வெற்றி பெற தேவையான ஆளுமைத்திறன் !





வெற்றி பெற தேவையான ஆளுமைத்திறன் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
ஆளுமைத்திறன் கொண்டவர்களால் தான் மற்றவர்களை எளிதாக கவர முடியும். செயல்பாடு, நடத்தை, குணாதிசயங்களையும் வைத்து தான் அவரது ஆளுமை மதிப்பீடு செய்யப்படுகிறது.
வெற்றி பெற தேவையான ஆளுமைத்திறன் !
நாகரிகமாக உடை உடுத்துவதையும், அலங்காரம் செய்து கொள்வதையும் வைத்து மட்டுமே ஒருவருடைய ஆளுமை தீர்மானிக்கப் படுவதில்லை. 

செயல்பாடு, நடத்தை, குணாதிசயங்களையும் வைத்து தான் அவரது ஆளுமை மதிப்பீடு செய்யப்படுகிறது. 

மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றுகிறவர்கள், அலுவலக பணிகளில் இருப்பவர்கள், புதிதாக வேலைக்கு முயற்சிப்பவர்கள் அனைவருமே தங்கள் ஆளுமைத் திறனில் அதிக கவனம் செலுத்த வேண்டிய திருக்கிறது.
ஆளுமைத் திறன் கொண்டவர்களால் தான் மற்றவர்களை எளிதாக கவரமுடியும். ஈடுபட்ட துறையில் சாதிக்கவும் முடியும். 

இப்படி ஒவ்வொருவரிடமும் இருக்கும் ஆளுமைத்திறனை மேம்படுத்துவதற்காக, இமேஜ் கன்சல்டென்ட் என்ற துறை வழி காட்டுகிறது.

நடை, உடை, பாவனைகளில் எத்தகைய மாற்றங்களை செய்ய வேண்டும் மற்றவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் 

என்பவைகளை பற்றி எல்லாம் அந்தந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.
ஒருவரை சந்திக்கும் போது நமது தோற்றம் மட்டுமல்ல, நாம் நடந்து கொள்ளும் விதமும் தான் நம்மைப் பற்றிய இமேஜை அவரிடம் உருவாக்கும். 

நல்ல படிப்பும், அனுபவமும் மட்டுமே எல்லா நேரங்களிலும் நன்மதிப்பை பெற்றுத் தந்து விடுவதில்லை. 

அதற்கு மேலும் காலத்துக்கு தக்கபடி புதிய விஷயங்கள் தேவைப்படுகிறது. அவைகளை இமேஜ் கன்சல்டென்ட் துறை வழங்குகிறது. 

ஒருவரை சந்திக்கும் போது கை குலுக்கி அறிமுகப் படுத்திக் கொள்ளும் முறை, வாழ்த்து, பாராட்டு தெரிவிக்கும் விதம், பேசும் விதம், தொலைபேசியில் உரையாடும் விதம், 

தகவல் பரிமாறும் முறை, நடை பாவனை, உடை அலங்காரம் என கவனிக்க வேண்டிய விஷயங்களை எல்லாம் இமேஜ் கன்சல்டென்ட் துறை கற்றுத்தருகிறது. 
இந்த துறையில் தேர்ச்சி பெற்றவர்கள், ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே ஓரளவாவது அவரது குணாதிசயங்களை கண்டறிந்து விடுவார்கள்.
பொது மக்களோடு நெருங்கிப் பழகும் துறைகளில் இருப்பவர்களுக்கு இமேஜ் கன்சல்டென்ட் வழிகாட்டும். அதன் மூலம் மற்றவர்கள் மத்தியில் அவர்கள் தங்களுடைய இமேஜை உயர்த்திக் கொள்ளலாம். 
மேலை நாடுகளில் பரவலாக நடைமுறையில் இருக்கும் இந்த துறை பற்றிய விழிப்புணர்வு இப்பொழுது இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)