இதைச் சாப்பிடுவதால் வேகமாக பரவுது காலரா தொற்று... உஷார் !

0

உணவு ப்ரியர்களே... சிக்கன் ஷவர்மா, சிக்கன் பக்கோடா, பிரியாணியில் கரப்பான்பூச்சி என உயிரைப் பணயம் வைக்கும் உணவு பொருட்கள் எல்லா இடங்களிலும் விரவி கிடக்கிறது. 

இதைச் சாப்பிடுவதால் வேகமாக பரவுது காலரா தொற்று... உஷார் !

சுகாதாரத் துறையினர் இவற்றின் தரத்தை ஆய்வு செய்தாலும் பணம் படைத்தவர்கள் வாழும் உலகில் குணத்தை எதிர்பார்க்க முடியாது. 

அடுத்த வாரமே திரும்பவும் கலப்படமும், கெட்டுப் போன உணவு பொருட்களும் வியாபித்திருக்கும் பாஸ்ட்புட் காலத்தில் வாழ்கிறோம் நாம். மழை காலங்கள் துவங்கி விட்டது.  

பானிபூரி சாப்பிடுவது என்றால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பிடித்தமான விஷயம். 

அதில் சேர்க்கப்படும் ரசம் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட உபபொருட்களை சேர்த்து பூரியை வாயில் போட்டு சுவைத்தால் எப்படி இருக்கும் என்று அனுபவித்தால் தான் தெரியும். 

கிட்டத்தட்ட 99 சதவீதம் பேர் பானிபூரி என்றால் உயிரையே விடும் அளவிற்குதான் உள்ளனர். ஆனால், பானிபூரி சாப்பிட்டு நாம் உயிரை விட வேண்டுமா என முடிவு செய்து கொள்ளுங்க.

பானிபூரிகளை விற்பனை செய்ய நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்குப் பகுதியில் மாநகராட்சி தடை விதித்துள்ளது. 

கடந்த சில நாட்களாகவே நேபாளம் தலைநகரம் காத்மண்டுவில் காலரா தொற்று அதிகரித்துள்ளது. மேலும் நோயாளிகள் அதிகளவில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மூல நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள உடற்பயிற்சி அவசியமா?

இந்நிலையில் காலரா பரவலுக்கு காரணம் பானிபூரியில் பயன்படுத்தப்படும் சுகாதாரமற்ற நீர்தான் என்று லலித்பூர் மெட்ரோபாலிடன் சிட்டி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. 

இதைத் தொடர்ந்து கூட்டத்தின் முடிவில், கடந்த சனிக்கிழமை பானி பூரியில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பதாக முடிவு செய்து, 

பானி பூரி விற்பனை மற்றும் விநியோகத்தை நிறுத்துவது என லலித்பூர் மெட்ரோபாலிடன் சிட்டி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு குறித்து மாநகர காவல்துறை தலைவர் கூறும் போது, காத்மண்டு பள்ளத்தாக்கு பகுதியில் காலரா தொற்று அதிகரித்து வருவதால் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இதற்கு காரணம் கூட்டம், கூட்டமாக மக்கள் பானிபூரி வாங்கி சாப்பிடுவதுதான். அதில் பயன்படுத்தப்படும் சுகாதாரமற்ற நீரின் மூலம் காலரா பரவி வருகிறது. 

சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி?

எனவே காத்மண்டு பள்ளத்தாக்கில் பானிபூரி விற்பனைக்கும், வினியோகத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் அவர் கூறும்போது, காலரா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பானிபூரி பிரியர்கள் இந்த தடை உத்தரவால் கவலை அடைந்துள்ளனர். 

இதற்கான தடை எப்போது விலகும் என்று பானிபூரி வியாபாரிகளும், வினியோகிப்பவர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

இதைச் சாப்பிடுவதால் வேகமாக பரவுது காலரா தொற்று... உஷார் !

இது ஏதோ நேபாளத்தில் நடக்கிறது என்று மெத்தனமாக இருக்காதீங்க. நம்ம ஊர்லேயும் 99.9 சதவிகிதம் பானிபூரி விற்பவர்கள் சுகாதாரமாக எல்லாம் விற்கவில்லை. 

நான் பெரிய உணவகஙகளில் தான் பானிபூரி சாப்பிடுகிறேன் என நீங்கள் ஆறுதலடைந்து கொள்ளலாம். 

செயற்கைச் சிறுநீரகம்... தெரியுமா? உங்களுக்கு !

ஆனால், அங்கும் சுத்தமும், சுகாதாரமும் நிச்சயமாக பானிபூரி விஷயத்தில் கிடையாது. ஆகவே இந்த மழைக்காலங்களில் மட்டுமாவது பானிபூரி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்க.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)