத்தை வழங்கியுள்ளது.

தவறுதலாக  வருட சம்பளத்தை வழங்கிய நிறுவனம்... எஸ்கேப்பான ஊழியர் !

சில நேரங்களில் ஒரு மாதச் சம்பளத்துக்கு இரண்டு மாதச் சம்பளம், மூன்று மாதச் சம்பளம் எனத் தவறுதலாக நிறுவனம் செலுத்தி விடும். 

ஊழியர்களும் விவரம் தெரிந்ததும் அல்லது நிறுவனம் விளக்கம் அளித்துக் கேட்கும் போது அதை நிறுவனத்திடம் மீண்டும் ஒப்படைத்து விடுவார்கள். 

சில நேரங்களில் குறைவான சம்பளம் வருவதும் நடக்கும். ஆனால் சிலி நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தன் ஊழியர் ஒருவருக்கு 286 மாதச் சம்பளத்தைத் தவறுதலாக ஒரே தவணையாகச் செலுத்தியிருக்கிறது. 

வெற்றி பெற தேவையான ஆளுமைத் திறன் !

அந்த ஊழியருக்கு மாதச் சம்பளம் இந்திய மதிப்பின்படி ரூ.40,000. அவரின் வங்கிக் கணக்குக்குத் தவறுதலாக அந்த நிறுவனம் செலுத்திய தொகை 1.42 கோடி ரூபாய். 

நடந்த தவற்றை உணர்ந்த அந்த நிறுவனம் உடனே அந்த ஊழியரைத் தொடர்புகொண்டு கூறியிருக்கிறது. 

உடனே அந்த ஊழியரும் இதோ வங்கிக்குச் சென்று பணத்தைத் திருப்பி அனுப்பிவிடுகிறேன் எனக் கூறியிருக்கிறார்.

நிறுவனமும் அவர்களது பணம் வந்துவிடும் என்று காத்திருந்தது. ஆனால், அவர்களுக்கு வங்கியிலிருந்து பணம் வருவதற்கான குறுஞ்செய்திகளும் வரவில்லை. 

பணம் எடுக்கச் சென்றவரும் வரவில்லை. அவரைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அந்த நபர் பதிலளிக்கவில்லை. 

சில மணி நேரம் கழித்து அந்த நபர் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, தான் உறங்கி விட்டதாகவும், இனிமேல் தான் வங்கிக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

எக்மோ (ECMO) என்றால் என்ன? படியுங்கள் !

ஆனால், கடந்த ஜூன் 2-ம் தேதி, தான் வேலையை ராஜினாமா செய்வதாகக் கூறி விட்டு, நிறுவனம் தவறுதலாகக் கொடுத்த சம்பளத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டாராம். 

தற்போது அவர்மீது வழக்கு பதிவுசெய்து போலீஸ் மூலம் தேடிவருகிறதாம் அந்த நிறுவனம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)