காங்ட்ரீட் இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கே.வினோத் கண்ணன். 

காங்கிரீட் இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு !
இவர் தனது மனைவி, மகள், தந்தை ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வினோத் கண்ணன், வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கான PVC கதவுகள் தயாரிக்கும் பணி செய்து வருகிறார்.

இந்நிலையில், சம்பவதன்று இரவு வீட்டின் ஹாலில் தூங்கிகொண்டு இருந்துள்ளார். அப்போது அவர் மீது வீட்டின் காங்கிரீட் கூரை இடிந்து விழுந்தது. 

நரம்பு தளர்ச்சி குணமடைய வைட்டமின் பி12 !

இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல் துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.